என் மலர்
சினிமா செய்திகள்
- இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார் .
- இப்படம் கவினின் 9-வது படமாகும்.
இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் கவின்- பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார் . ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரிலான இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார். இப்படம் கவினின் 9-வது படமாகும்.
கவின் மற்றும் பிரியங்கா மோகன் முதன்முறையாக இணைந்திருப்பதால் இப்படத்தின் அறிவிப்பு வெளியான உடனே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், 'Kavin 09' படத்தில் நடன மாஸ்டர் சாண்டியும் கவினுடன் இணைந்திருப்பதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'பிக் பாஸ் தமிழ் சீசன் 3'-ல் தங்களின் நட்பின் மூலம் ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்த நடிகர்கள் கவின் மற்றும் சாண்டி ஆகியோர் புதிய படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். "The Boys Are Back" என்று கூறி வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதில் "The Boys" என்ற வார்த்தை இவர்கள் பங்கேற்ற 'பிக் பாஸ் தமிழ் சீசன் 3'-ன் போது பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
- இப்படத்திற்கு தரண்குமார் இசையமைக்கிறார்.
- ‘மெஜந்தா’ படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சாந்தனு பாக்யராஜ்- அஞ்சலி நாயர் நடிக்கும் படம் 'மெஜந்தா'. பரத் மோகன் இயக்கும் இப்படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு தயாரித்து வழங்குகின்றனர்.
'மெஜந்தா' படத்தில் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பல்லு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தரண்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி சென்னையிலும், கோத்தகிரியிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'மெஜந்தா' படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதனிடையே, 'மெஜந்தா' படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
- படத்தின் படப்பிடிப்பை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- எனக்கும் காமெடி படங்கள் தான் அதிகம் பிடிக்கும்.
ஜெய் அமர்சிங் இயக்கத்தில் பி.ஜே.கிஷோர் தயாரிப்பில் காமெடி மற்றும் பொழுதுபோக்கு ஜானரில் உருவாகும் படம் 'தி மம்மி ரிட்டர்ன்ஸ்'. படத்தின் பூஜை சென்னையில் தொடங்கியது. விழாவில் இயக்குனர்கள் விஷ்ணுவர்தன், ஐ.அகமது ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
படத்தில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பியோர்ன், தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

படம் குறித்து இயக்குநர் ஜெய் அமர் சிங் கூறியதாவது:-
நான் லண்டனில் ஃபிலிம் இண்ட்ஸ்டிடியூட் படித்து விட்டு சென்னையில் இயக்குநர் அகமதிடம் "என்றென்றும் புன்னகை" படத்தில் பணிபுரிந்தேன். ஆக்சன் படங்கள் அதிகமாக வரும் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் காமெடி படங்களுக்கு ஏங்குகிறார்கள். எனக்கும் காமெடி படங்கள் தான் அதிகம் பிடிக்கும். எனவே தான் இந்தப்படத்தை முழுக்க முழுக்க ரசிகர்கள் சிரித்து மகிழும் படமாக வடிவமைத்துள்ளேன். ஒரு தாயை காப்பாற்ற மகன் என்னவெல்லாம் செய்கிறான் என்பது தான் படம், எமோஷனலான கதையை, மக்கள் வயிறு வலிக்க சிரிக்கும்படி சொல்லப்போகிறோம் என்றார்.
இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். மணிகண்ட பாலாஜி எடிட்டிங் செய்கிறார். கார்த்திக் சுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார் என்றார்.
- இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', 'அஞ்சான்', தனுஷின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'மௌனம் பேசியதே' படம் மீண்டும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை என்றாலும் காதல் தினத்தையொட்டி அடுத்த மாதம் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'மௌனம் பேசியதே'. த்ரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பொங்கலையொட்டி விஜயின் 'தெறி' படமும் மீண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
- படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஸ்பிரிட்'. இதில் பிரபாஸ் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி உள்ளார்.
