என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 14-ந்தேதி வைகுண்ட துவாதசி விழா நடக்கிறது. இந்த விழா வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி, 14-ந்தேதி துவாதசி விழா நடக்கிறது. அதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பூஜைகள், அலங்காரம், ஆராதனை நடக்கிறது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 14-ந்தேதி வைகுண்ட துவாதசி விழா நடக்கிறது. இந்த விழா வருகிற 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் சென்று தரிசனம் செய்யலாம்.
13-ந்தேதி அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. முக்கிய வி.ஐ.பி. பக்தர்களுக்கு பிரேக் தரிசனம், இலவச தரிசனம், ஸ்ரீவாணி டிரஸ்ட்டுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசனங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் திருப்பதியைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஒமைக்ரான் வைரஸ் பரவுவதால் திருப்பதியில் உள்ள உள்ளூர் மக்களுக்கு மட்டும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 10 நாட்களுக்கு ஒருமுறை இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும்.
திருமலையில் பக்தர்கள் தங்குவதற்கு 7,500-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இவற்றில் 1300-க்கும் மேற்பட்ட அறைகள் சீரமைக்கப்படுகின்றன. இதனால் திருப்பதியில் அறைகள் வாங்கி தங்கி திருமலைக்கு வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.
வைகுண்ட ஏகாதசி அன்று காலை நான்கு மாடவீதிகளில் தங்கத்தேரோட்டம் நடக்கிறது. துவாதசி அன்று காலை 5 மணியில் இருந்து காலை 6 மணி வரை சக்கர ஸ்நானம் நடக்கிறது. லட்டு வினியோக வளாகத்தில் செயல்பட்டு வரும் 31 கவுண்ட்டர்களுக்கு பதிலாக 41 கவுண்ட்டர்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்படும். அங்கு 6 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்னப்பிரசாதம், கல்யாண கட்டா, மருத்துவம், சுகாதாரம் ஆகிய துறைகளில் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைத்துத் துறைகளிலும் உள்ள ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பக்தர்களுக்கு சேவையாற்றுவதுடன், திருமலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு போலீசாருடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
ஓமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு முன்பாகவே 48 மணி நேரத்துக்கு முன் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா தொற்று இல்லை என்ற ஆர்.டி.பி.சி.ஆர்.பரிசோதனை சான்றிதழை கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பக்தர்கள் சரியாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் இவர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்றது. முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவது குறித்து திருவண்ணாமலை நகரில் கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர் கோவில் எதிரே மாட வீதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் முருகேஷ் கூறுகையில், இன்று (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை சாமி மாட வீதிஉலா பக்தர்கள் இன்றி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும். 15-ந் தேதி (சனிக்கிழமை) திருவூடல் நிகழ்ச்சி கோவில் வளாகத்திலேயே நடைபெறும்.
மேலும் இன்று (திங்கட்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். சாமி தரிசனம் செய்ய வருகை தருபவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியதற்கான சான்று அல்லது செல்போனில் பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்தால் மட்டுமே கோவில் வளாக்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்...வினை தீர்க்கும் விநாயகருக்கு உகந்த விரதங்கள்

கார்த்திகை தேய்பிறை பிரதமை திதி முதல் மார்கழி வளர்பிறை சஷ்டி வரை 21 நாட்கள் அனுஷ்டிக்கும் இந்த விரதத்தால் ‘தைரியம்’ அதிகரிக்கும். இந்த விரதத்தை ‘பிள்ளையார் நோன்பு’ என்பர்.
சதுர்த்தி விரதம்
ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் துவங்கி அடுத்த ஆண்டு புரட்டாசி சதுர்த்தி வரை ஒரு ஆண்டிற்கு தொடர்ந்து அனுஷ்டிப்பது சதுர்த்தி விரதம். இதனால் செய்யும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
வெள்ளிக்கிழமை விரதம்
வைகாசி வளர்பிறை வெள்ளிக்கிழமை துவங்கி, தொடர்ந்து 52 வெள்ளிக்கிழமைகளில் அனுஷ்டிக்கும் விரதம். இந்த விரதத்தால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.
