என் மலர்

  ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

  இயேசு
  X
  இயேசு

  பலவித பிரச்சினைகளுக்கு இயேசுவின் வார்த்தையில் பரிகாரம் உண்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த உலகத்தில் உள்ள அனைத்து கொள்கைகளும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இயேசு கிறிஸ்துவின் கொள்கை மாறுவதே இல்லை. காரணம் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார்.
  இந்த உலகத்தில் மனிதனுக்கு எதுலேயும் பூரண உத்தரவாதம் இல்லை. ஆனால், கிறிஸ்து பிறந்தது நமக்கு உத்தரவாதம் தரவே. இந்த உலகத்தில் பலர் அற்புதங்கள் செய்கிறார்கள். ஆனால், எவராலும் நித்தியமான வாழ்வுக்கான உத்தரவாதம் கொடுக்க முடியவில்லை. உலகில் யாரும் தேவகுமாரனாய் பிறந்தது இல்லை. கிறிஸ்து பூமியில் வாழ்ந்த நாட்களிலும், இப்போதும் அவர் செய்கிற அற்புத அதிசயங்கள் எப்படிப்பட்ட பொல்லாத மனிதனையும் புதிய படைப்பாக மாற்றுகிறது.

  பாவம் செய்கிற மனிதனுக்கு மரணம் நிச்சயம். எந்த மனிதனும் தாங்க முடியாத சோதனை வரும் போது நிச்சயம் மரணத்தை விரும்புகிறான். பாவத்தால் சாகும் மனிதனுக்கு மரணம் முடிவாகாமல், பாதாள நரக வேதனையே கிடைக்கிறது.

  ஆகவே, நீ இறக்க வேண்டியதில்லை. உனக்கு பதிலாக நான் மரித்தேன் என்றார் இயேசு. அதோடு நிறுத்தாமல் 3-ம் நாளில் உயிரோடு எழுந்தார்.

  இந்த உலகத்தில் உள்ள அனைத்து கொள்கைகளும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இயேசு கிறிஸ்துவின் கொள்கை மாறுவதே இல்லை. காரணம் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார். இந்த நாட்களில் ஏற்பட்டுள்ள பலதரப்பட்ட கொள்ளை நோய்களுக்கும், பலவித பிரச்சினைகளுக்கும் பரிபூரண பரிகாரம் இயேசு கிறிஸ்துவின் வசனத்திலும், ரத்தத்திலும், தழும்புகளிலும் இன்றும் உண்டு. இயேசு கிறிஸ்து அனைவருக்கும் நித்திய ஜீவனை குறித்தும், உயிர்தெழுதலைக்குறித்தும் நூற்றுக்கு நூறு உத்தரவாதம் தருகிறார். அவரிடத்திலும், அவரது வார்த்தையிலும் பூரண விசுவாசத்தோடு ஜெபிக்கிற அனைவருக்கும் அவர் உத்தரவாதம் தருகிறார்.

  இவ்வாறு போதகர் ஜான் இ.கிறிஸ்டோபர் கூறியுள்ளார்.

  ஜான் இ. கிறிஸ்டோபர் தோவாளை போதகர் ஜி.சி.எம். முத்துநகர்.
  Next Story
  ×