என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அமிதாப்பச்சன் வீட்டில் தங்கத்தில் கழிப்பறை- நடிகர் பகிர்ந்த புகைப்படத்தால் பரபரப்பு
    X

    அமிதாப்பச்சன் வீட்டில் தங்கத்தில் கழிப்பறை- நடிகர் பகிர்ந்த புகைப்படத்தால் பரபரப்பு

    • அமிதாப்பச்சான், 80 வயதிலும் படங்கள், டி.வி. நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
    • அமிதாப்பச்சன் வீட்டில் தங்கத்தில் கழிப்பறை இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சான், 80 வயதிலும் படங்கள், டி.வி. நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

    இந்தியாவின் பணக்கார நடிகராக திகழும் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக்பச்சனும், மருமகள் ஐஸ்வர்யா ராயும் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் தற்போது எம்.பி.யாகவும் இருக்கிறார்.

    இதற்கிடையில் அமிதாப்பச்சன் வீட்டில் தங்கத்தில் கழிப்பறை இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது பாலிவுட் முன்னணி நடிகரான விஜய் வர்மா 2016-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட சில படங்களை தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் அமிதாப்பச்சன் வீட்டின் தங்க கழிப்பறை என்று குறிப்பிடும் ஒரு செல்பி புகைப்படமும் அடங்கும்.

    இந்த புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    Next Story
    ×