சங்கடஹர சதுர்த்தி விரதம்
மாசி மாத தேய்பிறை சதுர்த்தி துவங்கி, ஒரு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாத தேய்பிறை சதுர்த்தியிலும் விரதம் இருப்பது. இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தினால் எப்படிப்பட்ட துன்பமும் விலகிவிடும்.
குமார சஷ்டி விரதம்

செவ்வாய் விரதம்
தை அல்லது ஆடி முதல் செவ்வாய் தொடங்கி, தொடர்ந்து 52 வாரங்கள் அனுஷ்டிக்கும் விரதம் ‘செவ்வாய் விரதம்.’ இந்த விரதத்தால் செல்வ வளம் பெருகும். இந்த விரதம் மேற்கொள்ளும் பெண்களுக்கு வசதியில்லாத நாட்களாக அமையுமானால் பின்வரும் வாரங்களில் கூட்டிக் கொள்ளலாம்.
தை வெள்ளி விரதம்
விநாயகரைக் குறித்து தை மாத வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் மட்டும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம். இதனால் செல்வ விருத்தியும், கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியமும் கிடைக்கும்.

நாகர்கோவிலில் புகழ்பெற்ற நாகராஜா கோவில் உள்ளது. இங்கு தை திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.
நாகர்கோவிலில் புகழ்பெற்ற நாகராஜா கோவில் உள்ளது. இங்கு தை திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு கொடியேற்றம், 6.30 மணிக்கு கலையரங்கத்தில் திருவிளக்கு ஏற்றுதல், 6.45 மணிக்கு கடவுள் வாழ்த்து, இரவு 8 மணிக்கு பரத நாட்டியம், 8.30 மணிக்கு புஷ்ப விமானத்தில் சாமி எழுந்தருளல் போன்றவை நடக்கிறது.
11-ந் தேதி காலை 7 மணிக்கு புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல், சிறப்பு அபிஷேக பூஜை, மாலை 5.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு மண்டகப்படி, 8 மணிக்கு சொல்லரங்கம், 12-ந் தேதி காலை 7 மணிக்கு புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், மாலை 5.45 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, 6 மணிக்கு கொம்மண்டை அம்மன் சாமி எழுந்தருளல், இரவு 7.50 மணிக்கு பரதநாட்டியம் ஆகியவை நடக்கிறது.
13-ந் தேதி காலை 7 மணிக்கு சிங்க வாகனத்தில் சாமி எழுந்தருளல், மாலை 6.30 மணிக்கு இன்னிசை கச்சேரி, இரவு 8.30 மணிக்கு இசை சொல்லரங்கம், 9 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 14-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 5.30 மணிக்கு நாகராஜா சன்னதி சிறப்பு அபிஷேகம், மாலை 5.30 மணிக்கு சொற்பொழிவு, 6.20 மணிக்கு பக்தி இன்னிசை ஆகியவை நடைபெறும்.
15-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு ஆதிசேஷ வாகனத்தில் சாமி எழுந்தருளல், மாலை 6.30 மணிக்கு பக்தி பஜனை, 6.30 மணிக்கு மண்டகப்படி, இரவு 8 மணிக்கு பரதநாட்டியம், 9 மணிக்கு யானை வாகனத்தில் சாமி எழுந்தருளல், 16-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு பல்லக்கில் சாமி எழுந்தருளல், மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி, இரவு 9 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி எழுந்தருளல் போன்றவை நடக்கிறது.17-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு நாகராஜா சன்னதி சிறப்பு அபிஷேகம், மாலை 6.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, இரவு 9.30 மணிக்கு அன்ன வாகனத்தில் சாமி எழுந்தருளல் ஆகியவை நடைெபறும்.
