என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் அன்று ஒரு முழுமையான ஆல்பமாக வெளியிடப்பட்டது.

    தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan (எம். எஸ். விஸ்வநாதன்) அவர்களுக்குச் செலுத்தப்படும் ஒரு ஆன்மார்த்தமான இசைத் துதியாக "விஸ்வராகம்" உருவாக்கப்பட்டுள்ளது.

    இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த இசை யாத்திரை, தமிழர்களின் பாரம்பரியமும் குடும்ப உறவுகளும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளான தைப்பொங்கல் அன்று ஒரு முழுமையான ஆல்பமாக வெளியிடப்பட்டது.

    இருபது ஆண்டுகளுக்கு முன்பு, கவிஞரும் பன்முகக் கலைஞருமான சுமதி ராம், அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து தனது கவிதைத் தொகுப்பை மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களிடம் சமர்ப்பித்தார்.

    அந்த சந்திப்பு, ஒரு சாதாரண நிகழ்வாக இல்லாமல், ஒரு வாழ்நாள் இசைப் பயணத்தின் தொடக்கமாக மாறியது. அந்த ஜாம்பவான் விதைத்த இசை விதை, இன்று இசையின் மீதான தூய காதலாக மலர்ந்து 'விஸ்வராகம்' என்ற ஆல்பமாக உருவெடுத்துள்ளது.

    • கிங் படத்தை பதான் பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார்.
    • கிங் படம் ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

    ஷாருக்கானுக்கு பதான், ஜவான், டங்கி உள்ளிட்ட கடைசியான திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

    அடுத்ததாக அவர் நடித்து வரும் கிங் படத்தை பதான் பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். ஆக்சன் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

    இந்நிலையில், கிங் திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

    • தினமும் 120 முதல் 150 பேர் வரை இங்கு மதிய உணவு சாப்பிட்டு வருகிறார்கள்.
    • இதுவரை ஒரு லட்சத்து 50ஆயிரம் பேருக்கு மேல் உணவு வழங்கப்பட்டுள்ளது.

    கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலக வாசலில் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ரூ.50 மதிப்புள்ள சுவையான பிரிஞ்சி (வெஜிடபிள் பிரியாணி) ரூ.10க்கு வழங்கப்பட்டு வருகிறது.

    தினமும் 120 முதல் 150 பேர் வரை இங்கு மதிய உணவு சாப்பிட்டு வருகிறார்கள். திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் ஆறு நாட்கள் மதியம் 12.30 மணி முதல் 1:30 மணி வரை இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.

    லாப நோக்கம் இல்லாமல் மக்களின் வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக மட்டுமே இந்த உணவகம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.

    வேலை தேடும் இளைஞர்கள், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், சினிமா உதவி இயக்குனர்கள், கல்லூரி மாணவர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் இந்த உணவகத்தில் தினசரி பசியாறி வருகிறார்கள்.

    இந்த உணவகம் தொடங்கி வெள்ளிக்கிழமையோடு (23.01.2026) 1000-ம் நாள் நிறைவடைகிறது. இதுவரை ஒரு லட்சத்து 50ஆயிரம் பேருக்கு மேல் உணவு வழங்கப்பட்டுள்ளது.

    நடிகர் கார்த்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மக்களுக்கு உணவு வழங்கும் இந்த சேவை தொடர்ந்து செயல்படுத்தப்பட இருக்கிறது.

    “போடா போடி” படப்புகழ் இசையமைப்பாளர் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரிப்பில், இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள "ஃபோர்த் ஃப்ளோர்" திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சென்னையின் மையப்பகுதி ஒன்றில், ஒரு குடியிருப்பில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் சுந்தரபாண்டி. சைக்காலஜிகள் திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம், கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினை எதார்த்தமாக சொல்லுகிறது. 

    இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகனாக நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார், தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    "போடா போடி" படப்புகழ் இசையமைப்பாளர் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். போடா போடி, வெண்ணிலா கபடி குழு படங்களின் ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார்.

    இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து, விரைவில் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறன்றனர். இப்படம் வரும் பிப்ரவரி மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

    • மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை
    • மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை

    2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன் நடிப்பில் மாபெரும் வெற்றியை பெற்ற மங்காத்தா திரைப்படம் நேற்று ரீரிலீஸானது.

    ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் ரீ ரிலீசில் கில்லி படம் படைத்த சாதனைகளை முறியடித்து வசூல் சாதனை படைத்தது வருகிறது.

    மங்காத்தா படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால் நேற்று வெளியான திரௌபதி 2 படத்தை மக்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்ட்டது.

