என் மலர்
சினிமா செய்திகள்
- சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
- நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கார்த்தியின் 26-வது படம் இதுவாகும். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், 'வா வாத்தியார்' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பட வெளியீட்டு தேதி தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

- சட்டவிரோதமாக பூடானில் இருந்து கார்கள் இறக்குமதி செய்ததாக வழக்கு.
- சுங்கத்துறை அதிகாரிகள் கேரளாவில் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக பூடானில் இருந்து கார்கள் இறக்குமதி செய்த வழக்கில் ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் சோதனை நடத்தி உள்ளனர்.
இதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள துல்கர் சல்மான் வீட்டில் காலை முதலே துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் கேரளாவில் சோதனையில் ஈடுபட்ட நிலையில் தற்போது சென்னையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- காசியின் வரலாற்றை பேசும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது.
- 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி தற்போது மகேஷ்பாபு நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் மகேஷ்பாபு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். காசியின் வரலாற்றை பேசும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது. ரூ.450 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தவகையில் மகேஷ்பாபுவை தொடர்ந்து ராஜமவுலியுடன் அல்லு அர்ஜூன் கூட்டணி சேர இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- 2001 பத்மஸ்ரீ விருது, 2019 இல் பத்ம பூஷண் விருது, 2025-க்கான தாதாசாகேப் பால்கே விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
- ஆகஸ்ட் 2024 இல் கேரளாவின் வயநாடு நிலச்சரிவின் போது கர்னலாக அவர் மேற்கொண்ட நிவாரண பணிகள் பாராட்டப்பட்டது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் கோலோச்சி வரும் மோகன்லால் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கலைத்துறைக்கு அவர் செய்த சேவைகளுக்காக , 2001 பத்மஸ்ரீ விருது, 2019 இல் பத்ம பூஷண் விருது, 2025-க்கான தாதாசாகேப் பால்கே விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
அதேநேரம் இந்திய பிராந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியையும் மோகன்லால் வகிக்கிறார். அவருக்கு இந்த கௌரவம் மே 2009 இல் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 2024 இல் கேரளாவின் வயநாடு நிலச்சரிவின் போது கர்னலாக அவர் மேற்கொண்ட நிவாரண பணிகள் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் நேற்று புதுடெல்லியில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியை சந்தித்து மோகன்லால் பாராட்டு பெற்றார். 7 தளபதிகள் முன்னிலையில் மோகன்லாலுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி உபேந்திர திவேதி கௌரவித்தார்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால்,"ராணுவத் தளபதியிடம் இருந்து பாராட்டு பெறுவது ஒரு பெரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை.
இது ஒரு நல்ல சந்திப்பு. தாதாசாகேப் பால்கே விருது இதற்கு ஒரு காரணம். நான் 16 ஆண்டுகளாக ராணுவத்தில் ஒரு பகுதியாக இருக்கிறேன்.புதிய தலைமுறையை ராணுவத்திற்குள் கொண்டு வர முயற்சிப்பேன்" என்று கூறினார்.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் தீபாவளியை முன்னிட்டு 17ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'பைசன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
இப்படத்தின் காளமாடன் கானம் பாடல் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜீனி. இப்படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகிய 2 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் கடந்தாண்டு வெளியானது. அதில் அலாவுதீன் பூதத்தைப்போல் ரவி மோகன் இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்படத்தை அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிக்கிறது.
ஃபேண்டசி மற்றும் காமெடி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் ரவி மோகன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாகும்.
இந்நிலையில், ஜீனி படத்தின் அப்டி அப்டி பாடல் இன்று இரவு வெளியானது. பாடல் வரிகளை மசூக் ரகுமான் எழுத, மேசா கரா, தீப்தி சுரேஷ் பாடியுள்ளனர்.