18-ந் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம், மாலை 5.30 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு மண்டகப்படி, 9.30 மணிக்கு சப்தாவர்ணம் ஆகியவை நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 19-ந் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு ஆராட்டு, ஆன்மிக சொற்பொழிவு, இரவு 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி கோவிலுக்கு எழுந்தருளல் போன்றவை நடைபெறும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக கொடியேற்றத்தை காண முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இந்த ஆண்டு தை மாத தெப்பத்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரம் பகுதியில் திருவிழாவிற்கான யாகசாலை பூஜை நேற்று காலை 8.30 மணியில் இருந்து நடந்தது.
அப்போது அங்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் காலை 10.15 மணிக்கு கும்ப லக்கனத்தில் காப்பு கட்டிய ரமேஷ் பட்டர் திருவிழாவிற்கான கொடியை ஏற்றினார். பின்னர் கொடிமரத்திற்கும், சுவாமி-அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.
இந்தநிலையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. எனவே நேற்று காலை பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வில்லை. இதனால் பக்தர்கள் கொடியேற்றத்தை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். கோவிலுக்கு வெளியே நின்று தரிசித்து சென்றனர். வெளியூர் பக்தர்களும் கோபுரத்தை தரிசனம் செய்து சென்றனர்.
விழா நடைபெறும் 12 நாட்களும் காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவிலுக்குள் உள்ள ஆடி வீதியில் வலம் வருவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் வருகிற 12-ந் தேதி சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 14-ந் தேதி வலை வீசி அருளிய லீலையும் நடை பெறுகிறது. தெப்பத்திருவிழாவிற்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி வருகிற 16-ந் தேதி நடக்கிறது. அதை தொடர்ந்து 17-ந் தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா காமராஜர் சாலையில் உள்ள தெப்பக் குளத்தில் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியும் அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர்.
அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலை 10.40 மணி முதல் 11.04 மணிக்குள் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் சுவாமி-அம்மன் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும், 2022-ம் ஆண்டின் முதல் திருவிழாவான தை தெப்பத்திருவிழாவில் சுவாமி-அம்மன் தெப்பத்தை வலம் வரும் நிகழ்ச்சியை வழக்கம்போல் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.

கும்பகோணம் நகரில் நாகேஸ்வரன் கோவில் தெற்கு வீதியில் பகவத் விநாயகர் கோயிலுக்கு சற்று முன்பாக படைவெட்டி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
சுவாமி : படைவெட்டி மாரியம்மன்.
கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் கோவில் கும்பகோணத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் ஒன்றாகும். கும்பகோணம் நகரில் நாகேஸ்வரன் கோவில் தெற்கு வீதியில் பகவத் விநாயகர் கோயிலுக்கு சற்று முன்பாக படைவெட்டி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலின் மூலவராக படைவெட்டி மாரியம்மன் உள்ளார். இக்கோவிலின் திருச்சுற்றில் தென்பாகத்தில் பத்ரகாளியம்மன் சன்னதி உள்ளது. அதை அடுத்து பேச்சியம்மன் சன்னதி உள்ளது திருச்சுற்றின் வடபகுதியில் பச்சை காளியம்மன் சன்னதி காணப்படுகின்றன.
தலச்சிறப்பு : மாரி என்றால் மழை. ஆகையால் மழையைத்தருபவள் எனவும் அழைக்கப்படுகிறாள். மாரியம்மன் அம்மை நோய் ஏற்படுத்தவும், குணமாக்கவும் கூடிய தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர், நாட்டில் மழை பொய்த்த போது மாரியம்மனை மழை வேண்டி வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஊரில் கூழ்வார்த்தால் மழை வரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பொதுவாக வேப்பமரத்தில் மாரியம்மன் உறைவதால் வேப்பிலைக்காரி எனவும் அழைக்கப்படுகிறாள்.