மேலும், பிரகாஷ் ராஜ், விவேக் ஓபராய், காஞ்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கொரிய சூப்பர் ஸ்டார் டான் லீயும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'ஸ்பிரிட்' படம் 2027-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி வெளியாகும் என படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார்.
- ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
- இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியான படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்து இருந்தார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்து இருந்தார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.
'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் குவித்தது.
இந்த நிலையில் 'சிறை' படத்தின் ஓ.டி.டி. வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'சிறை' படம் குடியரசு தினத்தையொட்டி வருகிற 23-ந்தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
மராட்டிய மன்னர் சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்தன.
'சாவா' (Chhava) திரைப்படத்தின் இசை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மிக முதிர்ச்சியான மற்றும் அழுத்தமான பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரு வரலாற்றுப் படத்திற்கு இசை அமைக்கும் போது, அந்த காலகட்டத்தின் ஆன்மாவை சிதைக்காமல், அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும். நான் எப்போதும் பரிசோதனைகளை (Experiments) விரும்புபவன்
இந்தப் படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அது சம்பாஜி மகாராஜின் வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவி. அதை உணர்வுப்பூர்வமாக அணுகியுள்ளேன்.
விமர்சனங்கள் எப்போதும் வரும். அவை கலைஞனை செதுக்கும். ஆனால், ஒரு படைப்பை முழுமையாகப் பார்த்த பிறகு அதன் பின்னணியைப் புரிந்துகொண்டால் அந்த இசையின் நோக்கம் புரியும்.
சாவா பிரிவினையை பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன்.
ஆனால், 'வீரத்தை காட்டுவது'தான் அப்படத்தின்
மையக்கருவாக நான் பார்க்கிறேன்.
'இப்படத்திற்கு நான் ஏன் தேவை?' என அதன் இயக்குநரிடம் கேட்டேன். 'நீங்கள் மட்டும்தான் இப்படத்திற்கு தேவை' என பதிலளித்தார்.
இப்போது சிலர் "90ஸ் காலத்தில் ரோஜா மாதிரி நல்ல இசை கொடுத்தீர்கள்" என்று சொல்கிறார்கள். அதை கேட்கும்போது, இப்பொழுது நான் நல்ல இசையை தரவில்லையா? என்ற எண்ணம் உருவாகிறது. அது மனதளவில் பாதிப்பை உண்டாக்குகிறது
கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 20–30 படங்களுக்கு இசை அமைத்திருக்கேன். இப்போது எனக்காக கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரபல நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தனுஷ் கடந்த ஆண்டில் குபேரா படத்திலும், இட்லி கடை படத்தை இயக்கியும் நடித்திருந்தார்.
இந்தியில் தேரே இஷ்க் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, வேல்ஸ் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில், போர்த் தொழில் இயக்குநர் விக்னேஷ்ராஜா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகி இருக்கும் கர படத்தில் தனுஷ் நடித்துள்ளா்.
மாறுபட்ட கதைக்களத்தில், ஆக்ஷன் த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. இதுபோல், தனுஷ் அடுத்தடுத்து படங்களை கைவசத்தில் வைத்துள்ளார்.
தென்னிந்திய மற்றும் இந்தித் திரையுலகில் மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மிருணாள் தாகூர். மிருணாள் தாகூரும், தனுஷூம் இணைந்து இதுவரை எந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும், இருவருக்கிடையே கிசு கிசுக்கள் மட்டும் உலா வருகிறது.
'சன் ஆஃப் சர்தார் 2' பட விழாவில் தனுஷ் கலந்து கொண்டதும், அங்கு இருவரும் நெருக்கமாகப் பேசிப் பழகிய வீடியோக்களுமே இந்த வதந்திகள் பரவ முக்கியக் காரணமாக அமைந்தன.