- சூது கவ்வும், காதலும் கடந்து போகும் இயக்குனர் நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கார்த்தியின் 26-வது படம் இதுவாகும். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
- டியூட் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
- பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ மற்றும் 3 ஆம் சிங்கிளான சிங்காரி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், 'டியூட்' படத்தின் ட்ரெய்லர் வரும் 9 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
- ஸ்பெயினில் மஹிந்திரா Formula E ஜெனரல் 2 காரை நடிகர் அஜித் குமார் ஓட்டி சோதித்து பார்த்தார்.
- இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித்குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். மேலும், இந்தாண்டு இறுதியில் மலேசியாவிலும், அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.
இந்த நிலையில், ஸ்பெயினில் மஹிந்திரா Formula E ஜெனரல் 2 காரை நடிகர் அஜித் குமார் ஓட்டி சோதித்து பார்த்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இப்புகைப்படங்களை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அஜித்குமார் ரேசிங் அணி, மேலும் தகவல்களுக்கு காத்திருங்கள் என பதிவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பதிவை பகிர்ந்து தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ரேஸர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஸ்பெயின், ஸ்பீடு மற்றும் ஸ்டைல். சக்திவாய்ந்த மற்றும் கிளாசிக் காம்பினேஷன். அஜித்குமாரை ரேஸிங் டிராக்கில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் அடுத்த சாதனைக்காக காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- அரோரா சின்கிளேரை இன்ஸ்டாகிராமில் 1892 பேர் ரூ.390 பணம் செலுத்தி சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
- இவர்களுக்கு மட்டும் பிரத்யேகமான புகைப்படம் வீடியோக்களை அரோரா வெளியிட்டு வந்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5 ஆம் தேதி அன்று தொடங்கியது. முதல் நாளில் போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
இதில், இன்ஸ்டா பிரபலமான அரோரா சின்கிளேர் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். 'பலூன் அக்கா' என்று நெட்டிசன்களால் அழைக்கப்படும் அரோராவை இன்ஸ்டாகிராமில் 7.5 லட்சத்திற்கும் மேல் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில், அரோரா சின்கிளேரை இன்ஸ்டாகிராமில் 1892 பேர் ரூ.390 பணம் செலுத்தி சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவர்களுக்கு மட்டும் பிரத்யேகமான புகைப்படம் வீடியோக்களை அரோரா சின்கிளேர் வெளியிட்டு வந்துள்ளார். இதன்மூலம் அவருக்கு ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 7 லட்சம் வருமானம் கிடைத்து வந்தது.
இந்நிலையில், அரோரா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதால் அவர் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வரும் வரை அவரது இன்ஸ்டா கணக்கில் இருந்து எதுவும் பதிவிடப்படாது. இதனால் ரூ.390 பணம் போச்சா என்று அரோராவை சப்ஸ்கிரைப் செய்தவர்களை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
- மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
- இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது.
1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த ஒன்றுகூடல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
- திருஷ்டிகள் நீங்கி மக்கள் நலமுடன் வாழ மிளகாய் வத்தல் யாகம் நடந்தது.
ஓசூர் மோரனப்பள்ளி பகுதியில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மிளகாய் வத்தல் யாகம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
அதேபோல் நேற்று பவுர்ணமி நாளை முன்னிட்டு பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருஷ்டிகள் நீங்கி மக்கள் நலமுடன் வாழ மிளகாய் வத்தல் யாகம் நடந்தது.
இந்த மகா யாகத்தில் பிரபல இளம் நடிகை ஷில்பா மஞ்சுநாத் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடித்த 'காளி' படத்தில் கதாநாயகியாகவும், வலை, சிங்க பெண்ணே, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐ.எஸ்.ஓ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த வழிபாட்டில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவரது குடும்பத்தினர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவி முன்பு வளர்க்கப்பட்ட மகா யாகத்தில் மிளகாய் வத்தல் போட்டு திருஷ்டிகள் நீங்க அனைவரும் நலமுடன் வாழ அம்மனை வழிபட்டனர்.