பொங்கல் வைத்தல், நீர்க்கஞ்சி வார்த்தல், பாற்செம்பு எடுத்தல், கன்மடல் எடுத்தல் போன்றவை சில பொதுவான வழிபாட்டு முறைகளாகும். பொதுவாக எல்லா ஊர்களிலும் மாரியம்மன் வழிபாடு காணப்படுகின்றது. இத்தலத்தில் அம்மனை வழிபட்டால் கொடிய நோய்கள் அகலும். ஆடி,தை வெள்ளிக்கிழமைகளில் விசேஷபூஜைகள் நடைபெறுகிறது.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல்12.3௦ மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
பூஜை விவரம் : இரண்டு கால பூஜை, ஆடி,தை வெள்ளிக்கிழமைகளில் விசேஷபூஜைகள் நடைபெறும்.
கோயில் முகவரி :
அருள்மிகு மாரியம்மன்திருக்கோவில்,
சாக்கோட்டை,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம்.

தற்போது கொரோனா தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் இந்தாண்டு தை தெப்ப உற்சவம் வருகிற 17-ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது.
பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் தை தெப்பத் திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தெப்பத் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். அப்போது கொடிமரத்திற்கு புனிதநீரால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இந்த விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது. தெப்ப உற்சவத்தையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தில் வீதியுலா வருவர். ஆனால், கொரோனா தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அனைத்து உற்சவங்களும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைத்தெப்ப உற்சவத்தின் 2-ம் நாளான இன்று(சனிக்கிழமை) இரவு சுவாமி வெள்ளி மஞ்சத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும், நாளை இரவு சுவாமி, அம்மன் வெள்ளி மஞ்சத்திலும், 10-ந்தேதி இரவு சுவாமி கைலாசநாதர் வாகனத்திலும், அம்மன் அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர். 16-ந்தேதி காலை நடராஜர் ஊடல் உற்சவம், இரவு சுவாமி யாழி வாகனத்தில், அம்மன் புலிவாகனத்தில் எழுந்தருளுகின்றனர். தை தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தெப்பம் மற்றும் தீர்த்தவாரி 17-ந் தேதி நடைபெறுகிறது.
ஆண்டு தோறும் தை தெப்ப திருநாளன்று மாலை திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளுவர்.
தற்போது கொரோனா தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் இந்தாண்டு தை தெப்ப உற்சவம் வருகிற 17-ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

கடந்த நவம்பர் 18-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் வைகுண்ட ஏகாதசி நாட்களில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது புயல் சின்னமாக மாறி கனமழை பெய்தது.
ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா, நெல்லூர், அனந்தபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பலத்த மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததில் சாலைகள் சேதமடைந்தன. அவை சீரமைப்பு செய்து முடியும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் திருப்பதியில் தரிசனத்திற்காக ஆன்லைனில் டிக்கெட் பெற்று மழைக்காலத்தில் தரிசனத்திற்கு வராத பக்தர்கள் 6 மாதம் வரை தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்தது.
வருகிற 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
எனவே கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 10-ந்தேதி வரை ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் வைகுண்ட ஏகாதசி நாட்களில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். வேறு தேதியை மாற்றிக்கொண்டு தரிசனம் செய்யலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரவர் செய்யக்கூடிய செயல்களுக்கேற்றாற் போல் பாதிப்புகளை கொடுக்க கூடியவர் சனி பகவான். எம தர்மருக்கு கூட மன்னிக்கும் தன்மை உண்டு. ஆனால் இவர் நீதிபதி என்பதால் இவரிடம் மன்னிப்பு கிடையாது.
