என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • டீசல் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17-ம் தேதி வெளியாகியது.
    • குழுவினரின் உழைப்பு பாராட்டுக்குரியது.

    சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா நடிக்கும் `டீசல்'. பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

    துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

    டீசல் திரைப்படம் அக்டோபர் 17-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் டீசல் படம் சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் எக்ஸ் தள பதிவிட்டில் கூறியிருப்பதாவது:-

    நேற்று டீசல் திரைப்படம் பார்த்தேன். சமூக அக்கறையோடு சொல்லப்பட்ட நல்லதொரு படம். குழுவினரின் உழைப்பு பாராட்டுக்குரியது என கூறினார்.

    • பைசன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • பைசன் படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு அண்மையில் வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், முன்னாள் கபடி வீரர் மனத்தி கணேசனின் உடற்பயிற்சி ஆசிரியர் தங்கராஜ் அவர்களை சந்தித்து இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் மனத்தி கணேசன் ஆகியோர் மரியாதை செய்தனர்.

    இதுகுறித்து மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அண்ணன் மனத்தி கணேசன் அவர்களின் பெருங்கனவுக்கு முதல் ஒளி ஏற்றிய பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் மெஞ்சனாபுரம் தங்கராஜ் சார் (சந்தனராஜ்) அவர்களை சந்தித்து என் மரியாதையையும் பெரு நன்றியையும் சமர்ப்பித்தேன்" என்று தெரிவித்தார்.

    • கருப்பு படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

    இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை. திரைப்படம் பொங்கலுக்கு வெளி வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் ரீ -ரெகார்டிங் பணிகளை சாய் அபயங்கர் முடித்துள்ளார்.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருப்பு படத்தின் முதல் சிங்கிளான 'GOD MODE' இன்று வெளியானது.

    • துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார்
    • இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ நடிக்கிறார்.

    மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    அடுத்ததாக துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

    இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

    இப்படம் செப்டம்பர் 12 வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி போதிக்கப்பட்டது. இந்நிலையில், 'காந்தா' திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    • தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
    • சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

    நாடு முழுவதும் தீபாவளி கொண்ட்டாட்டம் களைகட்டியுள்ளது. புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுவரும் மக்கள், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

    இதனையடுத்து தன் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

    • படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
    • படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா, எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா, எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை அனிருத் மேற்கொள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொள்கிறார். படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜெயிலர் 2 படத்தின் BTS வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    • கருப்பு படத்தின் முதல் சிங்கிளான 'GOD MODE' இன்று வெளியாகிறது.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

    இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை. திரைப்படம் பொங்கலுக்கு வெளி வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் ரீ -ரெகார்டிங் பணிகளை சாய் அபயங்கர் முடித்துள்ளார்.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'கருப்பு' படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    மேலும், தீபாவளியான இன்று கருப்பு படத்தின் முதல் சிங்கிளான 'GOD MODE' வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

    • விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்
    • உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

    கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக தரப்பில் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக திருப்பாச்சி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த மல்லிகா பேசியுள்ளார்.

    விஜய் குறித்து மல்லிகா வெளியிட்டுள்ள வீடியோவில், "இன்ஸ்டாகிராமில் விஜய் சார் பத்திதான் வீடியோ வருகிறது. அவருக்கு நிறைய பேர் சப்போர்ட் பண்ணி பேசுகிறார்கள். நானும் அவரைப் பத்தி பேசணும்'னு நினைக்கிறேன். படப்பிடிப்பில் எல்லாம் அவர் ரொம்ப அமைதியா இருப்பாரு. ஆனால் கட்சி தொடங்கி மக்கள் கிட்ட பேசும்போது அவர் கிட்ட நிறைய மாற்றம் தெரியுது. அதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா உள்ளது.

