என் மலர்
சினிமா செய்திகள்
- படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
- இப்படத்தை தயாரிக்க வாய்ப்பளித்த ராமகிருஷ்ணா சாருக்கு நன்றி.
சின்னத் திரையில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி'. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ஷாலின் ஜோயா. மேலும் சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியாற்றிய ஷாலின் ஜோயாவுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். மலையாளம் கலந்த தமிழில் அவர் பேசுவது, போட்டியாளர்களாக பங்கேற்ற வடிவுக்கரசி, நளினி ஆகியோரிடம் நகைச்சுவை உரையாடல் நிகழ்ச்சியையே கலகலப்பாக்கி வந்தது.
இந்நிலையில் ஷாலின் ஜோயா முதன் முதலாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். கிராமத்து பின்னணியில் 90 கால கட்டத்தில் நடக்கும் கதை களத்தில் உருவாகும் புதிய படத்தில் அருண், பிரிகிடா, ஜாவா சுந்தரேசன், தேவதர்ஷினி, அருள்தாஸ், அஷ்வின் காக்கு மனு ஆகியோர் நடிக்கின்றனர். ஆர்.கே.இண்டர் நேஷனல் கே.எஸ்.ராமகிருஷ்ணா தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இது குறித்து ஷாலின் ஜோயா கூறியதாவது:- 90களின் இறுதியிலும் 2000களின் தொடக்கத்திலும் நடைபெறும் இக்கதையின் படி ஒரு கிராமத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது.
அது அங்குள்ளோரின் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை நகைச்சுவை மற்றும் பேண்டசி கலந்து சொல்ல இருக்கிறோம். இப்படத்தை தயாரிக்க வாய்ப்பளித்த ராமகிருஷ்ணா சாருக்கு நன்றி. தரமான படைப்புகளை ரசிக்கும் தமிழ் ரசிகப் பெருமக்கள் எங்கள் படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஷாலின் ஜோயா ஏற்கனவே மலையாளத்தில் இயக்கிய 'திபேமிலி ஆக்ட்' படம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- இப்படத்தில் அவந்திகா மிஸ்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாதவன், கங்கனா ரனாவத் இணைந்து நடித்த படம் 'Tanu Weds Manu Returns'. இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'சர்க்கிள்'.
'சர்க்கிள்' இதற்கு முன்பு பார்த்திராத ஒரு அசாதாரண உளவியல் த்ரில்லர் படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் அவந்திகா மிஸ்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எ.எல். விஜய் இயக்கி உள்ள இப்படத்தை ட்ரைடென்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஊட்டி, சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஐதராபாத்தில் படமாக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 'சர்க்கிள்' படம் தசரா பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் மாதம் வெளியாகிறது.
- இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
- அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும்.
'கன்னி மாடம்', 'சார்' ஆகிய பாராட்டுகளை குவித்த வெற்றி படங்களை தொடர்ந்து போஸ் வெங்கட் தற்போது கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளாக துபாயில் முன்னணி தொழிலதிபராக திகழும் கண்ணன் ரவி தனது கே ஆர் ஜி மூவிஸ் நிறுவனத்தின் ஏழாவது படைப்பாக இப்படம் உருவாகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்த 'புரொடக்ஷன் நம்பர் 7' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னணி நடிகர் நடிகைகளும், முதன்மையான தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்திற்காக இணைந்துள்ளனர்.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் போஸ் வெங்கட், "விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படம் காதல், குடும்பம், சமூகம் என்று பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து சுவாரசியமாக பேசும். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி. இதை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன," என்று கூறினார்.
கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கும் திரைப்படத்தின் பெயர், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்பைடர் மேன் 3 ஆம் பாகத்தில் டோபே மெக்யூர் மற்றும் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் நடித்திருந்தனர்.
- இது டோபே மெக்யூர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவான ஸ்பைடர் மேன் திரைப்படம் வசூல் வேட்டையை நடத்தியது. இதனை தொடர்ந்து அதன் 2 மற்றும் 3 ஆம் பாகங்கள் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டன.
ஸ்பைடர் மேன் 3 ஆம் பாகத்தில் பழைய ஸ்பைடர் மேன் படங்களில் நடித்த டோபே மெக்யூர் மற்றும் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், டோபே மெக்யூர் நடிப்பில் மீண்டும் ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகம் உருவாகவுள்ளதாக இணையத்தில் தகவல் பரவியது. இது டோபே மெக்யூர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பேட்மேன் படத்தின் திரைக்கதை எழுத்தாளர் மேட்சன் டாம்லின், "நிதானமாக சென்றால் வெற்றி கிடைக்கும். அதைப் பற்றி நீண்ட காலத்திற்கு எதுவும் சொல்ல முடியாது, ஏனென்றால் இது நிறைய நபர்களையும் அரசியலையும் உள்ளடக்கியது.
ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகத்தின் கதையை எழுத நான் ஆர்வமாக உள்ளேன். அதில் ஸ்பைடர் மேனாக நடிக்கும் டோபே ஒரு கணவனாகவும் தந்தையாகவும் நடிப்பார் என்று தெரிவித்தார்.
- இண்டோ ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
- ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு வைப்பது வணிகச்சின்னத்தை மீறும் செயல்
நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி BRO CODE படத்தை இயக்குகிறார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், ப்ரோ கோட் என்ற பெயருக்கு தாங்கள் பதிப்புரிமை பெற்றுள்ளதால் அதனை பயன்படுத்தக்கூடாது என ப்ரோ கோட் பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோ ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம், ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
இது தொடர்பான அந்நிறுவனம் வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்காலத்தடை விதித்தது.
