என் மலர்
சினிமா செய்திகள்
- பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்த சிடாடெல் வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
- இந்த வெப் தொடருக்காக நடிகை சமந்தா கடுமையாக உடற்பயிற்சி செய்துள்ளார்.
பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் சமந்தா நடித்துள்ள சிடாடெல் ஹனி பன்னி (CITADEL HONEY BUNNY) ஹாலிவுட் வெப் தொடர் நவம்பர் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ் & டிகே இயக்கியுள்ள இந்த வெப் தொடரின் ட்ரைலர் அக்டோபர் 15 அன்று வெளியாகவுள்ளது.
ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த சிடாடெல் வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெப் தொடரின் யூனிவர்சின் ஒரு அங்கமாக தான் இந்த புதிய சிடாடெல் வெப் தொடர் உருவாகியுள்ளது.
இந்த வெப் தொடருக்காக நடிகை சமந்தா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லப்பர் பந்து திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
- லப்பர் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து. வெளியானது முதல் ஒவ்வொரு வாரம் அதிக திரைகளில் ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதன் காரணமாக லப்பர் பந்து திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது. இந்த நிலையில், லப்பர் பந்து திரைப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து திரைப்படம் வருகிற 18 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய்யின் தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- கடந்த 3 ஆம் தேதி தி கோட் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (தி கோட்). இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்தனர்.
தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படம் கடந்த மாதம் 5-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. தி கோட் படம் குடும்பங்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வசூல் ரீதியாகவும் படம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது.

கடந்த 3 ஆம் தேதி விஜய்யின் "தி கோட்" (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் தி கோட் முதலிடம் பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இது கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் 13-வது படம் ஆகும்.
- இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கப்போகும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் புதிய படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் மேட் டிமன் நாயகனாக நடிக்கவுள்ளார்.
மேட் டிமன் இதற்கு முன்னதாக கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் 2014-ல் வெளிவந்த இன்டர்ஸ்டெல்லர் மற்றும் ஓபன் ஹெய்மர் படங்களில் நடித்துள்ளார்.தற்போது 3 ஆவது முறையாக நோலன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நோலனின் மனைவி எம்மா தாமஸ் தயாரிக்கிறார். இது கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் 13-வது படம் ஆகும்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி ஐமேக்ஸ் ஃபார்மெட்டில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான 'ஓபன்ஹெய்மர்' திரைப்படத்திற்கு 7 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வேட்டையன் படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கியுள்ளார்.
- வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் தமிழகம் உள்பட உலகமெங்கும் நாளை ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
முன்னதாக இந்தப் படத்தின் பாடல்கள் வெளியான நிலையில், இந்தப் படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காளிதாஸ் ஜெயராம் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
- மாடலிங் துறையைச் சேர்ந்த தாரினி என்ற பெண்ணை காளிதாஸ் ஜெயராம் காதலித்து வந்தார்.
பிரபல நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராம் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகின ராயன் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
மாடலிங் துறையைச் சேர்ந்த தாரினி என்ற பெண்ணை காதலிப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன்பு காளிதாஸ் ஜெயராம் தெரிவித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்துள்ளது. இவர்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதால் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குடும்பத்துடன் சந்தித்த நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாஸ் ஜெயராமின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.
கேரளாவை சேர்ந்த நடிகர் ஜெயராம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து திருமண பத்திரிக்கை வழங்காமல் தமிழக முதல்வருக்கு முதல் பத்திரிக்கை வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வேட்டையன் திரைப்படம் நாளை ( அக்டோபர் 10 ) திரைக்கு வருகிறது.
- வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் நாளை (அக்டோபர் 10) திரைக்கு வருகிறது.
இப்படத்தின் முதல் பாடலாக வெளியான மனசிலாயோ பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை AI தொழில்நுட்பத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
மனசிலாயோ பாடலுக்கு நடனமாடி இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், 'மனசிலாயோ' ட்ரெண்டில் இணைந்து நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகைகள் கீர்த்தி பாண்டியன், வரலட்சுமி சரத்குமார், ரெஜினா ஆகியோர் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.
- ஒரு தமிழ் நடிகை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.
தனியார் தொலைக்காட்சியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ் சீசன் 8' கடந்த ஞாயிறு அன்று கோலாகலமாக துவங்கியது. அதில் தமிழகத்தைச் சார்ந்த பல போட்டியாளர்கள் பங்கேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். அதே நாளில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியும் தொடங்கியது.
அந்நிகழ்ச்சியில் முதல் முறையாக தமிழகத்தைச் சார்ந்தவரும், நடிகையுமான ஸ்ருதிகா அர்ஜுன் பங்கேற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தி பிக்பாஸ் சீசன் 1 முதல் இதுவரை நடந்த எந்தவொரு சீசனிலும் தமிழகத்தைச் சார்ந்தவர் பங்கேற்றது இல்லை. ஆனால் அப்பிம்பத்தை உடைத்து ஒரு தமிழ் நடிகை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.

