என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஆர்யன்.
    • இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷாலின் 25-வது படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

    வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஆர்யன். இப்படத்தை அறிமுக இயக்குநரான பிரவீன் இயக்கியுள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ஆர்யன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 31ம் தேதி வெளியாகிறது.

    இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் 25-வது பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஷ்ணு விஷாலின் 25-வது படத்தை லெவன் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜ்லீஸ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தை Stone Bench நிறுவனம் தயாரிக்கிறது.

    திரையரங்குகளில் ஓரளவு வெற்றிப்படமான லெவன் ஓடிடி வெளியீட்டில் பெரிதாகக் கவனிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

    அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இதனை தொடர்ந்து, பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார்.

    இப்படம் 1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

    இந்த நிலையில், 'கொம்புசீவி' படத்தின் முதல் சிங்கிளான 'உன்ன நான் பாத்த' பாடல் இன்று மாலை 4.45 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. 

    • தொடரில் நடித்து வரும் ஸ்மிரிதி இரானி, யாரோ ஒருவருடன் வீடியோ காலில் பேசுகிறார்.
    • நாங்கள் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறுகிறார்.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்டின் இணை நிறுவனர், பில்கேட்ஸ். அத்துடன் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மிகுந்த பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர்.

    இந்த பணி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவின் பிரபல இந்தி டி.வி. தொடரில் முதல் முறையாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

    அந்தவகையில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான ஸ்மிரிதி இரானி நடித்து வரும் 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி 2' என்ற தொலைக்காட்சி தொடரில் பில் கேட்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த தொடருக்கான முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. அதில் அந்த தொடரில் நடித்து வரும் ஸ்மிரிதி இரானி, யாரோ ஒருவருடன் வீடியோ காலில் பேசுகிறார்.

    அதில், 'ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா' என தொடங்கும் ஸ்மிரிதி இரானி, 'நீங்கள் அமெரிக்காவில் இருந்து நேரடியாக என் குடும்பத்துடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்' என கூறுகிறார்.

    அவருடன் எதிர்முனையில் பேசியது பில்கேட்ஸ்தான் என பின்னர் ஸ்மிரிதி இரானி உறுதிப்படுத்தினார். இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும் அவர் கூறினார்.

    முன்னதாக அமெரிக்காவின் பிரபல டி.வி. தொடரான 'தி பிக் பேங்க் தியரி' என்ற நிகழ்ச்சியிலும் பில்கேட்ஸ் தலைகாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கீர்த்தி செதுக்கிய சரத்குமாரைதான் நீங்கள் திரையில் பார்த்தீர்கள்.
    • பிரேக்கப் சீனில் மமிதா மிகச்சிறப்பாக நடித்திருந்தார்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'டியூட்'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியானது முதல் வசூல் குவித்து வரும் நிலையில் 5 நாட்களில் ரூ.95 கோடி வசூலித்தது. விரைவில் ரூ.100 கோடியை எட்டுகிறது.

    இதனை தொடர்ந்து, 'டியூட்' படம் வெற்றி அடைந்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் சரத்குமார் பேசுகையில்,

    "படத்திற்கு ஆதரவு கொடுத்த மீடியா, ரசிகர்களுக்கு நன்றி. படத்தில் வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு நன்றி. அப்பா, தாத்தா கதாபாத்திரங்கள் வெறுமனே நடிக்காமல் அந்தக் கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் 'காஞ்சனா', 'போர் தொழில்' போன்ற படங்களில் நடித்தேன்.

    'டியூட்' படத்திலும் நல்ல கதாபாத்திரம் கொடுத்த கீர்த்திக்கு நன்றி. அழகான சோஷியல் மெசேஜை சரியாக கீர்த்தி கொண்டு சேர்த்திருக்கிறார். மூன்று முறை இந்தப் படம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிதாக தெரிகிறது. கீர்த்தி செதுக்கிய சரத்குமாரைதான் நீங்கள் திரையில் பார்த்தீர்கள். பிரேக்கப் சீனில் மமிதா மிகச்சிறப்பாக நடித்திருந்தார். எல்லோருமே சிறப்பாக 'டியூட்' படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி என்றார். 

    • தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
    • தந்தை போலவே மகனும் படத்திற்காக கடின உழைப்பு கொடுத்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் ஆரம்ப காலக்கட்டத்தில் பல படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கென அடையாளம் தந்தது 'சேது' படம் தான். அப்படத்தில் விக்ரம் நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது. அதனை தொடர்ந்து பல படங்களை நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவர் பல விருதுகளை பெற்றுள்ளார்.

    படத்திற்காக தனது கடின உழைப்பை கொடுத்து தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுபவர் விக்ரம் என்றால் மிகையாகாது.

    இந்த நிலையில், தனது மகன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள 'பைசன்' படத்திற்காக துருவ் விக்ரம் தீவிர பயிற்சி மேற்கொண்ட வீடியோவை விக்ரம் பகிர்ந்து பெருமிதம் கொண்டுள்ளார்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். தந்தை போலவே மகனும் படத்திற்காக கடின உழைப்பு கொடுத்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • ‘பைசன்’ படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
    • ‘பைசன்’ படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் என அறிவிப்பு.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    'பைசன்' படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், 'பைசன்' படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு இயக்குநர் மாரிசெல்வராஜ் நன்றி தெரிவித்தார்.

    தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.35 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தமிழில் வரவேற்பை பெற்ற 'பைசன்' படம் விரைவில் தெலுங்கில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    டியூட் பட வெற்றியை தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

    இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. 'டியூட்' படம் வெளியான நாள் முதல் வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியான ஐந்து நாட்களில் உலகளவில் ரூ.95 கோடி வசூலை குவித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் டியூட் படம் வெற்றி அடைந்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

    இவ்விழாவில் பேசிய டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூறியதாவது:-

    இன்றைய நாளில் டியூட் திரைப்படம் 95 கோடியை கடந்துள்ளது. நாளை 100 கோடியை அடைந்துவிடும். அப்படி என்றால், அத்தனை கால் தடங்கள் பதிந்துள்ளது. இது கதையை ஏற்றுக் கொண்டதற்கான அறிகுறி.

    இதற்காக, ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    டியூட் பல விவாதத்தை ஏற்படுத்தியதாக சொல்றாங்க. இது தமிழ்நாடு, இந்த மாநிலத்தில் நிறைய பெரியவர்கள் இருந்தனர். ஒரு பெரியவரும் இருந்தார். அவர்கள் சொல்லாததை நாங்கள் சொல்லவில்லை. அவர்கள் வழியில்தான் நாங்களும் சொல்லி வருகிறோம். எனது அடுத்தடுத்த படங்களிலும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர்.

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

    இதைதொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்றது.

    இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார்.

    அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நதியே மியூசிக் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

    இந்நிலையில், தி கேர்ள் ஃபிரண்ட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அந்த வகையில், இப்படத்தின் டிரெய்லர் வரும் 25ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

     

    தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

    மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    அடுத்ததாக துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

    இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

    இப்படம் செப்டம்பர் 12 வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. 'காந்தா' திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், காந்தா படத்தின் கண்மணி நீ பாடலில் லிரிக்கல் வீடியோ வெளியானது.

    • டியூட் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது
    • விரைவில் இப்படம் ரூ.100 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. தன் மாமன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய தயாராகும் நாயகனுக்கு, அப்பெண்ணுக்கு வேறொருவர் பிடித்திருப்பது தெரிந்தும் திருமணம் செய்து பின்னர், அப்பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க நாயகன் பாடுபடுவதும், அதன்பின் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க நாயகி பாடுபடுவதும் என சாதிக்கு எதிராக படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது.

    அதன்படி, 'டியூட்' படம் வெளியான நாள் முதல் வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியான ஐந்து நாட்களில் உலகளவில் ரூ.95 கோடி வசூலை குவித்துள்ளது. விரைவில் இப்படம் ரூ.100 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் டியூட் படம் வெற்றி அடைந்ததற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய பிரதீப் ரங்கநாதன், "இந்தப் படம் நிறைய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது. ஒரு சிலருக்கு படம் குறித்து மாற்று கருத்துகள் உள்ளது. ஆனாலும் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் போது படம் அவர்களுக்கும் பிடித்துவிடும். இந்த படம் பல ஆண்டுகளுக்கு பார்க்கப்பட்டு கொண்டே இருக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    • 'டியூட்' படத்தில் இளையராஜாவின் கருத்த மச்சான் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
    • கருத்த மச்சான் பாடல் 2K கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    அனுமதியின்றி தனது பாடல்களை வேறு படங்களுக்கு பயன்படுத்தியதாக சோனி மியூசிக், எக்கோ ரெகார்டிங், ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இளையராஜா இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் தொடர்பான விவரங்களை சீலிட்ட கவரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் இன்று தாக்கல் செய்தது.

    அப்போது, Dude திரைப்படத்தில் கூட தனது இரண்டு பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக இளையராஜா தரப்பு வாதம் முன்வைத்தனர். அது தொடர்பாக தனியாக வழக்குத் தொடரலாம் என நீதிபதி செந்தில்குமார் தெரிவித்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    'டியூட்' படத்தில் பயன்படுத்தப்பட்ட இளையராஜாவின் கருத்த மச்சான் பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கு மமிதா பைஜூ ஆடியுள்ள நடனம் 2K கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது.
    • இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது.

    இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. தன் மாமன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய தயாராகும் நாயகனுக்கு, அப்பெண்ணுக்கு வேறொருவர் பிடித்திருப்பது தெரிந்தும் திருமணம் செய்து பின்னர், அப்பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க நாயகன் பாடுபடுவதும், அதன்பின் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க நாயகி பாடுபடுவதும் என சாதிக்கு எதிராக படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது.

    அதன்படி, 'டியூட்' படம் வெளியான நாள் முதல் வசூல் குவித்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியான ஐந்து நாட்களில் உலகளவில் ரூ.95 கோடி வசூலை குவித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 



    ×