என் மலர்
சினிமா செய்திகள்
- 'டியூட்' படத்தில் இளையராஜாவின் கருத்த மச்சான் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- கருத்த மச்சான் பாடல் 2K கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
அனுமதியின்றி தனது பாடல்களை வேறு படங்களுக்கு பயன்படுத்தியதாக சோனி மியூசிக், எக்கோ ரெகார்டிங், ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இளையராஜா இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் தொடர்பான விவரங்களை சீலிட்ட கவரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் இன்று தாக்கல் செய்தது.
அப்போது, Dude திரைப்படத்தில் கூட தனது இரண்டு பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக இளையராஜா தரப்பு வாதம் முன்வைத்தனர். அது தொடர்பாக தனியாக வழக்குத் தொடரலாம் என நீதிபதி செந்தில்குமார் தெரிவித்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
'டியூட்' படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் கருத்த மச்சான் பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கு மமிதா பைஜூ ஆடியுள்ள நடனம் 2K கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது.
- இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது.
இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. தன் மாமன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய தயாராகும் நாயகனுக்கு, அப்பெண்ணுக்கு வேறொருவர் பிடித்திருப்பது தெரிந்தும் திருமணம் செய்து பின்னர், அப்பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க நாயகன் பாடுபடுவதும், அதன்பின் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க நாயகி பாடுபடுவதும் என சாதிக்கு எதிராக படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது.
அதன்படி, 'டியூட்' படம் வெளியான நாள் முதல் வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியான ஐந்து நாட்களில் உலகளவில் ரூ.95 கோடி வசூலை குவித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
- தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
- கடந்தாண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தீபிகா படுகோனேவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கடந்தாண்டு கர்ப்பமானார். செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதி தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு துவா படுகோனே சிங் (Dua Padukone Singh) என பெயர் சூட்டினர்.
இந்நிலையில், ஓராண்டுக்கு பிறகு தங்களது பெண் குழந்தையின் முகத்தை வெளி உலகத்துக்கு தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
- ‘பைசன்’ படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
- மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது.
இதனிடையே, 'பைசன்' படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், 'பைசன்' படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன். படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்' -சூப்பர் ஸ்டார்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
- டியூட் படம் 4 நாட்களில் உலகளவில் ரூ.83 கோடி வசூலை குவித்துள்ளது.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 4 நாட்களில் உலகளவில் ரூ.83 கோடி வசூலை குவித்துள்ள 'டியூட்' படம் விரைவில் 100 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'டியூட்' படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் கருத்த மச்சான் பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கு மமிதா பைஜூ ஆடியுள்ள நடனம் 2K கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில், கருத்த மச்சா பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடி பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
- துருவ் விக்ரம் பைசன் படத்தில் கபடி வீரராக நடித்துள்ளார்.
- பைசன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விக்ரமின் மகன் துருவ், ஆதித்யா வர்மா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முதலில் ஆதித்யா வர்மா படத்தில் நடித்தார். பின்னர் மகான் படத்திலும் தன் தந்தையுடன் சேர்ந்து நடித்தார்.
இதனையடுத்து பைசன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இதில் அவர் கபடி வீரராக நடித்திருந்தார். இந்த படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பைசன் திரைப்படத்திற்கு பிறகு, துருவ் விக்ரம் யார் படத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் பாபுவுடன் துருவ் விக்ரம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டாடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
- 150 நாட்களுக்கு மேல் நடைபெற்ற படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட், அம்மு அபிராமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ராம் குமார் இயக்கத்தில் வெளியானது 'ராட்சசன்' திரைப்படம். இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.
சுமார் 7 வருடங்கள் கழித்து இயக்குனர் ராம் குமார் உடன் 'இரண்டு வானம்' படம் மூலம் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்துள்ளார். கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஒரு ஃபேண்டசி ரொமான்டிக் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். 150 நாட்களுக்கு மேல் நடைபெற்ற படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'இரண்டு வானம்' படம் திரைக்கு வர தயாராக உள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார். 'இரண்டு வானம்' மிக நீளமான ப்ராஜெக்ட். இது தனக்கு மிகவும் விசேஷமான படமாக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 'இரண்டு வானம்' வெளியாக வாய்ப்புள்ளதாகவும் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து 'கட்டா குஸ்தி 2', அருண்ராஜா காமராஜ் உடன் ஒரு படமும், பேச்சுலர் பட இயக்குநருடன் ஒரு படம், அடுத்து 25-வது படம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது என்றார்.
- இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
- இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், 'டியூட்' படம் வெளியான நாள் முதல் வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியான நான்கு நாட்களில் உலகளவில் ரூ.83 கோடி வசூலை குவித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
- தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.
2001-ம் ஆண்டு நடிகர்கள் விஜய்- சூர்யா இணைந்து நடித்து வெளியான படம் 'ஃப்ரண்ட்ஸ்'. இப்படத்தில் தேவயானி, ராதாரவி, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி, ஸ்ரீமன், விஜயலட்சுமி, மதன் பாப், சரிதா உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர்.
மலையாள திரைப்படமான 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை தழுவியே இப்படம் வெளிவந்தது. சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திலும், கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் மீண்டும் 4-கே டிஜிட்டல் முறையில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் அடுத்த மாதம் 21-ந்தேதி மீண்டும் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் வெளியாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில், 'ப்ரண்ட்ஸ்' படமும் வெளியாக உள்ளதாக ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

- லண்டனில் தனது முதல் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றி இருந்தார்.
- அண்மையில் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். வரவிருக்கும் புதிய படங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகின.
இந்த நிலையில், ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துடன் அடுத்த சிம்பொனி குறித்த அறிவிப்பை இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இசையராஜா கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் இனிய தீபாவாளி வாழ்த்துகள். அடுத்த சிம்பொனிக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளேன். Symphonic Dances என்ற புதிய இசைக் கோர்வையையும் எழுத உள்ளேன் என்றார்.
முன்னதாக, லண்டனில் தனது முதல் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றி இருந்தார். இதனை தொடர்ந்து, அண்மையில் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் (25-வது படம்) நடிக்கும் படம் பராசக்தி. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.
இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது என படக்குழு தெரிவித்த நிலையில், அதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் இப்படம் திரைக்கு வருகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி படக்குழுவினர், நடிகர்கள், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வரவிருக்கும் படங்களின் போஸ்டரை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் மகுடம் படக்குழு இன்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் இப்படத்தை விஷால் இயக்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ரவி அரசு இயக்கும் படத்திற்கு மகுடம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் இயக்குனர் விஷால் எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஷால் திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸின் 99ஆவது படமாகும். ரவி அரசு கதையை விஷால் இயக்குகிறார்.






