என் மலர்
சினிமா செய்திகள்
- பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
- திருஷ்டிகள் நீங்கி மக்கள் நலமுடன் வாழ மிளகாய் வத்தல் யாகம் நடந்தது.
ஓசூர் மோரனப்பள்ளி பகுதியில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மிளகாய் வத்தல் யாகம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
அதேபோல் நேற்று பவுர்ணமி நாளை முன்னிட்டு பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருஷ்டிகள் நீங்கி மக்கள் நலமுடன் வாழ மிளகாய் வத்தல் யாகம் நடந்தது.
இந்த மகா யாகத்தில் பிரபல இளம் நடிகை ஷில்பா மஞ்சுநாத் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடித்த 'காளி' படத்தில் கதாநாயகியாகவும், வலை, சிங்க பெண்ணே, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐ.எஸ்.ஓ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த வழிபாட்டில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவரது குடும்பத்தினர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவி முன்பு வளர்க்கப்பட்ட மகா யாகத்தில் மிளகாய் வத்தல் போட்டு திருஷ்டிகள் நீங்க அனைவரும் நலமுடன் வாழ அம்மனை வழிபட்டனர்.
- பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பாக விதி மீறல்கள் நடைபெற்றது.
- சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாததால் மூட கூறி உத்தரவு
தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸின் ஒன்பதாவது சீசன் கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.
இதனிடையே கன்னட மற்றும் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கன்னட பிக்பாஸ் செட்டை இழுத்துமூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான விதி மீறல்கள் நடைபெற்றதாகவும் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாததால் மூட கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நரேந்திர சுவாமி தெரிவித்தார்.
இதனால் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் கன்னட பிக்பாஸ் சீசன் 12 முடிவுக்கு வருகிறதா என்று கன்னட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- டியூட் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
- பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக 'டியூட்' படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ மற்றும் 3 ஆம் சிங்கிளான சிங்காரி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், 'டியூட்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை இன்று மாலை 05.04 மணிக்கு அறிவிக்கப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
- தினமும் 3 வேளை சமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
- வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடிகர் சிம்பு தியானம் மேற்கொண்டார்.
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை கடலூர் மாவட்டம் வடலூரில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். மேலும் இங்கு 6 காலங்களில் ஏழு திரைகளை நீக்கி தைப்பூச தினத்தன்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். மேலும் மாதந்தோறும் ஆறு திரைகளை விலக்கி மாத ஜோதி தரிசனம் நடைபெறும்.
இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து சன்மார்க்க அன்பர்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி ஜோதி தரிசனம் செய்வர். மேலும் இன்று வரை, தருமச்சாலையில் உள்ள அணையா அடுப்பு மூலம் பலரின் பசியைப் போக்கி வருகின்றது. அது மட்டுமின்றி சுனாமி, புயல், வெள்ளம் என எந்தப் பேரிடர் வந்தபோதும் தடையின்றி மக்களுக்கு உணவு வழங்கி தினமும் 3 வேளை சமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக திரை உலகின் பிரபலமான கதாநாயகன், இயக்குநர், பாடகர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் சிலம்பரசன் இன்று காலை வடலூர் சத்திய ஞான சபைக்கு வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து சத்திய ஞான சபை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தியானம் மேற்கொண்டு சத்திய தர்மச்சாலை, அணையா அடுப்பு பகுதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து வள்ளலார் சித்திப்பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருவறை தரிசனம், வள்ளலார் தண்ணீரை கொண்டு விளக்கு எரியச் செய்த நற்கருங்குழி ஆகிய பகுதிகளுக்கு சென்று தரிசனம் செய்தார்.
