என் மலர்
சினிமா செய்திகள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது.
இந்நிலையில், பைசன் படத்தை பார்த்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாரி செல்வராஜை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.
அப்போது அவர்,"நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த ஒரு சினிமா இதை எடுத்த இயக்குனர் யார் என்று தேடவைத்தது மாரி செல்வராஜ். நீங்கள் தூரத்தில் இருக்கிறீர்கள் நான் இங்கிருந்தே பெரும் மன நிறைவோடு பைசனுக்காக உங்களை கட்டி தழுவுகிறேன் மாரி செல்வராஜ். அற்புதமான படைப்பு மாரி அருமை வாழ்த்துக்கள்" என்றார்.
வைகோவின் பாராட்டுக்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்," பைசன் பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக பைசனை பாராட்டி உச்சிமுகர்ந்த பெரும் மரியாதைக்குரிய ஐயா வைகோ அவர்களுக்கு எங்கள் நன்றியையும் அன்பையும் தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.
- ஆல்பத்தில் வாய்ப்பு தருவதாகக் கூறி போன் நம்பர் வாங்கியுள்ளார்.
- ஸ்டூடியோவுக்கு அழைத்து திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
பாலிவுட்டை சேர்ந்த பாடகரும், இசையமைப்பாளருமான சச்சின் சங்வி மீது பெண் ஒருவர் அளித்த புகார் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Stree 2 மற்றும் Bhediya உள்ளிட்ட ஹிட் பாடலை கொடுத்தவர் சச்சின் சங்வி. இவரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடர்பு கொண்டதாக 20 வயது இளம் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்பின் இன்ஸ்டாகிராமில் அந்த பெண்ணிற்கு சங்வி தகவல் அனுப்பியுள்ளார்.
அவருடைய ஆல்பத்தில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி, அந்த பெண்ணிடம் செல்போன் நம்பரை வாங்கியுள்ளார். அந்த பெண்ணும சங்வி எண்ணை வாங்கியுள்ளார்.
அந்த பெண்ணை ஒருநாள் ஸ்டூடியோவிற்கு வரவழைத்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் திருமணம் செய்ய இருப்பதாக தெரவித்துள்ளார். அத்துடன் பல சமயங்களில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண்ணின் புகார் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.
- சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்திருந்ததாக வனத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
- 2015ம் ஆண்டு யானை தந்தம் வைத்துக்கொள்வதற்கு உரிமம் கேரள அரசால் வழங்கப்பட்டது.
டிசம்பர் 21, 2011 அன்று, கேரள மாநிலம் கொச்சியின் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் இரண்டு ஜோடி யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்திருந்ததாக வனத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு அப்போதைய கேரள வனத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் மோகன்லால் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட் மோகன்லாலுக்கு 2015ம் ஆண்டு யானை தந்தம் வைத்துக்கொள்வதற்கு உரிமம் கேரள அரசால் வழங்கப்பட்டது. தந்தங்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
பின்னர், மாநில அரசு அவர் மீதான வழக்கை வாபஸ் பெற முயன்றபோது பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த முடிவை நிராகரித்தது.
கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மோகன்லால் உயர் நீதிமன்றத்தை அணுகினார். மறுபுறம், ஜேம்ஸ் மேத்யூ என்ற மற்றொரு நபர் யானை தந்தங்களை வைத்திருந்ததற்காக மோகன்லால் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்து வந்த உயர் நீதிமன்றம், இன்று தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி, மோகன்லால் யானை தந்தங்களை வைத்துக்கொள்ள மோகன்லாலுக்கு மாநில அரசால் வழங்கப்பட்ட உரிமம் சட்டபூர்வமானது அல்ல என கூறி அதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
2015 ஆம் ஆண்டு அரசு பிறப்பித்த உத்தரவில் நடைமுறை பிழைகள் இருகின்றன. எனவே அது செல்லாது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்கள் தொடர்பான விஷயங்களில் அரசுகள் விதிகளின்படி செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கேரள அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. மோகன்லால் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாள நாட்டுப்புற தொன்ம காதாபாத்திரமான 'கள்ளியங்காடு நீலி' ஐ இன்ஸ்பிரேஷனாக கொண்டு டொமினிக் அருண் ஃபேன்டசி-ஆக்ஷன் ஜானரில் இயக்கிய திரைப்படம் லோகா. இதுவே இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் என்று கருதப்படுகிறது.
