என் மலர்
சினிமா செய்திகள்

கம்பி கட்ன கதை- விமர்சனம்
நாயகன் நட்டி நட்ராஜ் மோசடி செய்து மக்களிடம் பணம் பறித்து வாழ்ந்து வருகிறார். இவர் பல லட்சம் கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடத்தில் அரசியல்வாதி ஒருவர் கோவில் ஒன்றை கட்டிவிடுகிறார். வைரத்தை கைப்பற்றுவதற்காக சாமியார் வேடமிட்டு கோவிலுக்குள் நுழைகிறார் நட்டி நட்ராஜ். மேலும், அந்த கோவிலை தனது ஆசிரமமாக மாற்றிக் கொண்டு சாமியாராக வாழ்ந்துக் கொண்டே வைரத்தை தேடுகிறார்.
இறுதியில் நட்டி நட்ராஜ்க்கு வைரம் கிடைத்ததா? இல்லையா ? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், கதாபாத்திரத்தை உணர்ந்து அசால்டாக நடித்திருக்கிறார். ஏற்கனவே இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால், இதில் சாதாரணமாக நடித்து இருக்கிறார். படம் முழுவதும் அதிகம் பேசிக்கொண்டே இருக்கிறார். மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் முக்கேஷ் ரவி, ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக்காட்சியில் தனது சிக்ஸ் பேக் உடம்பை காட்டுவதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.
நாயகிகளாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி மற்றும் ஷாலினி இருவரும் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். சிங்கம் புலி, கோதண்டம், முருகானந்தம், சாம்ஸ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி. போலி சாமியாரின் ஆசிரமத்தையும், அங்கு நடக்கும் பலான சம்பவங்களை வைத்துக் கொண்டு மக்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. காமெடி நடிகர்களை சரியாக பயன்படுத்த தவறி இருக்கிறார்.
இசை
சதீஷ் செல்வம் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஜெய் சுரேஷ் தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.