சனீஸ்வரனை கண்டு யாரும் பயப்பட தேவையில்லை. இவருக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. அவரவர் செய்யக்கூடிய செயல்களுக்கேற்றாற் போல் பாதிப்புகளை கொடுக்க கூடியவர். எனவே இவரை நீதிபதி என்று அழைப்பது மிகப்பொருத்தமாக அமையும். அதிலும் தலைமை நீதிபதி என்றால் கண கச்சிதாமாகப் பொருந்தக்கூடியவர் இவர் ஒருத்தர் தான். எம தர்மருக்கு கூட மன்னிக்கும் தன்மை உண்டு. ஆனால் இவர் நீதிபதி என்பதால் இவரிடம் மன்னிப்பு கிடையாது. மன்னிப்பு இவருக்கு பிடிக்காத வார்த்தை. இவருக்கு ஒருவரை பிடித்து விட்டால்,(ஏழரை, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, மங்கு சனி) அந்த காலகட்டத்தில் சனி தோஷம் பிடித்தவர்கள் நன்மைகள் பல செய்து, இறைவனை மனம் உருகி வழிபாடு செய்தால், பாதிப்பை குறைப்பார். அத்துடன் அவரை விட்டு விலகும் போது நன்மைகள் பல செய்வார்.
சனி தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?
முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், அதீத அலைச்சல், பணிச்சுமை, சோம்பல், விளைச்சல் பாதிப்பு, உடல் உறுப்புகளில் கோளாறு என பலவிதமான பிரச்னைகள் ஏற்படலாம். நரம்பு பிரச்னை, வாதநோய், வயிற்று உபாதை, எலும்பு தேய்மானம் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.
சனிதோஷம் போக செய்யக் கூடிய பரிகாரங்கள்...
தினமும் ஒருகைப்பிடி அன்னம் எள்சேர்த்து காகத்திற்கு வைப்பது நன்மை தரும். சனிக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது 5 அகல் தீபம் நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவதும், சிவதுதி, அனுமன் துதிகளைச் சொல்வதும் நல்லது. தினமும் சிவன், லட்சுமி நரசிம்மர், அனுமன், சனிபகவான் காயத்ரி மந்திரங்களை மனதாரக் கூறுங்கள். சனி பிரதோஷ தினங்களில் நந்தி தரிசனம் செய்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானது.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள நளதீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சனிபகவானை வழிபட்டும், திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு சென்று அங்குள்ள பொங்கு சனிபகவானையும் வழிபடலாம். இரும்பு சட்டியில் 8 ஒரு ரூபாய் நாணயங்கள் போட்டு, நல்லெண்ணெய் நிரப்பி அதில் உங்கள் முகம் பார்த்த பின் தானம் அளிப்பது சனிதோஷம் நீங்கும். இரும்பு அல்லது ஸ்டீல் டாலர், காப்பு அணிவதும், அதை கருப்பு கயிறில் கட்டிக் கொள்வதும் நல்லது.
வசதி உள்ளவர்கள் நீலக்கல் எனும் ப்ளூடோபாஸ் கல்லை டாலரில் பதித்து அணியலாம். அல்லது அந்தக் கல்லால் செய்த கணபதி சிலையை வாங்கி பூஜிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். அடிக்கடி சிவாலயம் சென்று அங்குள்ள பார்வதியை வழிபட்டபின், நிறைவாக நவகிரக சனிபகவானை வணங்கி விட்டு அனுமனை தரிசித்து விட்டு வருவது நல்லது. அனுமன் இல்லாவிடில் வழியில் ஏதாவது ஒரு பிள்ளையாரை தரிசிப்பது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் வராது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரை வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேரோட்ட திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான தைத்தேர் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.15 மணி முதல் காலை 6.15 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவை முன்னிட்டு தெற்கு உத்திரை வீதியில் உள்ள தைத்தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. அப்போது முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவிஆணையர் கந்தசாமி, சுந்தர்பட்டர் ஆகியோர் தேரில் நட்டனர். இதில், கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தைத்தேர் திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரை வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அனைத்து உற்சவங்களும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.

மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வான மகர சங்ரம பூஜை வழிபாடு 14-ந்தேதி பிற்பகல் 2.29 மணிக்கு நடக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 30-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பிறமாநிலங்களை சேர்ந்த முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்வான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. பூஜையின் போது சாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க ஆபரணங்கள் அடங்கிய பெட்டகங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) சபரிமலை நோக்கி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது.