    இந்நிலையில், மங்காத்தா அலையில் திரௌபதி 2 படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி வேதனையுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "திரெளபதி2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை.. பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு.. மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது என்ற செய்தியை கொண்டு சேர்க்க முடியவில்லை.. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை.. மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை.. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும், படம் பார்க்காமல் தவறான கருத்துக்களையும் பரப்பி வருகிறார்கள்.. திரைப்பட துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன்.. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. எனக்கு மக்களே துணை.. மக்களே முடிவு செய்யட்டும்.. என்றும் உங்களை மட்டுமே நம்பி இருக்கும் உங்கள் மோகன் G" என்று தெரிவித்துள்ளார். 

    கிடா சண்டையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் ஜாக்கி.

    நாயகன் யுவன் கிருஷ்ணா ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு கிடா சண்டை மீது அதிக ஈடுபாடு. மற்றொரு நாயகனான ரிதன் கிருஷ்ணா, ஆண்டு தோறும் கிடா சண்டையில் வெற்றி பெற்று வருகிறார்.

    இந்நிலையில், யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிரிஷ்ணாவின் கிடாயை ஒரு முறை வீழ்த்தி விட, அதன் மூலம் இருவருக்கும் இடையே பகை உண்டாகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி வெட்டு குத்து, அடிதடி நடந்துக் கொண்டிருக்கிறது.

    கிடா போட்டி நடுவரான மதுசூதனராவ், இருவரையும் களத்தில் இறங்கி கிடாவுடன் மோதி பகையை முடித்துக் கொள்ள அறிவுறுத்துகிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் இருவரது கிடாக்களும் போட்டிக்கு தயாராகின்றன.

    இறுதியில் கிடா போட்டியில் வெற்றி பெற்றது யார்? இருவரின் பகை முடிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    நாயகனாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒருபக்கம் அடிதடி, மறுபக்கம் காதல் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் ரிதன் கிருஷ்ணா. மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    கிடா சண்டையை மையமாகக் கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரகபல். காட்சிகளை உணர்வு பூர்வமாகவும் விறுவிறுப்போடும் நகர்த்தி இருக்கிறார். கிடா சண்டைக்கான வரலாறுகளை ஆராய்ந்து, படத்தை உருவாக்கி இருப்பது சிறப்பு.

    இசை

    போட்டிக்கு பின்னணியில் ஒலிக்கும் சக்தி பாலாஜி இசை அதிரடி காட்டுகிறது.

    ஒளிப்பதிவு

    கிடா மோதல் காட்சிகளை நேரில் பார்ப்பது போல் பளிச்சென என்.எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.

    ரேட்டிங்- 3/5

    பொதுவாக பென்குயின்கள் கூட்டமாகத் தான் வாழும்.

    சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பென்குயின் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், ஒரு பென்குயின் தனது கூட்டத்தை விட்டுப் பிரிந்து, உணவு கிடைக்கும் கடல் பகுதியை நோக்கிச் செல்லாமல், ஆளில்லாத பனி மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்கிறது.

    இந்த வீடியோ 2007-ம் ஆண்டு பிரபல ஜெர்மானிய இயக்குனர் வெர்னர் ஹெர்சாக் எடுத்த "Encounters at the End of the World" என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகள் கழித்து இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    ஏன்?

    பொதுவாக பென்குயின்கள் கூட்டமாகத் தான் வாழும். ஆனால், இந்த ஒரு பென்குயின் மட்டும் தனது திசையை மாற்றி, சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைகளை நோக்கி எதற்காகச் செல்கிறது? என்று யாருக்கும் தெரியவில்லை.

    இது ஒரு அசாதாரணமான நடத்தை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நடத்தையை மனித வாழ்க்கையுடன் ஒப்பிட்டு தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தங்கள் சொந்த ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினர்.

    அதாவது, கூட்டத்தோடு இல்லாமல், எதிர்காலம் புதிராக இருந்தாலும் தனக்கென ஒரு பாதையில் செல்லும் நபர்களோடு பென்குயினின் நடத்தையை ஒப்பிடுகின்றனர். மேலும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இல்லாமல் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே  என்று புரியாத புதிராக இருப்பவர்களின் அடையாளமாகவும் அந்த பென்குயின் மாறியுள்ளது.

    கூட்டத்தோடு இருந்தால் உணவு கிடைக்கும், ஆனால் ஒன்றுமே இல்லாத மலைகளை நோக்கி சென்றால் மரணமே மிஞ்சும் என்ற இயற்கையின் விதியை எதிர்த்து அந்த பென்குயின் நடைபோடுவதில் நிச்சயம் ஏதோ இருக்கிறது. 

    பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, அஜிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் தடை.

    இந்தியில் சன்னி தியோல் நடிப்பில் 'பார்டர் 2' திரைப்படம் நேற்று வெளியானது. 1997-ல் வெளியான பிளாக்பஸ்டர் படமான 'பார்டர்' படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது.

    இப்படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் காட்சிகள் அதிகமாக இருப்பதாகக் கூறி பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, அஜிய அரபு அமீரகம் உள்ளிட்ட 6 மத்திய கிழக்கு அரபு நாடுகள் இப்படத்திற்கு தடை விதித்துள்ளது.

