என் மலர்
சினிமா செய்திகள்
- சதீஷ் ஷா 1970 களில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.
- நகைச்சுவைத் தொடரில் 55 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து சதிஷ் ஷா பாராட்டைப் பெற்றார்.
பல பாலிவுட் படங்கள் மட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து புகழ்பெற்ற நகைசுவை நடிகர் சதிஷ் ஷா (74) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
இதனை அவரது நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான அசோக் பண்டிட் உறுதிப்படுத்தியுள்ளார்.
1951 ஆம் ஆண்டு குஜராத்தி குடும்பத்தில் பிறந்த சதீஷ் ஷா 1970 களில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.
1984 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் தொடரான யே ஜோ ஹை ஜிந்தகி மூலம் சதிஷ் ஷா புகழ் பெற்றார். அதில் அவர் 55 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார்.
தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, ஹம் ஆப்கே ஹைன் கோன்..!, ஹீரோ நம்பர் 1, மைன் ஹூன் நா மற்றும் ஃபனா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் சதிஷ் ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.
- பெண்கள் அணி ஈரானுக்கு எதிரான இறுதியில் வென்று தங்கப்பதக்கத்தை வென்றது.
ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி 2025 (3வது பதிப்பு) தற்போது பஹ்ரைனில் (மனாமா) நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் 19 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.
இதில் இந்தியா கபடி போட்டியில் இரு தங்கங்களை வென்றுள்ளது: ஆண்கள் அணி ஈரானை 35-32 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றது. அதேபோல் பெண்கள் அணியும் ஈரானுக்கு எதிரான இறுதியில் வென்று தங்கப்பதக்கத்தை வென்றது.
இந்நிலையில், ஆசிய இளையோர் விளையாட்டு கபடியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஜெயில் படப்பிடிப்பின்போது கண்ணகி நகர் சகோதர சகோதரிகளின் அபாரமான விளையாட்டுத் திறனை கண்டு வியந்தேன். இன்று உலகமும் வியக்கிறது.
அன்புத் தங்கை கார்த்திகா நம் தேசத்தின் பெருமை. மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது.
- அல்லு அர்ஜுன் நடிப்பில் மாபெரும் பொருட்செலவில் உருவாகும் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் மாபெரும் பொருட்செலவில் உருவாகும் படத்தை அட்லி இயக்கி வருகிறார்.
இந்நிலையில், அட்லி விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழசினிமாவில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், இயக்குனர் சங்கர், ஹன்சிகா, லெஜண்ட் சரவணன் ஆகியோருக்கு அடுத்தபடியாக ரோல்ஸ் ராய்ஸ் காரை அட்லி வாங்கியுள்ளார்.
இந்த காரின் விலை 7, முதல் 9.5 கோடி வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
- பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் வெளியேற்றப்பட்டனர்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே யார் எல்லாம் வரப்போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் சின்னத்திரை நட்சத்திர ஜோடி பிரஜன்-சான்ட்ரா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதாக தகவல் வெளியானது. இதற்கு முன்னர் 2வது சீசனில் தாடி பாலாஜி மற்றும் நித்யா ஜோடியாக பிக் பாஸில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை திவ்யா கணேஷ் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழையவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தான் அவர் சன் டிவியின் அன்னம் சீரியலில் இருந்து திடீரென விலகியதாக கூறப்படுகிறது. இதனால் திவ்யா கணேஷின் என்ட்ரி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

மேலும், குக் வித் கோமாளி புகழ் ஷபானாவும் சின்னத்திரை நடிகை ஃபரினா ஆசாத்தும் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
- இந்த வாரத்தில் நடைபெற்ற ஜூஸ் போட்டியால் பிக்பாஸ் வீடே கலவர பூமியாக மாறியது.
- நடுவராக பாரு செய்த அட்டகாசங்கள் தான் இந்த வாரம் முழுவதும் பேசுபொருளானது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் வெளியேற்றப்பட்டனர்.
இந்த வாரத்தில் நடைபெற்ற ஜூஸ் போட்டியால் பிக்பாஸ் வீடே கலவர பூமியாக மாறியது. நடுவராக பாரு செய்த அட்டகாசங்கள் தான் இந்த வாரம் முழுவதும் பேசுபொருளானது.
இந்த வார எவிக்ஷன் பட்டியலில் ஆதிரை , அரோரா சின்கிளேர், துஷார், ரம்யா ஜோ, சுபிக்ஷா, கலையரசன், பிரவீன் ராஜ் மற்றும் வியனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி 3 வாரங்களை நெருங்கிய நிலையில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் ஆதிரை என்று தகவல் வெளியாகியுள்ளது.
- கணவர் அகமது கான் அவரை விவாகரத்து செய்து ரூ.200 ஜீவனாம்சம் கொடுக்க மறுத்துவிட்டார்.
