நாளை ரிலீஸ்.. வசூல் வேட்டைக்கு ரெடியாகும் வேட்டையன்..!

வேட்டையன் படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கியுள்ளார். வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நாளை ரிலீஸ்.. வசூல் வேட்டைக்கு ரெடியாகும் வேட்டையன்..!
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் வேட்டையன். இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் தமிழகம் உள்பட உலகமெங்கும் நாளை ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னதாக இந்தப் படத்தின் பாடல்கள் வெளியான நிலையில், இந்தப் படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com