    அவர் கேமரா முன்னாடி மட்டும் தான் நடிப்பார் மக்கள் முன்னாடி அல்ல. நல்லது செய்ய வந்தால் தப்பா சில விஷயம் நடக்கும் ஆனா, கடைசியில அவர் தான் ஜெயிப்பார். கூட்டத்துல சதி பண்ண சிலர் வருவாங்க கொஞ்சம் பார்த்து உஷாரா இருங்க அண்ணா" என்று தெரிவித்துள்ளார். 

    கோவிலுக்குள் இருக்கும் வைரத்தை கைப்பற்ற போலி சாமியாராக நுழையும் ஆசாமி விடும் கம்பி கட்ன கதை.

    நாயகன் நட்டி நட்ராஜ் மோசடி செய்து மக்களிடம் பணம் பறித்து வாழ்ந்து வருகிறார். இவர் பல லட்சம் கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

    வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடத்தில் அரசியல்வாதி ஒருவர் கோவில் ஒன்றை கட்டிவிடுகிறார். வைரத்தை கைப்பற்றுவதற்காக சாமியார் வேடமிட்டு கோவிலுக்குள் நுழைகிறார் நட்டி நட்ராஜ். மேலும், அந்த கோவிலை தனது ஆசிரமமாக மாற்றிக் கொண்டு சாமியாராக வாழ்ந்துக் கொண்டே வைரத்தை தேடுகிறார்.

    இறுதியில் நட்டி நட்ராஜ்க்கு வைரம் கிடைத்ததா? இல்லையா ? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நாயகனாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், கதாபாத்திரத்தை உணர்ந்து அசால்டாக நடித்திருக்கிறார். ஏற்கனவே இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால், இதில் சாதாரணமாக நடித்து இருக்கிறார். படம் முழுவதும் அதிகம் பேசிக்கொண்டே இருக்கிறார். மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் முக்கேஷ் ரவி, ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக்காட்சியில் தனது சிக்ஸ் பேக் உடம்பை காட்டுவதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.

    நாயகிகளாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி மற்றும் ஷாலினி இருவரும் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். சிங்கம் புலி, கோதண்டம், முருகானந்தம், சாம்ஸ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி. போலி சாமியாரின் ஆசிரமத்தையும், அங்கு நடக்கும் பலான சம்பவங்களை வைத்துக் கொண்டு மக்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. காமெடி நடிகர்களை சரியாக பயன்படுத்த தவறி இருக்கிறார்.

    இசை

    சதீஷ் செல்வம் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜெய் சுரேஷ் தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    'பைசன்' படக்குழுவுக்கு இயக்குநர் லிங்குசாமி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட 'பைசன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.

    இப்படம் தீபாவளி முன்னிட்டு கடந்த 17ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், பைசன் படத்தை பார்த்த இயக்குனர் லிங்குசாமி படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில்," பைசன் படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜின் உலகத்தை விட்டு என்னால் வெளிவர முடியவில்லை.

    துருவ் விக்ரமின் அசாத்திய முயற்சியும், அமீர், பசுபதி, லால் ஆகியோரின் கதாபாத்திரங்களும் அற்புதமாக எழுதப்பட்டு இருந்தன.

    நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்களும், இசையும் படத்திற்கு உயிரூட்டி உள்ளன. படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என்றார்.

    காந்தாரா படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.

    இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    'காந்தாரா சாப்டர்1' படம் வெளியாகி 2 வாரங்களில் உலக அளவில் இதுவரை ரூ.717.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் விரைவில் ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தின் இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரிஷப் ஷெட்டி ராமேஸ்வரத்தில் உள்ள ராமணதாசுவாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.

    அவருக்கு அங்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கருப்பு படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

    இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை. திரைப்படம் பொங்கலுக்கு வெளி வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் ரீ -ரெகார்டிங் பணிகளை சாய் அபயங்கர் முடித்துள்ளார்.

    கருப்பு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதியை படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 20ம் தேதி அன்று கருப்பு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் பாடல் 'GOD MODE' நாளை வெளியாகும் நிலையில், இப்பாடலின் ப்ரோமோ இன்று மாலை வெளியாகியுள்ளது.

    ×