search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் கடற்கரை பகுதி பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    X
    திருச்செந்தூர் கடற்கரை பகுதி பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    திருச்செந்தூர் கோவில் வளாகம் பக்தர்களின்றி வெறிச்சோடியது: கோபுர தரிசனம் செய்த பக்தர்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

    நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு இன்று அனுமதிக்கப்படவில்லை.

    இதையொட்டி கோவில் தெற்கு, வடக்கு டோல்கேட் மற்றும் அனுகிரக மண்டபம் முன்பு தடுப்புகள் அமைத்து போலீசார் மற்றும் கோவில் காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் வழக்கம் போல் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    ஆகம விதிப்படி மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால் கோவில் நுழைவுவாயில் முன்பு பக்தர்கள் சூடம் ஏற்றி கோபுர தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

    தைப்பொங்கலை யொட்டி வழக்கமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரை சென்று திருச்செந்தூரில் சாமிதரிசனம் செய்து விட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகிறார்கள்.

    இன்று காலை திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அனுமதி இல்லாததால் அவர்கள் கோவில் நுழைவுவாயில் முன்பு பக்தர்கள் சூடம் ஏற்றி கோபுர தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

    Next Story
    ×