- இதனை எதிர்த்து மனைவி ஷாஜியா பானோ வழக்குத் தொடுத்தார்
பாலிவுட்டில் இம்ரான் ஹாஷ்மி மற்றும் யாமி கவுதம் ஆகியோர் நடிப்பில் HAQ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
1978 ஆம் ஆண்டு ஷாஜியா பானு என்பவருக்கு 60 வயது இருக்கும் போது அவரது கணவர் அகமது கான் அவரை விவாகரத்து செய்து ரூ.200 ஜீவனாம்சம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனை எதிர்த்து வழக்குத் தொடுத்து வெற்றி பெற்ற ஷாஜியா பானோ கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஷாஜியா பானோவாக யாமி கவுதம் நடித்துள்ளார். ஆனால் இப்படத்தில் ஷாஜியா பானு ஒரு இளம் பெண்ணாகக் காட்டப்படுகிறார். இந்நிலையில், இப்படம் நவம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
ஷாஜியா பானோவின் போராட்டம் இந்திய முஸ்லிம் பெண்கள் சம உரிமைகளுக்கான போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
- படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
- இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார்.
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த 'இட்லி கடை'. இப்படம் கடந்த 1-ந்தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு என்பது குறைவே.
இதனையடுத்து, 'இட்லி கடை' படத்தை தொடர்ந்து போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ளார். இது தனுஷின் 54-வது படமாகும். இதுவரை படத்திற்கு தலைப்பு எதுவும் வைக்கப்படாத நிலையில் D54 என்றே சொல்லப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, இப்படத்தை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேண் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், D54 பிளாக்பஸ்டர் படம் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிளாக்பஸ்டர் படம், எழுத்து மற்றும் ஆடியோ தொடர்ந்து வருகிறது. சமீபத்திய காலங்களில் தனது படைப்புகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குனர் மற்றும் silent killer என்று கூறியுள்ளார்.
இதனால் D54 படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
- ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் கடைசி சீசன் தயாராகி வருகிறது.
2016 ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து 2,3,4 சீசன்களும் பெரும் ஹிட் அடித்தன.
தற்போது ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் கடைசி சீசன் தயாராகி வருகிறது. இந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் இந்த தொடர் வெளியாகிறது.
இந்நிலையில், அதே நாளில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸ் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் இந்த தொடர் தியேட்டர்களில் வெளியாகிறது. டிசம்பர் 31 மற்றும் அடுத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஆகிய 2 தினங்களுக்கு மட்டும் சிறப்பு காட்சியாக இந்த தொடர் வெளியாகிறது. 350 தியேட்டர்களுக்கு மேல் இந்த தொடர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘வருகிற 29-ந்தேதியைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்' என்று பதிவிட்டார்.
- இந்த பதிவு சமூக வலைதளங்களிலும் வைரலானது.
இந்தி தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கால்பதித்துள்ள ஜான்வி கபூர், விரைவில் தமிழ் சினிமாவிலும் தனது கணக்கை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'வருகிற 29-ந்தேதியைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்' என்று பதிவிட்டார்.
இதையடுத்து அவர் தனது காதல் குறித்தோ அல்லது திருமணம் தொடர்பாகவோ முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக கூறப்பட்டது. இந்த பதிவு சமூக வலைதளங்களிலும் வைரலானது.
ஆனால் தனது புதிய படம் குறித்து அறிவிப்பை அவர் வெளியிட போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதனால் வாழ்த்த வந்த ரசிகர்கள் ஜான்வி கபூரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
- முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிந்துள்ளனர்.
- இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருதை இவரது நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்திற்கு வழங்கினர்.
கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ஒன்றாக அமைந்தது. இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் மாபெரும் வரவேற்பினைத் தொடர்ந்து 2-ம் பாகம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் குழுவினரே இரண்டாம் பாகத்திலும் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இப்படம் டிசம்பர் மாதம் 5-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'அகண்டா-2 தாண்டவம்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- பாலக்காடு பகவதியம்மன் கோவிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார்.
- இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸ்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். சொந்தமாக ரேஸிங் பந்தய நிறுவனத்தையும் உருவாக்கி உள்ளார். இவரது கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடந்த பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இதற்கிடையே, அஜித்குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இந்தப் படம் ஜனரஞ்சகமான கமர்ஷியல் படமாக அமையும் என ஆதிக் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். புதிய படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலாடை அணியாத நிலையில் அஜித் தனது மார்பின் வலது பக்கத்தில் பச்சைக் குத்திக் கொண்டுள்ள போட்டோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அந்த டாட்டூ அஜித்தின் குலதெய்வமான பகவதியம்மன் என தகவல்கள் கூறுகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் 404 கோடி ரூபாய் வசூலித்தது.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தநிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்படத்தை கமலின் RKFL இண்டெர்னேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும். படத்தின் கதை இருவருக்கும் பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால், ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கும் படத்தை இயக்குவது லோகேஷ் கனகராஜ் அல்ல.. நெல்சன் என புதிய தகவல் கிடைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜின் கதை வன்முறை நிறைந்து இருப்பதால் ரஜினிகாந்த் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றும், நெல்சன் கூறிய கதைக்கு அவர் கிரீன் சிங்னல் காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜெயிலர்2 படத்திற்குப் பிறகு, நெல்சன் படப்பிற்கு முந்தைய பணிகளை தொடங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரஜினிகாந்த் சுந்தர்.சி இயக்கும் படத்திலும், கமல்ஹாசன் அன்பறிவ் படத்திலும் நடிக்கவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.






