என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்களுக்கு பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு :
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் உருமாறிய ஒமைக்காரன் தொற்றும் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் பரவி உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகிறது.
மேலும் இரவு நேர ஊரங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரங்கு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் சுற்றுலா தலங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகளவு மக்கள் கூடுவார்கள்.
இதை தவிர்க்கும் வகையில் நாளை சுற்றுலா தலங்களுக்கும் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து புனித நீராடுவார்கள். மேலும் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் பரிகாரங்கள் செய்ய தமிழகம் ழுமுவதும் இருந்து மக்கள் அதிகளவு வருவார்கள்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நாளை முழு ஊரங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 2 நாட்களுக்கு பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு செல்லவும் அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையொட்டி கூடுதுறை ஆற்றுக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் செல்லாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பகுதியில் பொழுது போக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவுகாவுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவார்கள்.
நாளை முழு ஊரடங்கையொட்டி இன்று (சனிக்கிழமை) முதல் மறு உத்தரவு வரும் வரை பவானிசாகர் பூங்காவுக்கு மக்கள் செல்ல அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையொட்டி அணை பூங்கா நுழைவு வாயில் அடைக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கோபி அடுத்த கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், கண்டு ரசிப்பதற்கும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். மேலும் சனி, ஞாயிறு மற்றும் முக்கிய நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். தடுப்பணையில் தண்ணீர் அதிகளவு கொட்டி வந்ததால் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடிவேரி தடுப்பணையில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் அதிளவில் வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர்.
இந்த நிலையில் முழு ஊரடங்கையொட்டி கொடிவேரி தடுப்பணையில் மக்கள் குளிக்கவும், கண்டு கழிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் குளிக்கவும், சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்...காரியத் தடைகளை தவிடுபொடியாக்கும் பிள்ளையார் விரத வழிபாடு
யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்.
தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே
தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை
கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர தாயகம்

மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்

ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஸ்மரணாத் ஸ்ர்வ பாபக்னம் கத்ரூஜ விஷ நாசநம்

நினைத்த உடனேயே அனைத்து பாபங்களையும் போக்கடிப்பவரும், கொடிய விஷத்தை முறியடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ஸிம்ஹாநாதேந மஹதா திக்தந்தி பயநாசனம்

மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ப்ரஹ்லாதவரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரணம்

பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்த மஹாவீரருமான,ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
க்ரூரக்ரஹை பீடிதானாம் பக்தாநாம் பயப்ரதம்

உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
வேத வேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்

வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன்.
ய: இதம் படதே நித்யம் ருணமோச ந ஸம்ஜிதம்அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப் நுயாத்
யார் இந்த ருணமோசனம் என்ற பெயருடைய ஸ்லோகத்தை தினம் படிக்கின்றாரோ அவர் விரைவிலேயே கடனிலிருந்து விடுபட்டவனாகி மேலும் சகல செல்வத்தையும் அடைவார்.
பூமி நீளா சமேத ஸ்ரீல்க்ஷ்மி நரஸிம்ம ஸ்வாமினே நம:
ரொம்ப சக்தி வாய்ந்த சுலோகம் இது. தினமும் சொல்லுவதால் தீராத கடன்கள் தீரும். ரொம்ப கஷ்டம் என்றால் ஒரே நாளில் 108 முறை ஜபித்து கைமேல் பலன் காணலாம்

