என் மலர்
சினிமா செய்திகள்
தொழில்முனைவோர் ஆவதற்கு முன்பு 1991- 2000களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விக்னேஷ். கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் பெரிய சாம்ராஜ்யத்தையும் வணிகத்தில் கட்டமைத்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்த 'இட்லி கடை' புரோமோஷன் நிகழ்ச்சியின்போது இசைஞானி இளையராஜாவின் 'சின்னத்தாயி' படத்தில் இருந்து 'நான் ஏரிக்கரை...' பாடலை நினைவு கூர்ந்திருந்தார் நடிகர் தனுஷ். காலத்தால் என்றும் அழியாத மெலோடி பாடலாக நிலைத்திருக்கும் அது இப்போதும் இசை ரசிகர்கள் மத்தியிலும் பல மியூசிக் ரியாலிட்டி ஷோக்களிலும் கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளது.
இந்தப் பாடலையும் படத்தையும் மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக நடிகர் தனுஷிற்கு சமீபத்தில் 'ரெட் ஃபிளவர்' மூலம் கம்பேக் கொடுத்திருக்கும் நடிகர் விக்னேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
"இதுபோன்ற காலத்தால் என்றும் நிலைத்திருக்கும் மெலோடி பாடலை கொடுத்த இளையராஜா அவர்களுக்கு நன்றி. அவரது இசையில் நானும் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமையான விஷயம். இந்தப் பாடலையும் அதில் வேலை பார்த்தவர்களையும் ரசிகர்கள் நிச்சயம் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள். இத்தருணத்தில், நான் எனது முதல் பட இயக்குநர் மறைந்த கணேஷ் ராஜா அவர்களை நினைவு கூறுகிறேன்" என்றார்.
மேலும், நடிகர் தனுஷிற்கும் 'இட்லி கடை' படக்குழுவினருக்கும் படத்தின் வெற்றிக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். படத்தின் அர்த்தமுள்ள கருத்துகள் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க உள்ளதாகவும் விக்னேஷ் தெரிவித்தார்.
- விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். கவின் விஜய் டி.வியில் புகழ்பெற்ற 'கனா காணும் காலங்கள்' சீரியலின் மூலம் சின்னத்திரை பயணத்தை துவங்கினார். பின் 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இதனால் கவினுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
பின்னர், கவின் 'நட்புனா என்ன தெரியுமா'படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக்பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிக்பாஸிற்கு பிறகு 'லிஃப்ட்' என்ற படத்தில் நடித்தார். ஓடிடி- யில் மட்டும் வெளியான 'லிஃப்ட்' திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து 'ஸ்டார்', 'கிஷ்', 'டாடா', 'ப்ளடி பக்கர்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கவின், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் புதிய படத்திற்கு HI என்று பெயரிடப்பட்டுள்ளது.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது. இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்துள்ளார்.
லோகா படத்தின் வசூல் மோகன்லால் நடித்த துடரும் படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் 18 நாளில் தாண்டியது.
இந்நிலையில், லோகா சாப்டர்-1 திரைப்படம் மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனை படைத்து அசத்தி உள்ளது.
உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள இப்படம், மலையாளத்தில் மட்டும் ரூ.110 கோடிக்கும் அதிகமாக வசூலாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஐ.டி. ஊழியர் கடத்தல் வழக்கில் நடிகை லட்சுமி மேனன் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
- செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு நடிகை லட்சுமி மேனன் தலைமறைவானார்
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள திருப்போனித்துரா பகுதியை சேர்ந்த பிரபல நடிகை லட்சுமி மேனன். இவர் மலையாள படங்கள் மட்டுமின்றி கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்தநிலையில் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள மதுபான பாருக்கு தனது தோழி உள்பட 3 பேருடன் கடந்த 24-ந்தேதி இரவு லட்சுமி மேனன் சென்றிருக்கிறார். அப்போது அங்கு மது அருந்த வந்திருந்த ஆலுவா பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவருக்கும், நடிகை உள்பட 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்ட 4 பேரும் மற்றொரு காரில் அவரை பின்தொடர்ந்து சென்று நடுரோட்டில் வழி மறித்து தகராறு செய்துள்ளனர். மேலும் ஐ.டி. ஊழியரை அவரது காரில் இருந்து இறக்கி, தங்களின் காரில் ஏற்றி தாக்கியுள்ளனர். அதன்பிறகு ஒரு இடத்தில் ஐ.டி.ஊழியரை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.
இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலையத்தில், ஐ.டி.ஊழியர் அலியார் ஷா சலீம் புகார் செய்தார். அவர் நடிகை லட்சுமிமேனன் உள்ளிட்ட 4 பேரும் தன்னை காரில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறியிருந்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.லட்சுமி மேனனின் ஆண் நண்பர்கள் அனீஸ், மிதுன், தோழி சோனாமோல் ஆகிய 3பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, பாரில் நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்டோருக்கும், ஐ.டி.ஊழியருக்கும் ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.
இதனையடுத்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு நடிகை லட்சுமிமேனன் தலைமறைவானார். அவர் எங்கு இருக்கிறார்? என்று போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நடிகை லட்சுமி மேனன் தரப்பில் கேரள ஐகோர்ட்டில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், நடிகை லட்சுமி மேனனுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு சமரசம் செய்துவிட்டதால், லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என எதிர் மனுதாரர் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 17 வரை அவரை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'பைசன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், 'பைசன்' திரைப்படம் வெளியாக 9 நாட்கள் உள்ள நிலையில் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
- நடிகர் மோகன் பாபுவுக்கு திருப்பதியில் சொந்தமாக பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது.
- நடிகர் மோகன் பாபுவுக்கு சொந்தமான பல்கலைகழகத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்பாபு பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என இவருக்கு பல முகங்கள் உண்டு.
இவர் ஆந்திராவில் தொகுதி ஒன்றில் போட்டியிட்டு எம்பி ஆனார். இவர் கிட்டத்தட்ட 500 திரைப்படங்களில் நடித்துள்ளார். பல விருதுகளையும் வென்றுள்ளார்.
நடிகர் மோகன் பாபுவுக்கு திருப்பதியில் சொந்தமாக பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதியில் உள்ள நடிகர் மோகன் பாபுவுக்கு சொந்தமான பல்கலைகழகத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமத்தை ரத்து செய்யவும் அரசுக்கு மாநில உயர்கல்வி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் மாணவர்களிடமிருந்து ரூ.26 கோடி கூடுதலாக கட்டணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
- மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரீஸில்டா புகார் .
- மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருணம் செய்து ஏமாற்றி விட்டார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என ஜாய் கிரிசில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரீஸில்டா புகார் ஒன்றை அளித்துள்ளார்.
வழக்கறிஞரும் மக்களவை உறுப்பினருமான சுதாவுடன் சென்று மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்தார்.
அந்த புகாரில், "மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாகவும் தன்னைப் போல் 10 பெண்களை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றியுள்ளார் என்றும் ஜாய் கிரிஸில்டா தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து பேசிய வழக்கறிஞர் சுதா, "மாதம்பட்டி ரங்கராஜ் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஜாய் கிரிஸில்டாவை ஏமாற்றியது போல தன்னையும் ஏமாற்றி விட்டதாக 10க்கும் மேற்பட்ட பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர். அந்த ஆவணங்களை சேகரித்து நீதிமன்றத்தில் கொடுக்கவுள்ளோம். அந்த பெண்களும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு கொடுக்க தயாராக உள்ளார்கள்.