முன்னதாக அன்று அதிகாலையில் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் மேல்சாந்தி தலைமையில் திருவாபரண பெட்டிகள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் மதியம் 1 மணிக்கு திருவாபரண பெட்டி ஊர்வலம் புறப்படும்.
இந்த ஊர்வலம் பாரம்பரிய பெருவழி பாதையான எருமேலி, காளைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைபயணமாக பம்பையை சென்றடையும். பின்னர் ஆபரண பெட்டிகள் 14-ந் தேதி மாலை 6.20 மணிக்கு சபரிமலை சன்னிதானம் கொண்டு வரப்பட்டு, ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். பின்னர் 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் தொடர்ந்து மகர ஜோதி தரிசனமும் நடைபெறும்.
முன்னதாக மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வான மகர சங்ரம பூஜை வழிபாடு 14-ந்தேதி பிற்பகல் 2.29 மணிக்கு நடக்கிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் இந்த சிறப்பு பூஜை நடைபெறும். அப்போது திருவனந்தபுரம் கவடியார் கொட்டாரத்தில் இருந்து கன்னி ஐயப்பன்மார்கள் புடைசூழ அனுப்பி வைக்கப்படும் சிறப்பு நெய் மூலம் சாமி ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
மேலும், 14-ந் தேதி ஆபரண பெட்டிகள் கோவிலுக்கு கொண்டு செல்லப்படும் போது 18-ம் படியேறி செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும். ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நிறைவடைந்த பிறகு இரவு 7.30 மணியளவில் பக்தர்கள் மீண்டும் படியேற அனுமதிக்கப்படுவார்கள்.
திருவாபரண ஊர்வலத்தை முன்னிட்டு ஆரன்முளா துணை கமிஷனர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

கொரோனா பரவல் எதிரொலியாக திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் குளத்தில் பக்தர்கள் நீராட மீண்டும் தடை விதித்து காரைக்கால் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள், கோவில் ஐதீகமுறைப்படி, முதலில் நளன்குளத்தில் புனித நீராடுவார்கள். நீராடாதவர்கள், குறைந்தபட்சம் நளன் குளத்தில் இறங்கி, தண்ணீரை தலையில் தெளித்துவிட்டு, குளத்தையும் அங்குள்ள விநாயகரையும் வணங்கிவிட்டு, தர்பாராண்யேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்றுவிட்டு, கடைசியாக சனீஸ்வரரை தரிசனம் செய்வது வழக்கம்.
இந்தநிலையில், நாடெங்கும் கொரோனா தொற்று பரவியதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், நளன் குளத்தில் பக்தர்கள் புனித நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நளன் குளத்தில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நளன் குளத்தில் பக்தர்கள் நீராட மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்த வகையிலும் மாவட்டத்தில் தொற்றுப் பரவலை தவிர்க்கும் வகையிலும், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி வரும் 31-ந் தேதி நள்ளிரவு வரை உடனடியாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.
அதன்படி மறு அறிவிப்பு வரும் வரை, திருநள்ளாறு நளன் தீர்த்தம் மற்றும் பிற தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்படுகிறது. முககவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முதியோர், குழந்தைகள், இணை நோய்கள் உள்ளோர், திருநள்ளாறு யாத்திரை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியை அவசியம் போட்டிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை காட்டினால் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலெக்டர் அர்ஜூன் சர்மாவின் இந்த உத்தரவையடுத்து சனீஸ்வரர் கோவிலில் உள்ள நளன்குளத்தில் பக்தர்கள் உள்ளிட்ட யாரும் நீராட முடியாத அளவிற்கு, குளத்தில் இருந்த ராட்சத மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்கலாம்....நாளை முழு ஊரடங்கு: பவானி கூடுதுறையில் பரிகாரம், புனித நீராட தடை