என் மலர்
சினிமா செய்திகள்
- இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- நீரஜ் கய்வான் இயக்கிய நிலையில், கரன் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் படத்தை தயாரித்திருந்தனர்.
வாஷிங்டன்:
திரையுலகில் சர்வதேச அளவில் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16-ம் தேதி ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவிலுள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும்.
இதற்கிடையே, நடப்பு ஆண்டில் 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் 24 பிரிவுகளில் வழங்கப்படும் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் சமீபத்தில் வெளியானது.
இதில் இந்தியாவில் இருந்து 'ஹோம்பவுண்ட்' என்ற இந்தி படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பரிந்துரை பட்டியலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் ஆகியோர் முன்னணி காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நீரஜ் கய்வான் இயக்கிய நிலையில், கரன் ஜோஹர் மற்றும் ஆதார் பூனவல்லா ஆகியோர் படத்தை தயாரித்திருந்தனர்.
இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் இருந்து ஹோம்பவுண்ட் திரைப்படம் வெளியேறியது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி, மீண்டும் ZEE5 ஓடிடி தளத்தில் ஒரு முக்கிய படைப்புடன் வருகிறார். "தடயம்" எனும் இந்த புதிய படைப்பு, விரைவில் ZEE5-ல் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில், அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் உருவாகியுள்ள "தடயம்", சமுத்திரகனியின் வலுவான நடிப்புத் திறனை மையமாகக் கொண்டு உருவான ஒரு தீவிரமான கதையம்சம் கொண்ட படைப்பாக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதற்கு முன்னதாக, சமுத்திரகனி இயக்கி நடித்த "விநோதய சித்தம்" திரைப்படம் ZEE5-ல் வெளியானபோது, விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, "தடயம்" திரைப்படமும் ZEE5 தமிழ் ரசிகர்களுக்கு ஒரு நினைவில் நிற்கும் அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.
கதையின் விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாத நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் இப்படம் காவல்துறை பின்னணியில் ஒரு அழுத்தமான திரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மௌன படமாக உருவாகி உள்ள இப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது
- பா.விஜய்யின் வரிகளில் பாடல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைத்ரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மௌன படம் காந்தி டாக்ஸ். கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் இம்மாதம் இறுதியில் 30ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான 'ஏதோ ஏதோ' வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பா.விஜய் எழுத்துகளில் உருவாகி உள்ள இப்பாடல் நல்ல மெலடியாக அமைந்துள்ளது. மௌனப் படம் என்பதால் இதன் பின்னணி இசை படத்திற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதற்கேற்றவாறே இசைப்புயலின் இசையும் அமைந்துள்ளது.
- "தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் பாடகி எஸ்.ஜானகி.
- முரளி கிருஷ்ணா ஒரு பிரபலமான பரதநாட்டிய கலைஞர்
"தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் பாடகி எஸ்.ஜானகி. இவரின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா இன்று காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. முரளி கிருஷ்ணாவுக்கு ஒரு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். பாடகி ஜானகியின் மகன் என்பதைத் தாண்டி, பிரபலமான பரதநாட்டிய கலைஞர் என்ற பட்டத்தையும் பெற்றவர். சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த செய்தியை பாடகி கே.எஸ். சித்ரா சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். முரளியின் திடீர் மரணச் செய்தியை கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும், அன்பாக சகோதரரை இழந்துவிட்டதாகவும் தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
"இன்று காலை எங்கள் அன்புக்குரிய ஜானகி அம்மாவின் ஒரே மகன் முரளி அண்ணாவின் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நாங்கள் ஒரு அன்பான சகோதரனை இழந்துவிட்டோம். இந்த தாங்க முடியாத வலியையும் துக்கத்தையும் கடக்கும் வலிமையை அம்மாவுக்கு கடவுள் வழங்கட்டும். மறைந்த ஆன்மா நித்திய சாந்தியில் இளைப்பாறட்டும். ஓம் சாந்தி" என்று கே.எஸ். சித்ரா அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

- நீதிபதி பி.டி.ஆஷா ஜனநாயகன் படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
- ஜனநாயகன் சென்சார் விவகாரம் தொடர்பாக மோகன் ஜி பேசினார்.