ஏழை, எளிய, ஆதரவற்றவர்கள் பசியை போக்கி 3 வேளையும் அன்னதானம் வழங்கும் வள்ளலாரை போல தானும் குழந்தைகள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று வேண்டி கொண்டேன். அதனால் தான் வள்ளலார் அழைத்த உடன் வடலூர் சத்திய ஞான சபைக்கு வருகை தந்து வள்ளலார் சுவாமிகளை தரிசனம் செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் நாளை காலை 8.09 மணிக்கு வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்தது. இந்நிலையில் இன்று காலை படத்தின் டைட்டில் வெளியான நேரத்தில் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடிகர் சிம்பு தியானம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜீனி படத்தை அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
- ரவி மோகனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரவி மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜீனி. இப்படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகிய 2 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் கடந்தாண்டு வெளியானது. அதில் அலாவுதீன் பூதத்தைப்போல் ரவி மோகன் இருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்படத்தை அறிமுக இயக்குனரான புவனேஷ் அர்ஜுனன் இயக்கியுள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிக்கிறது.
ஃபேண்டசி மற்றும் காமெடி கதைக்களத்துடன் அமைந்துள்ள ஜீனி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் ரவி மோகன் திரைப்பயணத்தில் மிகப் பெரிய பொருட் செலவில் எடுக்கப்பட்ட படமாகும்.
இந்நிலையில், ஜீனி படத்தின் அப்டி அப்டி பாடல் இன்று இரவு 8.10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- ஆயிஷா இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகி உள்ளார்.
- மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ராம்போ' படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற அழுத்தமான கிராமப்புற கமர்ஷியல் படங்களைத் தந்த, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள "ராம்போ" நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.
ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு (தன்யா ரவிச்சந்திரன்) உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முத்தையாவின் இயக்கத்தில், உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன், அதிரடி, ஆக்சன் நிரம்பிய அழுத்தமான படமாக இப்படம் வெளிவரவுள்ளது.
படம் குறித்து இயக்குநர் முத்தையா கூறியதாவது.., "இந்தப் படம் எனது பாணியிலிருந்து மாறுபட்டு, ஒரு புதிய கதையை வேறு பாணியில் சொல்லும் வாய்ப்பை எனக்கு வழங்கியது. அருள்நிதியுடன் இணைந்து பணிபுரிந்தது உற்சாகமான அனுபவமாக இருந்தது. 'ராம்போ' படத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்."
பிக் பாஸ் புகழ் ஆயிஷா இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகி உள்ளார். மேலும் மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஹரீஷ் பேரடி மற்றும் VTV கணேஷ் முக்கியமான வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நகரப் பின்னணியில் ஆக்சன், அதிரடி மற்றும் உணர்ச்சிரமான பொழுதுபோக்கு படமாக "ராம்போ" உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க, வருகிற 10-ந்தேதி தேதி முதல் 'ராம்போ' படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்த்து ரசியுங்கள்...
- ரஜினி - கமல் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போகிறார்கள்
- ரஜினி - கமல் படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்று கூறப்பட்டது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.
இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.
கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கு, பிளானும் இருக்கு. ஆனால் அதற்கான இயக்குநர், கதை, கதாபாத்திரம் இன்னும் ரெடி ஆகல. ஆனதும் நடிப்பேன் என்றார்.
இதன்மூலம் இப்படத்தை லோகேஷ் இயக்கவில்லை என்று உறுதியானது. இதனால் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்தது.
இதனிடையே கோமாளி, லவ் டுடே படங்களை இயக்கி புகழ்பெற்ற பிரதீப் ரங்கநாதன் தான் ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கப்போகிறார் என்று இணையத்தில் தகவல் தீ போல பரவியது.
இந்நிலையில், இந்த தகவலை பிரதீப் ரங்கநாதன் மறுத்துள்ளார். சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் அளித்த பேட்டி ஒன்றில், ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை நான் இயக்கவில்லை. தற்போது நடிப்பில் மட்டும் தான் நான் கவனம் செலுத்தி வருகிறேன். அதே சமயம் ரஜினி - கமல் நடிக்கும் படத்தை இயக்கம் வாய்ப்பு எனக்கு வந்ததா? என்பதை பற்றி எதையும் என்னால் இப்போது கூறமுடியாது" என்று தெரிவித்தார்.
இதன்மூலம் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கப்போகும் இயக்குனர்களின் பட்டியலில் பிரதீப் ரங்கநாதனும் இருந்துள்ளார் என்பது அவரது பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது.
- அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது, எதிரியும் கிடையாது.
- அரசியல் என்பது காவல்துறை பிடிக்கும்போது யு-டர்ன் போட்டு திரும்பி செல்வது போன்றது.
விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்தில் வேல்பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு விசுவ ஹிந்து பரிஷத் வடக்கு தமிழக தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு வேல் பூஜையை தொடங்கி வைத்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாடு நலம்பெற வேண்டி அக்டோபர் 25, 26, 27 ஆகிய கந்தசஷ்டி திருவிழா நாட்களில் ஆயிரம் கோவில்களில் கந்த சஷ்டி பாராயணம் பாடப்படுகிறது. மேலும் வேல் பூஜை, கோ பூஜை போன்ற பூஜைகளும் நடைபெறுகிறது.
அதற்கு முன்னோட்டமாக இன்று ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் வேல் கொடுத்து, வேல் பூஜை செய்தேன்.
கரூர் சம்பவத்தால் விஜய் மிகவும் வேதனையில் இருப்பார் என்பது மட்டும் எனக்கு தெரியும்.

எந்த ஒரு தலைவரும் அவர்கள் கூட்டத்திற்கு வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது.
41 பேர் இறந்தது விஜய்யின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு வாழ்க்கையில் ஒரு வடுவாக நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் என்பது என்னுடைய கருத்து.
அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது, எதிரியும் கிடையாது ஜனவரிக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது. அரசியல் என்பது காவல்துறை பிடிக்கும்போது யு-டர்ன் போட்டு திரும்பி செல்வது போன்றது.
கடவுள் முன் எல்லோரும் சமம், நாம் மனிதர்கள், அணுக்கள், துகள்கள் தான், எல்லோரும் சமத்துவமாக இருக்க வேண்டுமென்றால் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது சூப்பராக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பத்ரிநாத் சன்னதியில் பிரசாதம் வழங்கப்பட்டது.
- புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது.
அந்த வகையில், தற்போது ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் செல்வதாகவும், அதனை தொடர்ந்து பத்ரிநாத்திலிருந்து பாபா குகைக்கு செல்லும் ரஜினிகாந்த் ஒரு வாரம் அங்கு தங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துள்ளார். முன்னதாக, பத்ரிநாத் கோவிலுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பத்ரிநாத் சன்னதியில் பிரசாதம் வழங்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
- படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.
நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலானது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வெற்றி மாறன் பிறந்தநாளையொட்டி சிலம்பரசன் நடிக்கும் 'எஸ்டிஆர் 49' படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.
இந்நிலையில், 'எஸ்டிஆர் 49' படத்தின் தலைப்பு 'அரசன்' என்று கலைப்புலி எஸ்.தாணு எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
முன்னதாக, படத்தின் தலைப்பு வெளியாவதையொட்டி நடிகர் சிம்பு, சிதம்பரம் நடராஜர் கோவிலில் வழிபாடு செய்தார். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.
- புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித்குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். மேலும், இந்தாண்டு இறுதியில் மலேசியாவிலும், அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.

இந்த நிலையில், ஸ்பெயினில் மஹிந்திரா Formula E ஜெனரல் 2 காரை நடிகர் அஜித் குமார் ஓட்டி சோதித்து பார்த்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள அஜித்குமார் ரேசிங் அணி, மேலும் தகவல்களுக்கு காத்திருங்கள் என பதிவிட்டுள்ளது.
- திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருந்தது.
- ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Lik) திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்ட்டது.
விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், 'டூட்' படம் அதே நாளில் வெளியாவதால் Lik படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்தது. அதனை தொடர்ந்து, Lik படம் டிசம்பர் மாதம் 18-ந்தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
எங்கள் டீசருக்கு கொடுத்த மாபெரும் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதே ஆர்வத்துடன் படம் வெளியாகும் வரை காத்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். வரும் வாரங்களில் படம் குறித்த பல புதிய அப்டேட்கள், பாடல்கள் உங்களை தேடி வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