விநாயகர் வழிபாடு விக்னங்களையும் தடைகளை தவிடுபொடியாக்கும். விநாயகரை வீட்டில் வழிபாடு செய்தால், மிகப்பெரிய தடைகளும், வெற்றி படிக்கல்லாய் மாறி சுபம் உண்டாகும்.
வாழ்வில் துக்கத்தையும், துயரத்தையும் மட்டுமே பார்த்தேன் என்று விரக்தியுடன் இருப்பவர்கள் கூட, விநாயகரை வீட்டில் வைத்து தொடர்ந்து வழிபாடு செய்தால் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்துவார் செல்வ கணபதி.
வெற்றிகளைக் குவிக்கும் விநாயகரின் துணையுடன் வாழ்வை வெற்றிக் கொள்ளலாம்.
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து பூஜை செய்வது விசேஷம். எருக்கஞ்செடி விநாயகருக்கு உரிய செடி, எருக்கன் மாலை விநாயகருக்கு உகந்தது. வெள்ளருக்கு செடியினால் உருவாக்கப்பட்ட விநாயகருக்கு, துளசி தீர்த்தம், சந்தனம், பன்னீர் என அபிஷேகம் செய்த பிறகு பூஜை அறையில் வைத்து வழிபடத் தொடங்கலாம்.
விநாயகரை அப்படியே வைத்து வழிபாடு செய்வதைவிட, பித்தளைத் தாம்பாளத்தில் பச்சரிசி அல்லது நெல்லை விரவிவிட்டு, அதன்மேல் விநாயகரை வைத்து வழிபடலாம். தினசரி விநாயகருக்கு பிரசாதத்தை நிவேதனம் செய்து தீபம் ஏற்றி வேண்டுதல்களை சொல்லி பூஜித்தால் போதும்.
வெள்ளெருக்கு விநாயகரை நோக்கியவாறு அகல் தீபத்தின் சுடர் எரியுமாறு விளக்கேற்றவேண்டும். இந்த எளிய வழிமுறையை பின்பற்றி விரதம் இருந்து விநாயகரை துதித்தால், தும்பிக்கை முகத்தோன், வினைகளை அறுத்து, வாழ்வில் வளம் சேர்ப்பார்.