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன.9ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. இதனிடையே படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உத்தரவிட்டது.
இதனையடுத்து ஜன நாயகன் தணிக்கை விவகார வழக்கு ஜனவரி 20 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தயாரிப்பு நிறுவனம், தணிக்கை வாரியம் என இருதரப்புகளும் மாறி மாறி தங்கள் வாதங்கள் முன்வைத்தன. தொடர்ந்து இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம். இதனால் ஜன நாயகன் வெளியீடு இன்னும் தள்ளிப்போகும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், திரௌபதி 2 படம் தொடர்பாக பேட்டி அளித்த மோகன் ஜி, சென்சார் தொடர்பாக பேசினார்.
அந்த பேட்டியில், "சென்சார் போர்டுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. அந்த விதிமுறைகளை பின்பற்றாமல் நீதிமன்றத்துக்கு சென்றால் ஜெயிக்க முடியாது " என்று கூறி விஜய் ரசிகர்களை சீண்டியுள்ளார். .
- ஜெயம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் சதா காலடி எடுத்து வைத்தார்.
- ஒருகட்டத்தில் திடீரென படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டார்.
ஜெயம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த சதா, அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து அசத்தினார்.
ஒருகட்டத்தில் திடீரென படங்கள் நடிப்பதை குறைத்து கொண்டார். அதன்பிறகு சில ஆண்டு இடைவெளிக்கு பின்னர் டார்ச்லைட்' படத்தில் விலைமாதுவாக நடித்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது முழுவதுமாகவே சினிமாவில் ஒதுங்கிவிட்ட சதா, புகைப்பட கலைஞராக மாறி, வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து வருகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் சின்னத்திரை நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக கலந்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் புதிய கதைகளும் கேட்டு வருவதாக தகவல். இது 41 வயதான சதாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
- லோகா' என்ற மலையாள படம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தது.
- கல்யாணி மீது தயாரிப்பாளர்கள் துணிந்து வைத்த நம்பிக்கையே இதற்கு காரணம்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் மாளவிகா மோகனன், கவர்ச்சியால் ரசிகர்களை தன் வசம் கட்டிப்போட்டும் வைத்திருக்கிறார்.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய கருத்துகள் திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளன.
அதில், "கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'லோகா' என்ற மலையாள படம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தது. வசூலிலும் பட்டையை கிளப்பியது. கல்யாணி மீது தயாரிப்பாளர்கள் துணிந்து வைத்த நம்பிக்கையே இதற்கு காரணம். ஆனால், பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இதுபோன்ற பெரிய 'பட்ஜெட்' படங்களில் ஒரு பெண்ணை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கத் துணிவதில்லை. இந்த நிலை மாறினால் சினிமாவுக்கு இன்னும் நல்லது" என்று மாளவிகா மோகனன் குறிப்பிட்டிருந்தார்.
- சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தயாரிப்பு எண் 4 என்ற தலைப்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
- நடிகர் பால சரவணனும் இப்படத்தில் நடிக்க உள்ளார்.
கடந்த ஆண்டு நம்பவர் மாதத்தில் பாரத் மற்றும் சான்வி மேக்னா நடிக்கும் பெயரிடப்படாத படம் அறிவிக்கப்பட்டது. அறிமுக இயக்குனர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்குநராக இப்படத்தில் இணைந்துள்ளார்.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தயாரிப்பு எண் 4 என்ற தலைப்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. நடிகர் பால சரவணனும் இப்படத்தில் நடிக்க உள்ளார். படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.
