என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • 10 வயது இளையவரான பிரபல பாடகர் நிக் ஜோனாஸை மணந்த பிறகு ஹாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.
    • ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் இணந்துள்ளார்.

    உலக அழகி பிரியங்கா சோப்ரா விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

    பாலிவுட்டின் பிஸியான நடிகையாக இருந்த வந்த பிரியங்கா கடந்த 2018 இல் தன்னை விட 10 வயது இளையவரான பிரபல பாடகர் நிக் ஜோனாஸை மணந்த பிறகு ஹாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். இவர்களுக்கு 2022 இல் பெண் குழந்தை பிறந்தது.

    தற்போது ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் ஹீரோயினியான கமிட் ஆகி உள்ளார்.

    இந்நிலையில் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ஒன்று வைரலாகி வருகின்றன. அதில் தனது கழுத்தில் பாம்புடன் பிரியங்கா காட்சி அளிக்கிறார்.

    அருகில் பயந்த பாவனையுடன் நிக் ஜோனாஸ் நிற்கிறார். மேலும் முந்தைய காலங்களில் பாம்புகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் இதனுடன் அவர் பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் லைக்குகளை வாரி இறைத்து வருகின்றனர்.

    • ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது
    • பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

    பாலிவுட் நடிகர் சல்மான் கான் அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பலூசிஸ்தான் குறித்து பேசிய கருத்துகள் காரணமாக பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

    ரியாத் நிகழ்ச்சியில் பேசிய சல்மான் கான், "நீங்கள் ஒரு இந்தித் திரைப்படம் எடுத்து இங்கு (சவுதி அரேபியா) வெளியிட்டால், அது ஒரு சூப்பர் ஹிட் ஆகும்.

    தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படத்தை உருவாக்கினால் அது பல நூறு கோடிகளை சம்பாதிக்கும். ஏனெனில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர்.

    இங்கு பலூசிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அனைவரும் இங்கு வேலை செய்கிறார்கள்" என பாகிஸ்தானையும், பலுசிஸ்தானையும் இருவேறு பகுதிகளாக பிரித்து பேசியிருந்தார்.

    இதன் விளைவாக, பாகிஸ்தான் அரசு அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் 4வது அட்டவணையில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள விளக்கத்தில், "சல்மான் கானின் பெயர் பாகிஸ்தானின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையத்தின் (NACTA) தடைசெய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் இல்லை. உள்துறை அமைச்சகத்திடமிருந்தோ அல்லது மாகாண அரசிடமிருந்தோ அவர் 4வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக எந்த அறிவிப்பும் இல்லை.

    தற்போதைய செய்திகள் அனைத்தும் இந்திய ஊடகங்கள் அளித்த தவறான செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. இது தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு தொடர்புடைய நிறுவனங்களையோ அல்லது அதிகாரப்பூர்வ வெளியீடுகளையோ யாரும் தொடர்பு கொள்ளவில்லை," என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. 

    • படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 23 அன்று நடைபெற்றதாக தகவல் வெளியானது.
    • "மாலை நேரத்து மயக்கம்" என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.

    இவரது இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என கூறப்பட்டு வந்தது.

    இதற்கிடையே , இந்தப் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. "கேப்டன் மில்லர்" படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 23 அன்று  நடைபெற்றதாக தகவல் வெளியானது.

    இந்தப் படத்தில் தான் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக அவர் சண்டை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதோடு இப்படத்திற்காக அவர் புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

    படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்றும் ஜனவரி மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் முடியும் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு கேங்ஸ்டர் ஆக்ஷன் படமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

    இந்த படத்தில் லோகேஷ்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் 2016-ல் "மாலை நேரத்து மயக்கம்" என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 

    கடைசியாக ராஜ்குமார் ராவ் உடன் 'புல் சுக் மாப்' என்ற இந்தி படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். பாலிவுட் ரசிகர்களிடையே crush ஆக விளங்கி வரும் வாமிகா லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக நடிக்க உள்ள தகவல் தமிழ் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    • சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து படம் இயக்கவுள்ளார்.

    நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில், இந்தப் படம் வசூல் ரீதியில் பட்டையை கிளப்பியது.

    இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து படம் இயக்கவுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனால் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இப்படம் ஒரு டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது.இப்படமும் அவரது பாணியில் நகைச்சுவையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயன் - கல்யாணி இருவரும் ஹீரோ படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

    • சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார்.
    • பராசக்தி படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

    மதராஸி படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் 25-வது படமாக உருவாகியுள்ளது.

    இந்நிலையில், தான் எடுத்த போட்டோசூட் புகைப்படங்களை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன. 

    • அருந்ததி திரைப்படம் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
    • அருந்ததி படம் ரூ.60 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.

    அனுஷ்கா நடிப்பில் 2009ல் வெளியான 'அருந்ததி' திரைப்படம் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

    அன்றைய காலகட்டத்திலேயே இப்படம் ரூ.60 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.

    ஒன்னிலையில் 'அருந்ததி' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் அருந்ததியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாகவும், 2026 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • சமீபத்தில் சித்து டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
    • தற்போது சித்து இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

    பிரபலமான தமிழ் யூடியூப் சேனல்களில் விஜே சித்து vlogs முக்கிய இடைத்தை வகிக்கும்.இவர்களின் வீடியோ அனைத்துமே மில்லியன் வியூஸ்களை அள்ளும். இவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. பல இளைஞர்களில் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இவர்களது வீடியோக்கள் இருப்பதால் மக்கள் இதனை கொண்டாடி ரசித்து வருகின்றனர்.