பிரதோஷ நாட்களில் சிவன் வழிபாடு செய்வது விருப்பங்களை நிறைவேற்றும். அந்த வகையில் பிரதோஷம் வரும் கிழமைகளில் செய்யும் வழிபாடுகளால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:-
ஞாயிறுக்கிழமை - மங்கல ஓசை மனையில் கேட்கும்.
திங்கட்கிழமை - சிந்தனைகள் வெற்றி பெறும்.
செவ்வாய்க்கிழமை - பூமி யோகம் உண்டு.
புதன்கிழமை - கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.
வியாழக்கிழமை - புத்திரப்பேறு, முன்னோர் ஆசி கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை - செல்வ வளம் பெருகும்.
சனிக்கிழமை - பதவி உயர்வு கிடைக்கும்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இந்தாண்டுக்கான தை தெப்ப திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் தை தெப்ப திருவிழா 12 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு தை தெப்ப திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தையொட்டி இன்று மாலை சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளுகிறார்கள். அப்போது கொடிமரத்திற்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பின்னர் கொடியேற்றப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அனைத்து உற்சவங்களும் கோவில் வளாகத்திலேயே நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் தை தெப்ப உற்சவத்தன்று மாலை திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளுவார்கள். ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்தாண்டு தை தெப்ப உற்சவம் வருகிற 17-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி.
சுவாமி : அருள்மிகு சாரங்கபாணி சுவாமி.
அம்பாள் : அருள்மிகு கோமளவல்லி.
மூர்த்தி : ஆராவமுதன்.
தீர்த்தம் : பொற்றாமரைத் திருக்குளம்,காவிரி.
தலச்சிறப்பு : 108 திவ்ய தேசங்களில் இது 12வது திவ்ய தேசமாகும். ஹோம மகரிசியின் மகளாக வளர்ந்து கொண்டிருந்த லக்ஷ்மியை இத்தலத்திற்கு மகர சங்கராந்தியன்று, வைதீக விமானத்துடன் கையில் சாரங்கம் என்னும் வில்லுடன் வந்து இறங்கிய திருமால் மணந்து கொண்டு அர்ச்சாரூபியானார். ராமபிரானிடம் வீடணன் பெற்று வந்த ஆராதனா விக்ரகம், திருவரங்கத்தில் பிராணா வாக்ருதி என்னும் விமானத்துடன் பள்ளி கொண்டு விட, வைதீக விமானத்துடன் சாரங்கபாணியாக குடந்தையிலும் அரச்சாரூபியாகி அருள்புரிந்தார். உபயபிரதான திவ்யதேசம் என்னும் சிறப்புடைய தலம்.
கோவிலின் வரலாறு
ஒருசமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி, திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் உதைக்கச் சென்றார். இதைத் திருமால் தடுக்கவில்லை. உங்கள் மார்பில் நான் வசித்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்களே என கோபப்பட்ட லட்சுமி, கணவரைப் பிரிந்தாள். தவறை உணர்ந்த பிருகு மகரிஷி, திருமாலிடம் மன்னிப்பு வேண்டினார். லட்சுமியிடம், அம்மா! கோபிக்க வேண்டாம். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு, தெய்வங்களில் சாத்வீகமானவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர்.
அந்த சோதனையின் விளைவே, உன் கணவனை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தது. லோகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாகப் பிறக்க வேண்டும், என்றார். லட்சுமிதாயார் மனம் குளிர்ந்து பிருகுவை ஆசிர்வதித்தாள். தன் சபதப்படி திருமாலைப் பிரிவதாகவும், பூலோகத்தில் பிருகுவின் மகளாகப் பிறக்கப் போவதாகவும், தன்னை மகளாக அடைய வேண்டுமானால், தவமிருக்க வேண்டும் என்றும் சொன்னாள். அதன்படி, பிருகு புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார். இங்குள்ள ஹேமபுஷ்கரிணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு கோமளவல்லி என பெயரிட்டு வளர்த்து, திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால், சாரங்கபாணி; எனப்பட்டார். இவ்வூரை தாயாரின் அவதார ஸ்தலம் என்கிறார்கள்.
தலபெருமை
உத்தான சயன பெருமாள் : பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் தலங்களில் பலவிதமான சயனங்களில் காட்சி தருவார். இங்கு உத்தான சயன கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.இத்தலத்திற்கு வந்த திருமழிசையாழ்வார், சுவாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்! என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார், அப்படியே காட்சி கொடு! என்றார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை உத்தான சயனம் என்பர்.
திவ்ய பிரபந்தம் தந்த திருமால் : பெருமாளை குறித்து, பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த பாடல்கள், நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர் இத்தலத்து பெருமாளே ஆவார்.ஆம்! நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வணங்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை ஓராயிரத்துள் இப்பத்தும் என்று சொல்லி பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா! என வியந்து மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார்.
ஆனால், அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார்திருநகரி (நவதிருப்பதி - தூத்துக்குடி மாவட்டம்) சென்று, நம்மாழ்வரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படியே அவர் நம்மாழ்வாரை வணங்கினார். ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார். ஆழ்வார்கள் பல தலங்களிலும் மங்களாசாசனம் (பாடல்) செய்த இப்பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆனது. ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால் இத்தலத்து சாரங்கபாணிக்கு, ஆராவமுதாழ்வார் என்ற பெயரும் உண்டானது.
வில்லுடன் பெருமாள் : பெருமாள் சங்கு, சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால், இத்தலத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் சுவாமி, உற்சவர் இருவருமே சார்ங்கம் வைத்திருப்பது விசேஷம். இதன் பெயராலேயே இவர், சார்ங்கபாணி என்று அழைக்கப்பட்டார். மூலவரிடம் இருக்கும் சார்ங்கத்தை பார்க்க முடியாது. கும்பகோணம் தீர்த்த ஸ்தலம் என்பதால், மூலவரை மகாமகத்திற்கு வரும் நதி தேவதைகளும், தேவர்களும் வணங்கியபடி காட்சி தருவதைக் காணலாம்.
பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பரந்தாமன் : லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் சாரங்கபாணியின் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இறுதிக்காலம் வரையில் சேவை செய்தார். இக்கோயிலின் கோபுரத்தை கட்டியவரும் இவரே. அவருக்கு குழந்தைகள் இல்லை. ஒரு தீபாவளியன்று அவர் பெருமாளின் திருவடியை அடைந்தார்.
சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி. இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்த போது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன்பக்தனுக்க ஈமக்கிரியை செய்துவைத்து கருணைக்கடலாக விளங்கினார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால், இதை பக்தர்கள் பார்க்க முடியாது.
நடைதிறப்பு : திறக்கும் நேரம் (காலை) : 7:00 A.M முதல் 12:30 P.M வரை: (மாலை) : 4:30 P.M முதல் இரவு 9:00 P.M வரை