இதனை தொடர்ந்து பேசிய ஜாய் கிரிஸில்டா, "எனக்கும் எனது குழந்தைக்கும் ஏதவது ஒன்று நடந்தால் அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
- விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
- திருச்செந்தூரில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முருகனை தரிசித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தனது மனைவியுடன் வருகை தந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் முருகனை தரிசித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், "ஜெயிலர் 2'ல் ரஜினியுடன் நடித்து வருகிறேன். விஜய் அரசியலுக்கு வரும்போதே அவர் பேசியது எனக்கு பிடித்தது. விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். 41 உயிர் போனது கஷ்டமாக இருந்தது. விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், திடீர் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
- தற்போது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’.
- பூஜை விழாவிற்காக பிரம்மாண்டமான கோவில் போன்ற செட்டை அமைத்து யாகம் வளர்த்து பூஜை நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் திரைப்படங்களை மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல். அந்நிறுவனம் தயாரிக்கும் படம் என்றாலே பிரமாண்டத்திற்கு குறைவே இருக்காது என்பதால் அப்படம் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
தற்போது, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படம் 'மூக்குத்தி அம்மன் 2'. இப்படத்திற்கான பூஜை மிகவும் விமர்சையாக நடைபெற்றது. பூஜை விழாவிற்காக பிரமாண்டமான கோவில் போன்ற செட்டை அமைத்து யாகம் வளர்த்து பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் திரைத்துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. அதாவது, வேல்ஸ் மியூசிக் நிறுவனத்தை தொடங்கி உள்ளது. மற்ற அனைத்து பெரிய இசை லேபிள் நிறுவனங்களைப் போலவே, வேல்ஸ் மியூசிக் படங்களின் ஆடியோ உரிமைகளையும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.


வேல்ஸ் மியூசிக் நிறுவன தொடக்க விழாவில் நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
- இந்த வருட இறுதியில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
- இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து 2.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
பிஸ்தா திரைப்படத்தை தொடர்ந்து உப்பு புளி காரம், கனா காணும் காலங்கள் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய இயக்குநர் ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம் 'ரஜினி கேங்'. இப்படத்தில் ரஜினி கிஷன் நாயகனாகவும் நாயகியாக திவிகாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ்,கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அசத்தியுள்ளது.
ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில், அவர்கள் எதிர்பாராவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள், அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என கலகலப்பான திரைக்கதையில், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது.

ஜெய் ஹிந்த், அஷ்டகர்மா போன்ற படங்களை தயாரித்துள்ள மிஷ்ரி எண்டர்பிரைசஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு படப்பை, மறைமலைநகர் போன்ற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த வருட இறுதியில் இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
பொறியாளன், போங்கு, சட்டம் என் கையில் போன்ற படங்களின் இசையமைப்பாளர் M.S. ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் 4 அற்புதமான பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து 2.5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
- கவின் 'நட்புனா என்ன தெரியுமா'படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார்.
- பிக்பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். கவின் விஜய் டி.வியில் புகழ்பெற்ற 'கனா காணும் காலங்கள்' சீரியலின் மூலம் சின்னத்திரை பயணத்தை துவங்கினார். பின் 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இதனால் கவினுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
பின்னர், கவின் 'நட்புனா என்ன தெரியுமா'படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக்பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிக்பாஸிற்கு பிறகு 'லிஃப்ட்' என்ற படத்தில் நடித்தார். ஓடிடி- யில் மட்டும் வெளியான 'லிஃப்ட்' திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து 'ஸ்டார்', 'கிஷ்', 'டாடா', 'ப்ளடி பக்கர்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் புதிய படத்தின் அப்டேட் இன்று மாலை 05.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார்.
- அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலை விபூதி பிரசாதமாக வழங்கப்பட்டது.
திருச்செந்தூர்:
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பார்க்கிங் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.
அவர் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் மூலவர், சண்முகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை மற்றும் பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலை விபூதி பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவிலில் இருந்து வெளியே வந்த அவருக்கு பக்தர்கள் வாழ்த்துகள் தெரிவித்தும், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.