இந்த படத்தின் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நஸ்லேன், சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
ஓணம் பண்டிகையை ஒட்டி வெளியான இப்படம் உலகலவில் ரூ.300 கோடி வசூலை தாண்டி மலையாளத்தின் அதிக வசூல் படமாக மாறியது. இந்த படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
இந்நிலையில், லோகா திரைப்படம் ஒடிடியில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, லோகா திரைப்படம் வரும் 31ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- அடைத்து வைத்ததற்கோ, அச்சுறுத்தியதற்கோ அல்லது தற்கொலைக்குத் தூண்டியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை
- சுஷாந்த் பரிசளித்த தனது ஆப்பிள் மடிக்கணினி மற்றும் கைக்கடிகாரத்தை மட்டுமே ரியா எடுத்துச் சென்றார்.
2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்மை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனையில், இது தற்கொலை என கூறப்பட்டாலும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சுஷாந்தின் தந்தை தெரிவித்திருந்தார்.
சுசாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி தான் காரணம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குற்றம்சாட்டி வந்தனர். ரியாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக சுஷாந்தின் தந்தை 2021 இல் பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் சிபிஐ தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில் ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சிபிஐ நீக்கியுள்ளது.
அதாவது, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த வழக்கில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலைதான் என்றும், இதில் ரியா சக்ரவர்த்திக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் சிபிஐ தனது அறிக்கையில் கூறி, வழக்கை முடித்து வைத்துள்ளது.
அறிக்கைப்படி, ரியா சக்ரவர்த்தியோ அல்லது வேறு யாரும் சுஷாந்தை சட்டவிரோதமாக அடைத்து வைத்ததற்கோ, அச்சுறுத்தியதற்கோ அல்லது தற்கொலைக்குத் தூண்டியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ரியா சக்ரவர்த்தியும் அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தியும் சுஷாந்தின் பாந்த்ரா குடியிருப்பில் இருந்து அவர் இறப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக, அதாவது ஜூன் 8, 2020 அன்று வெளியேறிவிட்டனர். அதன்பிறகு அவர்கள் சுஷாந்தை சந்திக்கவில்லை.
மேலும் சுஷாந்தின் பொருட்களை ரியா எடுத்துக்கொண்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது. சுஷாந்த் பரிசளித்த தனது ஆப்பிள் மடிக்கணினி மற்றும் கைக்கடிகாரத்தை மட்டுமே ரியா எடுத்துச் சென்றார்.
சுஷாந்த், ரியா சக்ரவர்த்தியை குடும்பத்தின் ஒரு பகுதி என்று விவரித்துள்ளார், எனவே ரியாவின் செலவுகள் சுஷாந்தின் அறிவுறுத்தலின் பேரில் நடந்தது என்பதால் இதில் எந்தவிதமான நிதி மோசடியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியா சக்ரவர்த்தி, சுஷாந்தின் மருத்துவ ஆவணங்களை வெளியிடுவதாக அச்சுறுத்தினார் என்பது வாய்வழி செய்தி மட்டுமே என்பதால் அது தற்கொலைக்கு நேரடித் தூண்டுதலோ அல்லது சட்டவிரோதக் கட்டுப்பாடோ இல்லை என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சிபிஐ-யின் இந்த அறிக்கையை, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே. சிங் கண் துடைப்பு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் எதிர்த்துப் போராடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- இப்படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
- டீசரை வாசன் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
பிரபல யூடியூப்பரும், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவருமான டிடிஎஃப் வாசன் தற்போது படம் ஒன்றில் நடித்து உள்ளார். அப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், ஐபிஎல் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அதில், காதல், ரேஸ், ஆக்ஷன் என மாஸான வசனங்களில் வாசன் பேசி உள்ளார். டீசரை வாசன் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- இட்லி கடை படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
- இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியது. இது தனுஷ் நடித்த 52-வது திரைப்படமாகும்.
தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்தார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அண்மையில் வெளியான 'இட்லி கடை' படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வருகிற 29-ந்தேதி இட்லி கடை படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாஸ்க் படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
- தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கவின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் கவினுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சமீபத்தில் வெளியான கிஸ் திரைப்படம் கவலையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
கிஸ் படத்தை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், மாஸ்க் படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 21-ந் தேதி உலகளவில் இந்த திரைப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்படத்திற்கு சுரேஷ் பாபிலி இசையமைக்க உள்ளார்.
- தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
அனைவரால் நேசிக்கப்படும் அரசியல் தலைவர் கும்மடி நரசைய்யாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான படத்தை பரமேஷ்வர் ஹிவ்ராலே இயக்குகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகிறார். 'கும்மடி நரசைய்யா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்துள்ளார்.
பிரவல்லிகா ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சுரேஷ் பாபிலி இசையமைக்க உள்ளார்.
பான்-இந்தியா அளவில் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு 'கும்மடி நரசைய்யா' திரைப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 'கும்மடி நரசைய்யா' வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிவராஜ்குமார் எளிமையான அதே நேரம், வலிமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். கண்கண்ணாடி அணிந்து, வெள்ளை குர்தா –பைஜாமா மற்றும் தோளில் சிவப்பு துண்டு போர்த்திய நிலையில், சைக்கிளை தள்ளிச்செலும் காட்சியில், பின்னணியில் சட்டமன்றம் தெரிகிறது. சைக்கிளில் தொங்கும் நெல் மற்றும் சுத்தியல் சின்னம் கொண்ட சிவப்புக் கொடி, அவரது இடதுசாரி சிந்தனையையும், அரசியலின் தன்மையையும் வெளிப்படுத்துகிறது. கும்மடி நரசைய்யாவின் பணிவு மற்றும் உள்மன வலிமையை சிவராஜ்குமார் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
- ‘காந்தாரா சாப்டர்1’ வெளியான 20 நாட்களில் உலக அளவில் ரூ.803 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.
- கன்னட வெர்ஷனின் நீளம் 169 நிமிடங்களாக உள்ள நிலையில், ஆங்கில வெர்ஷன் சற்று குறைவாக 134 நிமிடங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.
பலதரப்பு மக்களால் ரசிக்கப்படும் 'காந்தாரா சாப்டர்1' வெளியான 20 நாட்களில் உலக அளவில் ரூ.803 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.
இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்1' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் வருகிற 31-ந்தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.
கன்னட வெர்ஷனின் நீளம் 169 நிமிடங்களாக உள்ள நிலையில், ஆங்கில வெர்ஷன் சற்று குறைவாக 134 நிமிடங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஆங்கிலத்தில் டப்பிங் செய்து திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை 'காந்தாரா சாப்டர்1' பெறுகிறது.
- சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.
- புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.
சென்னை:
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அவர்கள் இருவரும் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மனு தள்ளுபடி ஆனது.
இதையடுத்து, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை முடிந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதன்படி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ஸ்ரீகாந்த் வரும் 28-ம் தேதியும், கிருஷ்ணா வரும் 29-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
- இந்த படத்தில் மொத்தம் 3 கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர்.
2019 ஆம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக நடித்து இருந்தார் கென் கருணாஸ். இவரது நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றது. அதைத் தொடர்ந்து வாத்தி மற்றும் விடுதலை பாகம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.
தற்போது கென் கருணாஸ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கும் படத்தில் இவரே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இது ஒரு பள்ளிக்கூட பின்னணியில் நடக்கும் கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இப்படத்தில் மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் தேவதர்ஷினி முக்கிய கதாபத்திரங்களிலும், அனிஸ்மா, மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் என மொத்தம் 3 கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இப்படத்தில் நடிக்கும் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி மற்றும் ஜி.வி பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், இந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர்கள் கார்த்தி, விஷால், ஆர்.ஜெ.பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.