இது குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்துள்ள மிருணாள், "தனுஷ் ஒரு சிறந்த நடிகர். அவர் அந்த விழாவிற்கு அஜய் தேவ்கனின் அழைப்பின் பேரில் வந்திருந்தார். மற்றபடி எங்களைப் பற்றி வரும் செய்திகளில் உண்மை இல்லை" என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், தனுஷ்- மிருணாள் தாகூர் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டேட்டிங்கிள் இருக்கும் இருவரும் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் ஏற்கனவே ரஜினி காந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து, 18 ஆண்டுகள் கழித்து விவாரகத்து செய்துக் கொண்டனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில், தனுஷ் மிருணா தாகூரை 2வதாக திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் நடித்திருந்தனர். இதன்பின்னர் இந்த மூவர்கள் கூட்டணி இணைந்துள்ள படம் 'காந்தி டாக்ஸ்'.
வசனங்கள் எதுவுமின்றி மெளனப் படமாக உருவாகியுள்ள காந்தி டாக்ஸ், டார்க் காமெடி ஜானரில் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
கிஷோர் பி பெல்லேக்கர் இயக்கியுள்ள 'காந்தி டாக்ஸ்' படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
மேலும், 'காந்தி டாக்ஸ்' படம் காந்தி நினைவுதினமான வருகிற 30-ந்தேதி உலகளவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், காந்தி டாக்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியாகியுள்ளது.
சென்னையில் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டீர்களா என செய்தியாளர்கள் வைரமுத்துவிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த வைரமுத்து கூறியதாவது:-
பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டேன்..ஆம், 1952ம் ஆண்டில் வெளிவந்த பராசக்தி திரைப்படத்தை பார்த்துவிட்டேன். முன்பே பார்த்து நான் வியந்து, மகிழ்ந்து, உணர்ந்த திரைப்படம்.
நடிகர் திலகம் என்கிற மாபெரும் கலைஞனும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் வசனகர்த்தாவும் தமிழ்நாட்டிற்கு கொடுத்த குடை என்று சொல்லவேண்டும்.
பராசக்தி 52-ல் வெளிவந்தது.. 53-ல் நான் பிறக்கிறேன். நான் வளர வளர பராசக்தி படித்து, கேட்டு வளர்ந்திருக்கிறேன். அந்த பராசக்தியின் உணர்வு இன்னும் என்நெஞ்சில் அப்படியே இருக்கிறது.
தற்போது வந்துள்ள பராசக்தி படத்தை நான் பார்க்கவில்லை. படம் பார்க்காமல் நான் கருத்து சொல்லக் கூடாது. முகர்ந்து பார்க்காமல் வாசனை சொல்லக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் ட்ரெயின். மிஷ்கின் கடைசியாக 2020ம் ஆண்டில் சைக்கோ படம் வெளியானது. இதில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஆகியோர் நடித்துருந்தனர். இந்தப் படம் இளையராஜாவின் இசையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதற்கிடையே, ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காகக் காத்திருக்கிறது. இதுவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் இன்று பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, ட்ரெய்ன் படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி கையில் ஒரு பையுடன், மிகவும் எதார்த்தமான அதே சமயம் தீவிரமான ஒரு தோற்றத்தில் காணப்படுகிறார்.
பெயருக்கு ஏற்றார் போலவே, இந்தப் படத்தின் கதை பெரும்பாலும் ரெயிலை மையமாக வைத்தே நகரும் ஒரு டார்க் த்ரில்லர் வகை எனத் தெரிகிறது.
- பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பாலமேடு ஜல்லிக்கட்டு சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இன்னும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது.
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிப்பதற்காக நடிகர் சூரி அரங்கத்துக்கு வந்தார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிற்பத்தை நினைவுப்பரிசாக சூரி வழங்கினார்.
இதன் பின்னர் நடிகர் சூரி நிருபர்களிடம் கூறுகையில், 'ஜல்லிக்கட்டு கலாச்சாரம் இடையில் குறையக்கூடிய சூழல் வந்தது. மீண்டும் எழுச்சி பெற்று தற்போது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு சென்ற வருடத்தைவிட இந்த வருடம் இன்னும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது' என்றார்.