பக்தர்கள் இறைவனை தேடி பாதயாத்திரையாக வருவதால் நம் முன்ஜென்ம பாவ வினைகள் நீங்கி நம் வாழ்வு சிறப்பு பெறும் என்பது ஐதீகமாக உள்ளது.
பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் “பாதயாத்திரை” என்பது தனி சிறப்பு பெற்று விளங்குகிறது. இதற்காக பக்தர்கள் சிலர் மார்கழி மாதத்தில் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். ஒருசிலர் தை மாதத்தில் இருந்து முருகனை எண்ணி தங்கள் விரதத்தை தொடங்குகின்றனர். ஆகவே தை மாதம் தொடங்கி விட்டாலே பழனியில் பக்தர்கள் கூட்டத்தை அதிகம் பார்க்க முடியும்.
தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி சுமந்து, முருகா...! முருகா...! என்ற சரணகோஷம் முழங்க பாதயாத்திரையாக வருகின்றனர். அப்போது அவர்கள் முருகனுக்கு பிடித்த காவி உடையை அணிந்து பக்தி பரவசத்துடன் வருவதை பார்க்கலாம்.
இதில் செட்டிநாடு என்றழைக்கப்படும் காரைக்குடி நகரத்தார் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மயில்காவடி, சேவல்காவடி, வேல்காவடி எடுத்து ஆடிக் கொண்டே வருகின்றனர். இவ்வாறு பாதயாத்திரையாக வருவதால் நம் முன்ஜென்ம பாவ வினைகள் நீங்கி நம் வாழ்வு சிறப்பு பெறும் என்பது ஐதீகமாக உள்ளது.

இந்த உலகத்தில் உள்ள அனைத்து கொள்கைகளும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இயேசு கிறிஸ்துவின் கொள்கை மாறுவதே இல்லை. காரணம் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார்.
இந்த உலகத்தில் மனிதனுக்கு எதுலேயும் பூரண உத்தரவாதம் இல்லை. ஆனால், கிறிஸ்து பிறந்தது நமக்கு உத்தரவாதம் தரவே. இந்த உலகத்தில் பலர் அற்புதங்கள் செய்கிறார்கள். ஆனால், எவராலும் நித்தியமான வாழ்வுக்கான உத்தரவாதம் கொடுக்க முடியவில்லை. உலகில் யாரும் தேவகுமாரனாய் பிறந்தது இல்லை. கிறிஸ்து பூமியில் வாழ்ந்த நாட்களிலும், இப்போதும் அவர் செய்கிற அற்புத அதிசயங்கள் எப்படிப்பட்ட பொல்லாத மனிதனையும் புதிய படைப்பாக மாற்றுகிறது.
பாவம் செய்கிற மனிதனுக்கு மரணம் நிச்சயம். எந்த மனிதனும் தாங்க முடியாத சோதனை வரும் போது நிச்சயம் மரணத்தை விரும்புகிறான். பாவத்தால் சாகும் மனிதனுக்கு மரணம் முடிவாகாமல், பாதாள நரக வேதனையே கிடைக்கிறது.
ஆகவே, நீ இறக்க வேண்டியதில்லை. உனக்கு பதிலாக நான் மரித்தேன் என்றார் இயேசு. அதோடு நிறுத்தாமல் 3-ம் நாளில் உயிரோடு எழுந்தார்.
இந்த உலகத்தில் உள்ள அனைத்து கொள்கைகளும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இயேசு கிறிஸ்துவின் கொள்கை மாறுவதே இல்லை. காரணம் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார். இந்த நாட்களில் ஏற்பட்டுள்ள பலதரப்பட்ட கொள்ளை நோய்களுக்கும், பலவித பிரச்சினைகளுக்கும் பரிபூரண பரிகாரம் இயேசு கிறிஸ்துவின் வசனத்திலும், ரத்தத்திலும், தழும்புகளிலும் இன்றும் உண்டு. இயேசு கிறிஸ்து அனைவருக்கும் நித்திய ஜீவனை குறித்தும், உயிர்தெழுதலைக்குறித்தும் நூற்றுக்கு நூறு உத்தரவாதம் தருகிறார். அவரிடத்திலும், அவரது வார்த்தையிலும் பூரண விசுவாசத்தோடு ஜெபிக்கிற அனைவருக்கும் அவர் உத்தரவாதம் தருகிறார்.
இவ்வாறு போதகர் ஜான் இ.கிறிஸ்டோபர் கூறியுள்ளார்.
ஜான் இ. கிறிஸ்டோபர் தோவாளை போதகர் ஜி.சி.எம். முத்துநகர்.

ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக பாத யாத்திரை வரும் பக்தர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் நடைபெறும் முதன்மையான திருவிழா தைப்பூச விழாவாகும். இவ்விழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து முருகப்பெருமானுக்கு பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்தி வழிபடுவார்கள்.
கடந்த 2 வருடமாக கொரோனா பரவல் காரணத்தால் பக்தர்கள் இன்றியும், கட்டுப்பாடுகளுடனும் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது. தேரோட்டத்தின் போது உள்ளூர் பக்தர்கள் மட்டும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த வருடம் தைப்பூசத்திருவிழா வருகிற 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 18-ந் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு தற்போதே பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர்.
சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து சாரைசாரையாக பக்தர்கள் வருகின்றனர். கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் ஆங்காங்கே கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சத்திரங்களில் தங்கி விட்டு பின்னர் மீண்டும் பாதயாத்திரையாக நடந்து செல்கின்றனர். பக்தர்களுக்காக பல்வேறு இடங்களில் அன்னதானம், மருத்துவ முகாம் உள்ளிட்டவையும் நடைபெற்று வருகின்றன.
தற்போது கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் அடைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வருபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக இரவு நேர ஊரடங்கால் அவர்கள் எங்கும் தங்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக பாத யாத்திரை வரும் பக்தர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று முதல் 3 நாட்கள் தொடர்ந்து கோவில்கள் அடைக்கப்படும் என்பதை அறிந்தவுடன் நேற்று பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்தவர்கள் இடையிலேயே பஸ்சில் ஏறி பழனிக்கு வந்தனர். அவர்கள் கோவிலில் அவசர அவசரமாக சாமி தரிசனம் செய்து விட்டு இரவு 10 மணிக்கு மேல் பஸ் இருக்காது என்பதால் உடனே தங்கள் ஊருக்கு திரும்பினர். இதனால் பழனி கோவிலில் நேற்று இரவு சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்ததால் திருவிழா போல கூட்டம் அலைமோதியது. அவர்கள் ஊருக்கு செல்ல கூடுதல் பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் பல ஊர்களில் இருந்து வந்தவர்கள் இன்னும் தொடர்ந்து பாதயாத்திரையாக நடந்து வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் ஊரடங்கு தடை காலத்தில் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை குறித்து மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
சிவகங்கையைச் சேர்ந்த சங்கர் என்பவர் தெரிவிக்கையில், நான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாதயாத்திரையாக பழனிக்கு நண்பர்களுடன் வந்தேன். இன்று முதல் கோவில் அடைக்கப்படும் என்பதால் பஸ்சில் ஏறி பழனிக்கு வந்து விட்டேன். ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். ஆனால் அன்றைய தினம் கடைகள் இருக்காது என்பதாலும், கோவில் திறந்திருக்காது என்பதாலும் பஸ்சில் ஏறி வந்து விட்டோம். இதனால் பாதயாத்திரையாக வந்து பழனிக்கு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்ற வேண்டுதல் நிறைவேறாமல் போய் விட்டதோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
இனி வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகமாக இருக்கும். குறிப்பாக காரைக்குடியைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் காவடி எடுத்து வந்து பழனி முருகனை தரிசிப்பது வழக்கம்.
கடந்த 2 வருடமாக தைப்பூச திருவிழாவில் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்க முடியாமல் இருந்தது. இந்த வருடமாவது சற்று தளர்வுகள் அறிவித்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பழனி முருகனை தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
தேனியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தெரிவிக்கையில், நாங்கள் வழக்கமாக பொங்கல் பண்டிகையின் போது குடும்பத்துடன் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வோம். ஆனால் இந்த வருடம் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இதனால் முன்கூட்டியே கோவில் திறந்திருக்கும் நாளில் சாமி தரிசனம் செய்ய முடிவு செய்து வந்து விட்டோம். பாதயாத்திரையாக வர இயலாமல் பஸ்சில் ஏறி ஏராளமான பக்தர்கள் பழனியில் கூடி விட்டனர். சாதாரண நாட்களில் வருபவர்களை விட ஒரே நாளில் அதிக பக்தர்கள் கூடியதால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் வெள்ளமாக உள்ளது. இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க வழக்கமான கட்டுப்பாடுகளுடன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு இன்று அனுமதிக்கப்படவில்லை.
இதையொட்டி கோவில் தெற்கு, வடக்கு டோல்கேட் மற்றும் அனுகிரக மண்டபம் முன்பு தடுப்புகள் அமைத்து போலீசார் மற்றும் கோவில் காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் வழக்கம் போல் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
ஆகம விதிப்படி மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் கோவில் நுழைவுவாயில் முன்பு பக்தர்கள் சூடம் ஏற்றி கோபுர தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
தைப்பொங்கலை யொட்டி வழக்கமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரை சென்று திருச்செந்தூரில் சாமிதரிசனம் செய்து விட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகிறார்கள்.
இன்று காலை திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அனுமதி இல்லாததால் அவர்கள் கோவில் நுழைவுவாயில் முன்பு பக்தர்கள் சூடம் ஏற்றி கோபுர தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் பெரிய திரை கொண்ட தொலைக்காட்சிகள் மற்றும் யூ-டியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
சென்னை
ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் வழிப்பாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. விழா முன்னேற்பாடுகளை செய்து வரும் உதவி- கமிஷனர் கவெனிதா நிருபர்களிடம் கூறியதாவது:-
பகல் பத்து மற்றும் ராப்பத்து திருவிழாக்களின்போது அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்யலாம். குறிப்பாக, சொர்க்கவாசல் திறப்புக்கு முந்தைய நாள் (12-ந்தேதி) இரவு 8 மணியிலிருந்து 13-ந்தேதி காலை 6 மணி வரை உபயதாரர்கள் உள்பட பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லை. 13-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு உள்பிரகார புறப்பாடு, அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அதற்கு பிறகு அன்று காலை 6.15 மணி முதல் இரவு 8 மணி வரை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது மாட வீதிகளில் நடக்கும் திருவீதி உலா நிகழ்ச்சிகள் ஆகம விதிகளின்படி கோவில் வளாகத்துக்குள் நடத்தப்படும். கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்வது, உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தரிசனத்துக்கு வருவதை தவிர்க்கலாம். அதேபோல், பக்தர்கள் தேங்காய், பூ, பழம் மற்றும் துளசி கொண்டு வரவேண்டாம். இயல்பு நிலை திரும்பும் வரை கோவில் உள்பகுதியில் நடைபெறும் சாமி புறப்பாடு, உற்சவங்களில் பக்தர்கள், உபயதாரர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. பட்டாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் பெரிய திரை கொண்ட தொலைக்காட்சிகள் மற்றும் யூ-டியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேரடியாக தரிசிக்க முடியாத திருவிழாக்கள்