    ஏற்கனவே இதே போன்ற காரணத்திற்காக கடந்த மாதம் வெளியான ரன்வீர் சிங் உடைய 'துரந்தர்' திரைப்படமும் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    வளைகுடா நாடுகளில் இந்தியத் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய சந்தை உள்ளது. படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், படத்தின் வசூல் ரீதியாகப் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.  

    • இந்த படத்தில் நாயகியாக தவ்தி ஜிவால் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ரவி மோகனின் 34-வது படம் 'கராத்தே பாபு'. 'டாடா' பட இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கியுள்ள இப்படத்தை ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நாயகியாக தவ்தி ஜிவால் நடித்துள்ளார். இதன் மூலம் அவர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ், சக்தி வாசுதேவன், சுப்ரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, ராஜ ராணி பாண்டியன், சந்தீப் ராஜ், சிந்துப்ரியா, அஜித் கோஷ், அரவிந்த், கல்கி ராஜா, ஸ்ரீ தன்யா, ஆனந்தி, சாம் ஆண்டர்சன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

    இந்த நிலையில், 'கராத்தே பாபு' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் அனல்பறக்க அரசியல் வசனங்கள் இடம்பெற்று இருக்கின்றன. 'நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன், நான் அரசியலையே தொழிலா பண்றவன்' என்கிற வசனம் இடம்பெற்று இருக்கின்றன. 



    • ‘வெப்பம் குளிர் மழை’யைத் தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ளது.
    • இப்படம் அப்பா- மகள் இடையேயான உறவைப் பிரதிபலிக்கும் கதை கொண்டது.

    இயக்குநர் தீரவ் இயக்கத்தில் கிஷோர் கதாநாயகனாக நடித்துள்ள படம், 'மெல்லிசை'. தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை 'வெப்பம் குளிர் மழை'யைத் தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் அப்பா- மகள் இடையேயான உறவைப் பிரதிபலிக்கும் கதை கொண்டது. இதனிடையே, சில தினங்களுக்கு முன் 'மெல்லிசை' படத்தின் இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

    இந்த நிலையில், 'மெல்லிசை' வருகிற 30-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 



    • சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

    நகுல், பாக்யராஜ், நீது சந்திரா மற்றும் ஆஷ்னா ஜவேரி ஆகியோர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான 'பிரம்மா.காம்' படத்தை இயக்கிய விஜயகுமாரன் தற்போது இயக்கி உள்ள படம் 'க்ராணி' (Granny).

    இப்படத்தில் பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஏ. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சீ.டா. பாண்டியன் இசையமைத்துள்ளார். ஹாரர் திரில்லராக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை விஜயா மேரி யுனிவர்சல் மீடியா'ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜயா மேரி தயாரித்து உள்ளார். இப்படம் தொடர்பாக ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

     

    இந்த நிலையில், 'க்ராணி' படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இப்படம் வருகிற 30-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    ஜிப்ரான் இசை படத்திற்கு பெரிய பலம்.

    திரௌபதி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை தொடங்குகிறது. நாயகன் ரிச்சர்ட் தனது குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். ஊரில் வக்பு வாரியம் மூலம் கோவில் நிலம் பறிபோகும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்காக ஊர் மக்களை ஒன்று திரட்டுகிறார். அப்போது வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வரும் நாயகி ரக்ஷனா, கோவிலை பராமரிக்க முன் வருகிறார். கோவிலுக்கு செல்லும் ரக்ஷனா உடம்பில் அமானுஷ்ய சக்தி ஊடுருவி வினோதமாக நடந்து கொள்கிறார்.

    இறுதியில் ரக்ஷனா உடம்பில் ஊடுருவிய அமானுஷ்ய சக்தி யார்? எதற்காக வந்தார்? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரிச்சர்ட், கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நடிப்பதற்கான நிறைய வாய்ப்புகள் இருந்தும், அதை சரியாக பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார். வீரம், ஆக்ரோஷமான காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். நாயகியாக நடித்து இருக்கும் ரக்ஷனா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்டி நட்ராஜின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.

    இயக்கம்

    வல்லாள மகாராஜா கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. 13 ஆம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த வல்லாள மகாராஜாவிற்கும் சுல்தான் அரசர்களுக்கும் இடையே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கி இருக்கிறார். இந்து, இஸ்லாம் மதத்திற்கு இடையே நடந்த பிரச்சனையை திரைக்கதையாக வைத்து இருக்கிறார். படத்தில் அழுத்தமான மற்றும் சுவாரசியமான காட்சிகள் இல்லாதது வருத்தம்.

    இசை

    ஜிப்ரான் இசை படத்திற்கு பெரிய பலம்.

    ஒளிப்பதிவு

    பிலிப் ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு சிறப்பு.

    ரேட்டிங்-2/5

    ×