வரவிருக்கும் இந்த படம் நடிகர் பாரத்தின் இரண்டாவது படமாகும். லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தின் மூலம் பாரத் நடிகராக அறிமுகமாகிறார். அதே நேரத்தில் சான்வி மேக்னா 'குடும்பஸ்தான்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
- அமிதாப்பச்சான், 80 வயதிலும் படங்கள், டி.வி. நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
- அமிதாப்பச்சன் வீட்டில் தங்கத்தில் கழிப்பறை இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சான், 80 வயதிலும் படங்கள், டி.வி. நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்தியாவின் பணக்கார நடிகராக திகழும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக்பச்சனும், மருமகள் ஐஸ்வர்யா ராயும் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் தற்போது எம்.பி.யாகவும் இருக்கிறார்.
இதற்கிடையில் அமிதாப்பச்சன் வீட்டில் தங்கத்தில் கழிப்பறை இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது பாலிவுட் முன்னணி நடிகரான விஜய் வர்மா 2016-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட சில படங்களை தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் அமிதாப்பச்சன் வீட்டின் தங்க கழிப்பறை என்று குறிப்பிடும் ஒரு செல்பி புகைப்படமும் அடங்கும்.
இந்த புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
- ‘சிறை’ திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.
- ‘சிறை’ படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் வெளியான படம் 'சிறை'. இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கி இருந்தார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவல் அதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா நடித்து இருந்தார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்து இருந்தார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 'சிறை' திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது.
'சிறை' படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் குவித்தது.
அந்த வகையில், 'சிறை' படம் இதுவரை உலகளவில் ரூ.31.58 கோடி வசூல் செய்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 27.27 கோடி, கர்நாடகாவில் 1.05 கோடி என உலகளவில் ரூ.31.58 கோடி வசூல் குவித்துள்ளது. இப்படம் ரூ.6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே 'சிறை' படம் குடியரசு தினத்தையொட்டி நாளை ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
- சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘புருஷன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
- இப்படத்தில் யோகி பாபுவும் நடிக்கிறார்.
காமெடி கலந்த கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் தேர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதியின் துடிப்பான இசையில் விஷால் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'ஆம்பள'. சந்தானம் காமெடி இப்படத்தின் ஹைலைட்.
இதே பாணியில் சுந்தர் சி விஷால் கூட்டணியில் எடுக்கப்பட்ட 'மதகஜராஜா' படமும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தில் விஷால் கமிட் ஆகி உள்ளார். இந்த படத்திற்கு 'ஆம்பள' பட இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளார்.
இந்த நிலையில், சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு 'புருஷன்' என பெயரிடப்பட்டுள்ளது. ஹிப்ஹாப் ஆதி இசையில் உருவாகும் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசரில், மனைவிக்கு பயந்த கணவனாக விஷாலும், கணவனை வீட்டு வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டி எடுக்கும் மனைவியாக தமன்னாவும், மேலும் இப்படத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை அவ்னி சினிமாக்ஸ், பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய ஹாரர் ஃபேண்டஸி திரைப்படம் க்ராணி.
ஒரு மூத்த பாட்டி மற்றும் இரண்டு குழந்தைகளைச் சுற்றி நடக்கும் மர்மமான மற்றும் திகிலூட்டும் சம்பவங்களே இப்படத்தின் கதை. இதில் ஃபேண்டஸி கூறுகளும் கலந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை வடிவுக்கரசி மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நகைச்சுவை நடிகர் சிங்கம்புலி, திலீபன் (வத்திக்குச்சி புகழ்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பிரம்மா.காம் படத்தை இயக்கிய விஜயகுமாரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் இதற்கு 'U/A' சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதாவது, இது பெரியவர்களுக்கும், 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ஏற்ற படம்.
தணிக்கை பணிகள் முடிவடைந்த நிலையில், இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மேலும்,'அழிவில்லாத ஆபத்து' என்ற வாசகத்துடன் க்ராணியின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.