பிரபலமாக உள்ள ப்ரோ கோட் பெயரை திரைப்படத்திற்கு வைப்பது வணிகச்சின்னத்தை மீறும் செயல் என்ற வாதத்தை ஏற்ற உயநீதிமன்றம், நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் திரைப்பட விளப்பரம், வெளியீட்டிற்கு ப்ரோ கோட் தலைப்பை பயன்படுத்தத்தடை விதித்தது.
இது குறித்து ரவிமோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை டிசம்பர் 23 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது
- தரிசனம் முடிந்து வெளியே வந்த அஜித்தை பார்த்த ஆண்களும், பெண்களும் தல, தல என கூச்சலிட்டனர்.
- திருப்பதி கோவிலில் அஜித் தரிசனம் செய்த காட்சிகள், ரசிகர்களை எச்சரித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் சினிமா மற்றும் கார் பந்தயங்களில் பிசியாக இருந்து வருகிறார். படப்பிடிப்பு மற்றும் கார் பந்தயங்கள் இல்லாத நாட்களில் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று வருகிறார். சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள கோவிலில் அஜித் தரிசனம் செய்த காட்சிகள் வைரலானது.
இந்நிலையில் திருப்பதி கோவிலில் இன்று காலை தரிசனம் செய்துள்ளார். சுப்ரபாத சேவையில் தரிசனம் செய்த அஜித்துக்கு ரங்கநாயகி மண்டபத்தில் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
தரிசனம் முடிந்து வெளியே வந்த அஜித்தை பார்த்த ஆண்களும், பெண்களும் தல, தல என கூச்சலிட்டனர்.
இதையடுத்து அஜித் கூட்டத்தினரை நோக்கி இது கோவில் இங்கு கூச்சலிட கூடாது என சைகை மூலம் எச்சரித்தார். தொடர்ந்து அவர் நடந்து கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் ஓடி வந்து புகைப்படம் ஒன்றை எடுக்க முயன்றார். இதையடுத்து ரசிகரிடம் இருந்த செல்போனை வாங்கி அஜித் ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
திருப்பதி கோவிலில் அஜித் தரிசனம் செய்த காட்சிகள், ரசிகர்களை எச்சரித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களால் நடத்தப்படும் சோதனையில் அது புரளி என்பது தெரியவருகிறது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் கலக்கி வரும் நடிகர் அஜித் குமார், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்தார். மேலும், இந்தாண்டு இறுதியில் மலேசியாவிலும், அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.
இதற்கிடையே, அஜித் குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் படம் ஜனரஞ்சகமான கமர்ஷியல் படமாக அமையும் என ஆதிக் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். புதிய படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே, அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். மேலாடை அணியாத நிலையில் அஜித் தனது மார்பின் வலது பக்கத்தில் பச்சைக் குத்திக் கொண்டு இருந்தது இணையத்தில் கவனம் பெற்றது. அந்த டாட்டூ அஜித்தின் குலதெய்வமான பகவதியம்மன் என கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை நடைபெற்ற சுப்ரபாத சேவையின் போது வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரைக் கண்ட ரசிர்கள் தல, தல என்று கூச்சலிட்டனர். அப்போது கோவிலில் அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார்.
மேலும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
- முதல்வர் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது.
அந்த வகையில் படம் கடந்த 10 நாட்களில் உலகளவில் ரூ.55 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பைசன் படத்தை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலிருந்து வாழ்வாதாரத்தை தேடி நமது மண்ணை நம்பி வரும் ஒரு குடும்பத்திற்கு இங்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு காண்பது மாதிரி சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படம் ஐயம்.
செந்தில் ஆண்டவர் மூவிஸ் சார்பில் ஈஸ்வரன் விஜயன் தயாரிப்பில் ந.வசந்த் இயக்கி வருகிறார். கதாநாயகனாக பாலாஜி, கதாநாயகியாக ரெய்னா கரட் ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள்.
போஸ் வெங்கட், கானா உலகநாதன், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தீபா சங்கர் ,கே.பி.ஒய் வினோத், மிப்பு,ரஞ்சன், விஜய் கணேஷ்,கிரேன் மனோகர்,யாசர், சுப்ரமணி, டி.என்.ஏ விஜயலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு கமலக்கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பெங்களூர், ஒசூர் தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை ஆகிய இடங்களில் 40 நாட்களாக நடைபெற்று இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வருகிறது.
இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் டியூட் படம், வசூலை குவித்து வருகிறது.
திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
முன்னதாக, பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே, டிராகன் பட வெற்றியை தொடர்ந்து டியூட் படமும் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனையில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.
மூன்று படங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து, நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.
பலதரப்பு மக்களால் ரசிக்கப்படும் 'காந்தாரா சாப்டர்1' வெளியான 20 நாட்களில் உலக அளவில் ரூ.803 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.
இதைதொடர்ந்து,'காந்தாரா சாப்டர்1' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் வருகிற 31-ந்தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.
கன்னட வெர்ஷனின் நீளம் 169 நிமிடங்களாக உள்ள நிலையில், ஆங்கில வெர்ஷன் சற்று குறைவாக 134 நிமிடங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஆங்கிலத்தில் டப்பிங் செய்து திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை 'காந்தாரா சாப்டர்1' பெறுகிறது.
இந்நிலையில்,'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் ஒடிடியில் வெளியாகும் தேதி குறித்து படக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த் நடிப்பில் வெளியாகி உலகெங்கும் வசூல் வேட்டை செய்து வரும் 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் அக்.31ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகிறது.






