துல்கர் சல்மான் நடித்துள்ள 'காந்தா' படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு

துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார் இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ நடிக்கிறார்.
துல்கர் சல்மான் நடித்துள்ள 'காந்தா' படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு
Published on

மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இப்படம் செப்டம்பர் 12 வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி போதிக்கப்பட்டது. இந்நிலையில், 'காந்தா' திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com