என் மலர்
நீங்கள் தேடியது "பாடகி சித்ரா"
- "தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் பாடகி எஸ்.ஜானகி.
- முரளி கிருஷ்ணா ஒரு பிரபலமான பரதநாட்டிய கலைஞர்
"தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் பாடகி எஸ்.ஜானகி. இவரின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா இன்று காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. முரளி கிருஷ்ணாவுக்கு ஒரு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். பாடகி ஜானகியின் மகன் என்பதைத் தாண்டி, பிரபலமான பரதநாட்டிய கலைஞர் என்ற பட்டத்தையும் பெற்றவர். சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த செய்தியை பாடகி கே.எஸ். சித்ரா சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். முரளியின் திடீர் மரணச் செய்தியை கேட்டு தான் அதிர்ச்சியடைந்ததாகவும், அன்பாக சகோதரரை இழந்துவிட்டதாகவும் தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
"இன்று காலை எங்கள் அன்புக்குரிய ஜானகி அம்மாவின் ஒரே மகன் முரளி அண்ணாவின் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். நாங்கள் ஒரு அன்பான சகோதரனை இழந்துவிட்டோம். இந்த தாங்க முடியாத வலியையும் துக்கத்தையும் கடக்கும் வலிமையை அம்மாவுக்கு கடவுள் வழங்கட்டும். மறைந்த ஆன்மா நித்திய சாந்தியில் இளைப்பாறட்டும். ஓம் சாந்தி" என்று கே.எஸ். சித்ரா அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

- அன்றைய தினம் அனைவரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
- பாடகி சித்ராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22-ந்தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் அனைவரும் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை தினத்தன்று விளக்கேற்றி ராம மந்திரத்தை ஜெபிக்குமாறு, பின்னணி பாடகி சித்ரா வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில் பாடகி சித்ரா, ராமர் கோவில் திறப்பு தினத்தன்று மதியம் 12. 20 மணிக்கு அனைவரும் ராம மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். மாலை நேரத்தில் திருக்கார்த்திகைக்கு தீபம் வைக்கிற மாதிரி வீட்டோட எல்லா இடத்திலயும் தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும் என கூறியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விவகாரத்தில் பாடகி சித்ராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.






