கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது

இது கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் 13-வது படம் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Christopher Nolan
Published on

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கப்போகும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் புதிய படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் மேட் டிமன் நாயகனாக நடிக்கவுள்ளார்.

மேட் டிமன் இதற்கு முன்னதாக கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் 2014-ல் வெளிவந்த இன்டர்ஸ்டெல்லர் மற்றும் ஓபன் ஹெய்மர் படங்களில் நடித்துள்ளார்.தற்போது 3 ஆவது முறையாக நோலன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நோலனின் மனைவி எம்மா தாமஸ் தயாரிக்கிறார். இது கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் 13-வது படம் ஆகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி ஐமேக்ஸ் ஃபார்மெட்டில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான 'ஓபன்ஹெய்மர்' திரைப்படத்திற்கு 7 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com