search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அருள்மிகு படைவெட்டி மாரியம்மன் திருக்கோவில்
    X
    அருள்மிகு படைவெட்டி மாரியம்மன் திருக்கோவில்

    அருள்மிகு படைவெட்டி மாரியம்மன் திருக்கோவில்- கும்பகோணம்

    கும்பகோணம் நகரில் நாகேஸ்வரன் கோவில் தெற்கு வீதியில் பகவத் விநாயகர் கோயிலுக்கு சற்று முன்பாக படைவெட்டி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
    சுவாமி : படைவெட்டி மாரியம்மன்.

    கும்பகோணம் படைவெட்டி மாரியம்மன் கோவில் கும்பகோணத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் ஒன்றாகும். கும்பகோணம் நகரில் நாகேஸ்வரன் கோவில் தெற்கு வீதியில் பகவத் விநாயகர் கோயிலுக்கு சற்று முன்பாக படைவெட்டி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலின் மூலவராக படைவெட்டி மாரியம்மன் உள்ளார். இக்கோவிலின் திருச்சுற்றில் தென்பாகத்தில் பத்ரகாளியம்மன் சன்னதி உள்ளது. அதை அடுத்து பேச்சியம்மன் சன்னதி உள்ளது திருச்சுற்றின் வடபகுதியில் பச்சை காளியம்மன் சன்னதி காணப்படுகின்றன.

    தலச்சிறப்பு : மாரி என்றால் மழை. ஆகையால் மழையைத்தருபவள் எனவும் அழைக்கப்படுகிறாள். மாரியம்மன் அம்மை நோய் ஏற்படுத்தவும், குணமாக்கவும் கூடிய தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர், நாட்டில் மழை பொய்த்த போது மாரியம்மனை மழை வேண்டி வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஊரில் கூழ்வார்த்தால் மழை வரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பொதுவாக வேப்பமரத்தில் மாரியம்மன் உறைவதால் வேப்பிலைக்காரி எனவும் அழைக்கப்படுகிறாள்.

    பொங்கல் வைத்தல், நீர்க்கஞ்சி வார்த்தல், பாற்செம்பு எடுத்தல், கன்மடல் எடுத்தல் போன்றவை சில பொதுவான வழிபாட்டு முறைகளாகும். பொதுவாக எல்லா ஊர்களிலும் மாரியம்மன் வழிபாடு காணப்படுகின்றது. இத்தலத்தில் அம்மனை வழிபட்டால் கொடிய நோய்கள் அகலும். ஆடி,தை வெள்ளிக்கிழமைகளில் விசேஷபூஜைகள் நடைபெறுகிறது.

    நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல்12.3௦ மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை

    பூஜை விவரம் : இரண்டு கால பூஜை, ஆடி,தை வெள்ளிக்கிழமைகளில் விசேஷபூஜைகள் நடைபெறும்.

    கோயில் முகவரி :

    அருள்மிகு மாரியம்மன்திருக்கோவில்,
    சாக்கோட்டை,
    கும்பகோணம் வட்டம்,
    தஞ்சை மாவட்டம்.
    Next Story
    ×