"ஸ்ருதிகா", தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான "தேங்காய் சீனிவாசன்" அவர்களின் பேத்தி ஆவார். சினிமா குடும்ப பின்னணியில் பிறந்த இவர் சூர்யா நடிப்பில் வெளியான "ஸ்ரீ" திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி, 'தித்திக்குதே', 'நளதமயந்தி' திரைப்படங்களிலும், மலையாள திரைப்படத்திலும் நடித்து உள்ளார்.
சில ஆண்டு கால இடைவெளிக்குப்பின் தனியார் தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி சீசன் 3', நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது குறும்புக்கார குணத்தினால் மக்கள் மனதை வென்றார். அதைத்தொடர்ந்து அத்தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் இன்று இந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.
- ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் நாளை ரிலீஸ் ஆகிறது.
- தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஐந்து காட்சிகள் திரையிடப்படும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். இயக்குனர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழகம் உள்பட உலகமெங்கும் நாளை ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தமிழக திரையரங்குகளில் பொதுவாக நான்கு காட்சிகள் திரையிடப்படும். இந்த நிலையில் சிறப்பு காட்சிக்கு அதாவது கூடுதலாக ஒரு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் நாளை ஐந்து காட்சிகள் திரையிடப்படும்.
முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதி காட்சி இரவு 2 மணி வரை திரையிடலாம். நாளை ஒருநாள் மட்டும் ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இவர்களது திருமண நிகழ்ச்சியில் ஷாரூக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த இரண்டு வருடங்களாக அந்த வீடியோ வெளியாவது குறித்து நெட்பிளிக்ஸ் தரப்பில் தகவல் வெளியாகவில்லை.
நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடைகளைத் தாய் மூலம் பெற்ற, உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்த இவர்களது திருமண நிகழ்ச்சியில் ஷாரூக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியின் வீடியோவை நெட்பிளிக்ஸ் ஓடிடி தலற்றிக்கு விற்றார்கள் என்று செய்திகள் பரவின.

கடந்த இரண்டு வருடங்களாக அந்த வீடியோ வெளியாவது குறித்து எந்த தகவலும் நெட்பிளிக்ஸ் தரப்பில் இருந்து வராத நிலையில் தற்போது அந்த வீடியோ விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.நெட

'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற தலைப்பில் 1.21 மணி நேரம் கால அளவு கொண்ட படமாக இது இருக்கும் என்று நெட்பிளிக்ஸ் பக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1.21 மணி நேரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த நிகழ்வில் நயன்தாராவின் பேட்டி, திருமணத்திற்கு வந்திருந்தவர்களின் வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்றது.
- ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர்.
70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்றது. விருது வாங்கும் பல்வேறு திரைப்பிரபலங்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மணிரத்னம், லைகாவின் சுபாஸ்கரன், ஏ.ஆர் ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக் கொண்டனர்.
சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான தேசிய விருதை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி பெற்றார். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக இந்த விருதை அவர் பெற்றார்.
ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர். இவர் அஞ்சலி திரைப்படத்தில் முக்கிய குழந்தை நடத்திரமாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
அவர் செய்தியாளரை சந்தித்தபோது கூறியது " ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக 4 விருது வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது."
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் ஆண்டனி சமீபத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் ஹிட்லர் திரைப்படத்தில் நடித்தார்.
- இதைத் தொடர்ந்து அடுத்ததாக அறிமுக இயக்குனரான லியோ ஜான் பால் இயக்கத்தில் நடித்துள்ளார்.
விஜய் ஆண்டனி சமீபத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் ஹிட்லர் திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படமுமே மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதைத் தொடர்ந்து அடுத்ததாக அறிமுக இயக்குனரான லியோ ஜான் பால் இயக்கத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடந்தது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்பொழுது மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படத்தை விஜய் ஆண்டனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் இவருடன் சமுத்திரகனி, பிரிகிடா, தீப்ஷிகா, மகாநதி சங்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் இயக்குனரான லியோ ஜான் பால் இதற்கு முன் பிரபல திரைப்படங்களான அட்டகத்தி, பீசா, சூது கவ்வும் போன்ற திரைப்படங்களுக்கு படதொகுப்பாளராக இருந்தவர் ஆவார்.
இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க, யுவராஜ் ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்குனராக ராஜா பணியாற்றியுள்ளார். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






