என் மலர்
சினிமா செய்திகள்
- சிவகார்த்திகேயன் நவம்பர் மாதம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் தனது அடுத்த படத்தை தொடங்க உள்ளார்.
- படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல் வரலாற்று கதையம்சத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா போன்றோர் நடித்துள்ளனர். இது அவரது 25-வது படமாகும். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் சிவகார்த்திகேயன் நவம்பர் மாதம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் தனது அடுத்த படத்தை தொடங்க உள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம்தான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
- விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியான படம் 'பாம்'.
- ஹிருத்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள படம் 'வார் 2'.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
ராம்போ:
அருள்நிதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ராம்போ' படத்தை, கொம்பன், குட்டிப்புலி, புலிக்குத்தி பாண்டி, விருமன் போன்ற படங்களைத் தந்த, புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி, இம்முறை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள "ராம்போ" நகர பின்னணியில் ஒரு அதிரடி ஆக்சன் கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.
ஒரு தைரியமான இளம் குத்துச்சண்டை வீரன், ஒரு பெண்ணுக்கு உதவ முயற்சிக்கும் போது தொடங்கும் கதை, அதன்பின் அவன் வாழ்க்கையில் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முத்தையாவின் இயக்கத்தில், உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன், அதிரடி, ஆக்சன் நிரம்பிய அழுத்தமான படமாக இப்படம் வெளிவரவுள்ளது. பிக் பாஸ் புகழ் ஆயிஷா இந்த படத்தின் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமாகி உள்ளார். மேலும் மலையாள நடிகர் ரஞ்சித் சஜீவ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். ஹரீஷ் பேரடி மற்றும் VTV கணேஷ் முக்கியமான வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவிக்க நாளை முதல் 'ராம்போ' படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்த்து ரசியுங்கள்...
மிராய்
கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான படம் 'மிராய்'. மனோஜ் மஞ்சு வில்லனாக நடித்துள்ள இப்படம் விதியும் தெய்வீகமும் மோதும் உலகில் அமைக்கப்பட்டுள்ள 'மிராய்', மனிதகுலத்திற்கு சமநிலையையும் நம்பிக்கையையும் மீட்டெடுக்க அனைத்து தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போர்வீரனின் கதையைச் சொல்கிறது.
அதிக விஎஃப்எக்ஸ் கலந்த கதையாக உருவான இப்படம் கடந்த மாதம் 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் சாதனை செய்தது. இந்த நிலையில், 'மிராய்' படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் நாளை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
வேடுவன்
தமிழில் மண்டேலா, குருதி ஆட்டம், கூலி, கைதி, லவ்வர் போன்ற படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் கண்ணா ரவி. இவர் தற்போது பவன் இயக்கத்தில் 'வேடுவன்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ராவினிதா, ஸ்ரீ காந்த், ஐஸ்வர்யா ரகுபதி, வினுஷா தேவி, லாவண்யா, ரேகா நாயர், பார்வதி, ஜீவா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜீ 5 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'வேடுவன்' வெப் தொடர் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த வெப் தொடர் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

வார் 2
ஹிருத்திக் ரோஷன் - ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள படம் 'வார் 2'. இந்தப் படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். படத்துக்கு ப்ரிதம் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், 'வார் 2' படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.
பாம்
விஷால் வெங்கட் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியான படம் 'பாம்'. இதில் ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், நாசர், அபிராமி மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
உருட்டு உருட்டு
இயக்குனர் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் காமெடி கதைக்களத்தில் வெளியான படம் 'உருட்டு உருட்டு'. இதில் கதாநாயகனாக நாகேஷின் பேரன் கஜேஷ் நடித்துள்ளார். இப்படம் நாளை சிம்பிலி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
திரிபநாதரி பார்பரிக்
மோகன் ஸ்ரீவத்சா இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவான படம் 'திரிபநாதரி பார்பரிக்'. இதில் சத்யராஜ், சத்யம் ராஜேஷ், உதய பானு மற்றும் சாஞ்சி ராய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாக உள்ளது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் நாளை வெளியாக உள்ளது.
- ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார்.
- பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது.
அந்த வகையில், தற்போது ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து பத்ரிநாத்திலிருந்து பாபாஜி குகைக்கு ரஜினிகாந்த் சென்றார். இந்நிலையில், பாபாஜி குகையில் நடிகர் ரஜினிகாந்த் தியானம் மேற்கொண்டார். இங்கு ஒரு வாரம் அவர் தங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயுள்ளன.
