என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதியை நாளை அறிவிக்கிறது படக்குழு
    X

    கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதியை நாளை அறிவிக்கிறது படக்குழு

    • சூது கவ்வும், காதலும் கடந்து போகும் இயக்குனர் நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கியுள்ளார்.

    சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    கார்த்தியின் 26-வது படம் இதுவாகும். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

    Next Story
    ×