திருவிழா நாட்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. குறிப்பாக, பகல் பத்து திருவிழாவில் 5-ம் திருவிழா (இன்று), 6 மற்றும் 7-ம் திருவிழா மற்றும் ராப்பத்து திருவிழாவில் வருகிற 14-ந்தேதி நடக்கும் 2-ம் திருநாள் தொடர்ந்து 3 மற்றும் 4-ம் திருவிழாக்கள் மற்றும் 9, 10 மற்றும் 11-ம் திருவிழாக்களும் இந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் வருகிறது. இந்த திருவிழாக்களை நேரடியாக பார்க்க முடியாமல், தொலைக்காட்சிகளில் நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது, மற்ற நாட்களில் காலை 6 மணியிலிருந்து பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் தரிசிக்கலாம் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிக்கலாம்...கோவில்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மார்கழி மாதம் மற்றும் தைப்பூசம் வருவதை முன்னிட்டு முருகன் கோவில்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் வருவார்கள். அதேபோல் பாத யாத்திரையாகவும் தினமும் திரளான பக்தர்கள் வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்தது.
இதன் எதிரொலியாக மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் நேற்று பக்தர்கள் பெருமளவு குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தாலும் கோவில்களில் நடக்கும் தினசரி பூஜைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில்களில் பூஜைகள் நடத்தப்பட்டது.
தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள் பாதயாத்திரையை ஊரடங்குக்கு முன்னதாக அதாவது இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ளவும், அதற்கு ஏற்றபடி பக்தர்கள் தங்களுடைய பாதயாத்திரையை திட்டமிட்டு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு தடை உத்தரவை முன்னிட்டு மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மூடிப்பட்டுள்ளதால் பக்தர்கள் கோவில் வாசலில் நின்று வழிபாடு செய்தனர். அதே போல் சாந்தோம் ஆலயமும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிக்கலாம்...ஐந்து பஞ்சமிகளில் வாராஹிக்கு விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்