வேட்டையன் சிறப்பு காட்சிக்கு அனுமதி

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் நாளை ரிலீஸ் ஆகிறது.தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் ஐந்து காட்சிகள் திரையிடப்படும்.
வேட்டையன் சிறப்பு காட்சிக்கு அனுமதி
Published on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். இயக்குனர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழகம் உள்பட உலகமெங்கும் நாளை ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழக திரையரங்குகளில் பொதுவாக நான்கு காட்சிகள் திரையிடப்படும். இந்த நிலையில் சிறப்பு காட்சிக்கு அதாவது கூடுதலாக ஒரு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் நாளை ஐந்து காட்சிகள் திரையிடப்படும்.

முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதி காட்சி இரவு 2 மணி வரை திரையிடலாம். நாளை ஒருநாள் மட்டும் ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com