    சமீபத்தில் சித்து மற்றும் ஹர்ஷத் கான் இருவரும் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    இந்நிலையில் அடுத்ததாக சித்து இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இவரே படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டெர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு டயங்கரம் என தலைப்பிட்டுள்ளனர்.

    இப்படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தின் பூஜை தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து நடத்துள்ள இப்படம் வருகிற 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    'முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷன் தாஸ். இப்படமும், இப்படத்தில் வரும் முதல் நீ முடிவும் நீ பாடலும் இவரை பிரபலமாக்கியது. இப்படத்தை தொடர்ந்து சிங்க், தருணம் ஆகிய படங்களில் கிஷன் தாஸ் நடித்துள்ளார்.

    இதேபோல், பிரபல யூடியூபரான ஹர்ஷத் கான் பெரிய திரையில் அறிமுகமானார். கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான 'டிராகன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது தவிர விஜே சித்து இயக்கி நடிக்க உள்ள 'டயங்கரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார்.

    கிஷன் தாஸ், ஹர்ஷத் கான் ஆகிய இருவரும் இணைந்து 'ஆரோமலே' படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாரங் தியாகு இயக்க சித்து குமார் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் ப்ரோமோ, பாடல் வீடியோக்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் அடுத்த மாதம் நவம்பர் 7-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது.

    சினிமாவில் வரும் காதலை போன்று நிஜ வாழ்க்கையில் காதலை எதிர்பார்க்கும் கதாநாயகனை சுற்றி கதை அமையும் வகையில் டிரைலரில் காட்டப்பட்டுள்ளது. டிரைலருக்கு சிலம்பரசன் குரல் கொடுத்துள்ளார். மேலும், படத்திற்கும் குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    • விஜய் ஆண்டனி பூக்கி என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார்.
    • 'இச்சு இச்சு' பாடலுக்கு, Husky நாய் நடனமாடுவது போன்ற AI வீடியோ வைரலாகி வருகிறது

    விஜய் ஆண்டனி மற்றும் அஜய் திஷன் நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    அடுத்ததாக விஜய் ஆண்டனி நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் பூக்கி என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் அஜய் திஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    பூக்கி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வருகிறது. திரைப்படம் 2026 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது. தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்

    இந்நிலையில், இப்படத்தை ப்ரொமோட் செய்யும் விதமாக இணையத்தில் வைரலாகி வரும் Husky டேன்ஸை விஜய் ஆண்டனி ரீக்ரியேட் செய்துள்ளார். இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    'வெடி' படத்தில் இடம்பெற்ற 'இச்சு இச்சு' பாடலுக்கு, Husky நாய் நடனமாடுவது போன்ற AI வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • டியூட் படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
    • டியூட் படத்தில் ஆணவக்கொலைக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் டியூட் படம், வசூலை குவித்து வருகிறது.

    தன் மாமன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய தயாராகும் நாயகனுக்கு, அப்பெண்ணுக்கு வேறொருவர் பிடித்திருப்பது தெரிந்தும் திருமணம் செய்து பின்னர், அப்பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க நாயகன் பாடுபடுவதும், அதன்பின் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க நாயகி பாடுபடுவதும் என சாதிக்கு எதிராக படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இப்படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில், 'டியூட்' திரைப்படத்தைப் சிறப்புக் காட்சியை பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், CPI முன்னாள் மாநிலச் செலயாளர் முத்தரசன் ஆகியோர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது படத்தின் இயக்குநர் கீர்த்திஸ்வரன், கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அவரது குரலைக் கேட்டது உண்மையிலேயே எனது நாளையே மாற்றியது!
    • அவரது அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

    தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், நடன இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இதுமட்டுமில்லாமல் ஏழை மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுபவர் இவர். இதனால் சினிமாவையும் தாண்டி பல லட்சம் பேர் அவரது ரசிகர்களாக உள்ளனர்.

    இந்த நிலையில், இன்று தனது 49-வது பிறந்தநாளை லாகவா ரான்ஸ் கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ராகவா லாரன்ஸூக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஜினிக்கு நன்றி தெரிவித்து ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தலைவரின் அன்புக்கு நன்றி!"



    இன்று தலைவர் எனது பிறந்தநாளை மிகவும் சிறப்பானதாக்கினார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதிகாலையில் எனக்கு இனிமையான வாழ்த்துகளை அனுப்பினார். அவரது குரலைக் கேட்டது உண்மையிலேயே எனது நாளையே மாற்றியது! அவரது அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று கூறியுள்ளார். 



    • படம் ரொம்ப பிடிச்சிருக்கு.
    • உன் படைப்பை பார்த்து பெருமைப்படுகிறேன்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூல் குவித்து வருகிறது.

    இதனிடையே, இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் 'பைசன்' படத்தை பார்த்த இயக்குநர் மணிரத்னம், இப்போ தான் படம் பார்த்தேன் மாரி. படம் ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க தான் பைசன். உன் படைப்பை பார்த்து பெருமைப்படுகிறேன். இதை தொடர்ந்து செய். உன் குரல் தான் முக்கியம் என பாராட்டினார்.

    இதையடுத்து இயக்குநர் மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்து மாரிசெல்வராஜ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பரியேறும் பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையையும் பார்த்து கவனித்து பாராட்டி என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வார்த்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார்... என்று கூறியுள்ளார். 



    ×