- காசியின் வரலாற்றை பேசும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படம் உருவாகி வருகிறது.
- ரூ.450 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி தற்போது மகேஷ்பாபு நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் மகேஷ்பாபு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். காசியின் வரலாற்றை பேசும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது. ரூ.450 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் தற்போது SSMB29 என்று அழைக்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் பெயர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வாரணாசி அல்லது ஜெனெரேஷன் 63 (Gen 63) என இப்படத்திற்கு பெயர் வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
- இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
- 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 'பைசன்' 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது.
படம் வெளியாவதற்கு இன்றும் 8 நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான போஸ்டர் மற்றும் பாடல்கள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இன்று 6 மணிக்கு 'காளமாடன் கானம்' பாடல் வெளியாக உள்ளதாக இயக்குநர் மாரிசெல்வராஜ் போஸ்டரை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
- முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி உருவாகி வருகிறது.
- படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4-வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், படம் "இதயம் முரளி". படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி உருவாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், இதயம் முரளி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் அமெரிக்காவில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
- செல்வராகவன் இயக்கத்தில், கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார்.
- இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் என்ற அடையாளத்துடன் அறிமுகம் கதாநாயகனாக நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் ஜி.வி.பிரகாஷ். 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் இரண்டு முறை தேசிய விருதை பெற்றுள்ளார்.
'சூரரைப் போற்று' மற்றும் வாத்தி படத்தில் பாடல்கள் அமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் தற்போது ஜி.வி.பிரகாஷ் தேசிய விருதை பெற்றுள்ளார்.
இதற்கிடையே, செல்வராகவன் இயக்கத்தில், கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். இப்படத்திற்கான பூஜை கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்று படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் தொடர்பான எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தன.

இந்த நிலையில், 'மெண்டல் மனதில்' படத்தின் 4-வது கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜி.வி.பிரகாஷ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'மெண்டல் மனதில்' படத்தின் 4-வது கட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற செல்வராகவன் சார் இயக்கத்தில்... இந்த குறிப்பிட்ட படத்திற்காக காத்திருங்கள். ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன ஆகிய படங்களுக்குப் பிறகு இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
- பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் உணவுப்பொருட்கள் விற்பனை மூலம் நிறைய வருமானம் கிடைக்கிறது.
- உணவுப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பி.வி.ஆர் ஐநாக்ஸ் புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.
சென்னை, பெங்களூரு போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்குகள் செயல்பட்டு வருகிறது.
பி.வி.ஆர் ஐநாக்ஸ் (PVR Inox) திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையால் வரும் வருமானத்தை போல உணவுப்பொருட்கள், குளிர்பானங்களின் விற்பனை மூலம் நிறைய வருமானம் கிடைக்கிறது.
2022 ஆம் ஆண்டில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் (PVR Inox) திரையரங்கில் விற்பனை செய்த உணவுப்பொருட்கள், குளிர்பானங்களிலிருந்து 1,618 கோடி வருவாய் ஈட்டியது. அதுவே 2023 ஆம் ஆண்டில் ரூ.1,958.4 கோடி வருவாயாக அதிகரித்தது.
இந்நிலையில், உணவுப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பி.வி.ஆர் ஐநாக்ஸ் புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.
அதன்படி பெங்களூரில் உள்ள M5 ECity பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் இருக்கையிலேயே டைனிங் டேபிள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் படம் பார்க்க வரும் பொதுமக்கள் உணவு வாங்க வெளியே வராமல் அமரும் இடத்திலே உணவு கிடைக்கும் என்று பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நாம் கேட்கும் உணவுகளை உடனே சமைத்துத் தரும் 'லைவ் கிச்சன்' அமைப்பையும் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் டைனிங் டேபிளில் LED விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இருட்டில் அமர்ந்து சாப்பிடாமல் வெளிச்சத்தில் சாப்பிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்
- டியூட் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ மற்றும் 3 ஆம் சிங்கிளான சிங்காரி பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், 'டியூட்' படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
- மலையாளத்தில் மட்டும் ரூ.110 கோடிக்கும் அதிகமாக வசூலாகி உள்ளதாக தகவல் வெளியானது.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'லோகா'.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது. லோகா படத்தின் வசூல் மோகன்லால் நடித்த துடரும் படத்தின் ஒட்டுமொத்த வசூலையும் 18 நாளில் தாண்டியது.
உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள இப்படம், மலையாளத்தில் மட்டும் ரூ.110 கோடிக்கும் அதிகமாக வசூலாகி உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ரசிகர்களால் கொண்டாடப்படும் 'லோகா' ஓடிடி தளத்தில் வெளியாவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வருகிற 23-ந்தேதி 'லோகா' படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
- திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
- புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'பைசன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பைசன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துருவ் விக்ரம், 'பைசன்'படத்தை என்னுடைய முதல் படமாக பார்க்கிறேன். 100 சதவீத உழைப்பை கொடுத்திருக்கிறேன். இயக்குநர் மாரி செல்வராஜும் ரொம்ப உழைத்து, கஷ்டப்பட்டு இறங்கி சம்பவம் பண்ணியிருக்காரு என்று பேசியிருந்தார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே, 'பைசன்' திரைப்படம் வெளியாக 8 நாட்கள் உள்ள நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 'பைசன்' 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது.
ஜேஆர்ஜி புரொடக்ஷன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் ஜீவானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் ஆன்லைன் கேமிங் மற்றும் லோனை மையமாக வைத்து புதுமையான சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் "கேம் ஆஃப் லோன்ஸ்".
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 17ம் தேதி, தீபாவளிக்கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ளது.
தற்போதைய நவீன உலகில் எதை வேண்டுமானாலும் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளும், சாதித்துக்கொள்ளும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. ஆன்லைன் எந்தளவுக்கு வரமாகவுள்ளதோ, அதே போல் ஒரு பக்கம் சாபமாகவும் இருக்கிறது. இந்த மையக்கருவை வைத்து புதுமையான சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

வழக்கமான பாடல், ஃபைட், காமெடி என எந்த அம்சங்களும் இல்லாமல் முழுக்க வித்தியாசமான திரைக்கதையில், சுவாரஸ்யமான வகையில் 90 நிமிட கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் குறித்து இயக்குநர் அபிஷேக் லெஸ்லி கூறுகையில்," லாக்டவுன் காலத்தில் தான் இப்படத்தின் கரு எனக்கு தோன்றியது. நான் ஐடியில் வேலை பார்ப்பவன். ஏஐ-யிடம் ஒருவன் மாட்டிக்கொண்டால் என்னாகும் என குறும்படம் எடுத்தேன். அது கான்ஸ் திரை விழாவில் கலந்துகொண்டு விருது வென்றது.
லாக்டவுன் காலத்தில் ஆன்லைன் கேமிங் ஆன்லைன் லோன் என பலர் சிக்கிக்கொள்வதை தினமும் கேள்விப்பட்டேன். என் நண்பர்கள் பலரே இதில் மாட்டியிருக்கின்றனர். இதைப்பற்றிய விழிப்புணர்வு தரும் வகையில் ஏன் ஒரு படம் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் உருவானது தான் இப்படம்.
ஒரு கதைக்குப் பாடல்களோ காமெடியோ முக்கியமில்லை. மக்களைக் கதைக்குள் இழுக்கும் அவர்கள் அதை தங்களோடு தொடர்பு படுத்திக்கொள்ளும் அம்சம் இருந்தாலே போதும்.
எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் கடன் வாங்கியிருப்பார்கள் இந்தப்படம் பார்க்கும் போது இதை தங்கள் கதையாக உணர்வார்கள். கண்டிப்பாக மக்கள் ரசித்துப்பார்க்கும் ஒரு படமாக இப்படம் இருக்கும்" என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க பெங்களூரில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நாயகனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார். அபிநய் ஒரு எதிர்மறை பாத்திரத்தில் வில்லனாகக் கலக்கியுள்ளார். எஸ்தர், ஆத்விக் உடன் குழந்தை நட்சத்திரம் ஆத்விக் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜோ கோஸ்டா அருமையான பின்னணி இசையைத் தந்துள்ளார். சபரி மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் சென்சார் செய்யப்பட்டு U / A சான்றிதழ் பெறப்பட்ட நிலையில், வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தீபாவளி வெளியீடாக உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது.






