என் மலர்
சினிமா செய்திகள்
- கிராமங்களில் மட்டுமல்ல. இந்திய அளவிலும் கிரிக்கெட்டில் சாதி அரசியல் இருக்கிறது.
- வீரர்களைத் தேர்வு செய்வதில் சாதி, மதம் ஆகியவை இன்றும் பங்கு வகிக்கின்றன.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது.
இத்திரைப்படத்தை இன்று விசிக தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் கண்டுகளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், "கிராமபுற கிரிக்கெட்டில் சாதி முக்கிய கூறாக இருப்பதனை இந்த படம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதெல்லாம் கசப்பான வெளிச்சத்திற்கு வராத உண்மைகள். கிராமம் மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் இது போன்ற பாகுபாடுகள் கொண்டு கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இப்படம் ஆணாதிக்க போக்கையும் வெளிப்படுத்தி உள்ளது. படத்தில் ஆணாதிக்கத்தை நொறுக்கும் வசனம் உள்ளது. சாதி திமிர் கூடாது என்பதனை போல ஆணாதிக்க திமிரும் கூடாது என்பதனை காட்டியுள்ளார்.
காதல் என்பது ஒரு குற்றமில்லை. சாதி, மதம் கடந்து காதல் செய்வதில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்கிற விழிப்புணர்வை பெண்கள் பெற்று வருகிறார்கள் என்பதை லப்பர் பந்துவில் வரும் பெண் கதாபாத்திரங்கள் உணர்த்துகின்றன. இது பாராட்டுக்குரிய ஒன்று.
சமூக நீதி, சமத்துவ சிந்தனையோடு இப்படம் அமைத்துள்ளது. இது வணிக நோக்கில் எடுத்த படமல்ல. இந்த தலைமுறையினருக்கு சொல்லப்பட வேண்டிய அரசியல் பாடம்" என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகிய படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை'
- மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகிய படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை' படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெருக்கூத்து கலைஞராக கருணாஸ் நடித்துள்ளார். அரசியல் புள்ளி ஒருவர் இறந்துவிட அவரது உடலை ஏற்றிக்கொண்டு அவர் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் களக்காடை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.
திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
அமேசான் ஓடிடி தளத்தில் திரைப்படம் வெளியாகியுள்ளது. திரையரங்கில் படத்தை காண தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது.
- சிறந்த நடிகைக்கான விருதை திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் விருதை பெற்றுக் கொண்டார்.
70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது. விருது வாங்கும் பல்வேறு திரைப்பிரபலங்கள் இவ்விழாழில் கலந்துக் கொண்டனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மணிரத்னம், லைகாவின் சுபாஸ்கரன், ஏ.ஆர் ரஹ்மான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக் கொண்டனர்.
சிறந்த நடிகைக்கான விருதை திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் விருதை பெற்றுக் கொண்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது.
- பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது. விருது வாங்கும் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் பாகம் 1 வென்றுள்ளது. இதற்கான விருதை குடியரசு தலைவரான திரவுபதி முர்மு வழங்க அதனை படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன் பெற்றுக்கொண்டார் .
சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் விருதை பெற்றுக் கொண்டார். இது அவரது 7-வது தேசிய திரைப்பட விழாவாகும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது.
- பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
70-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைப்பெற்று வருகிறது. விருது வாங்கும் திரைப்பிரபலங்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் பாகம் 1 வென்றுள்ளது. இதற்கான விருதை குடியரசு தலைவரான திரவுபதி முர்மு வழங்க அதனை படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன், இயக்குனர் மணி ரத்னம் பெற்றுக்கொண்டனர் .
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் வேட்டையன்.
- இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது.
இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணலில் இயக்குனர் ஞானவேல் ஒரு சுவாரசியமான தகவலை கூறினார் அதில் அவர் " அமிதாப் பச்சன் சார் ஃபர்ஸ்ட் பென்ச் மாணவரைப் போல அடுத்த நாளுக்கான காட்சிக்கான வசங்கள், காட்சி வடிவல், நான் எவ்வாறு நடிக்க வேண்டும் என அனைத்தையும் கேட்டு நச்செரிப்பார், அவருடன் இதை கூறுவதே மிகப்பெரிய சிரமம் ஆக இருக்கும். ஆனால் ரஜினிகாந்த் சார் அப்படி கிடையாது காட்சியின் வசனத்தை, டயலாக் பேப்பரை முன்னாள் கொடுத்தால் கூட படப்பிடிப்பின் போது பார்த்துக் கொள்ளலாம் என அசால்டாக கூறிவிடுவார்" என மிகவும் நகைச்சுவை பாணியில் கூறியுள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் சூர்யா நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் சூர்யா தற்பொழுது கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யாவின் கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.
வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன் சூர்யா நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமான் மேற்கொள்கிறார் என தகவல் பரவி வருகின்றன. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷம்' ஆகிய படங்களை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' மற்றும் இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.
- படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது.
நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' மற்றும் இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இளம் சமூதாயத்தின் காதல் பிரச்சனைகளை கொண்ட ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்றது.
இதைத்தொடர்ந்து படத்த்ன் அடுத்த பாடல் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும் என ஜிவி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த பாடல் ஒரு காதல் தோல்வி பாடலாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இப்பாடலை தனுஷ் பாடியிருப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் வேல்ஸ் பிலிம் தயாரிப்பு நிறுவனம் முக்கியமானது.
- படத்திற்கு அகத்தியா என்ற தலைப்பை வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் வேல்ஸ் பிலிம் தயாரிப்பு நிறுவனம் முக்கியமானது. இவரது தயாரித்த தேவி, தேவி 2, கோமாளி, LKG, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
தற்பொழுது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2, சுமோ , ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி போன்ற திரைப்படங்களை தயாரித்து வருகிறது.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனலின் அடுத்து தயாரிக்கப்போகும் படத்தை பற்றிய அறிவிப்பை தற்பொழுது அறிவித்துள்ளது.
படத்திற்கு அகத்தியா என்ற தலைப்பை வைத்துள்ளனர். இப்படத்தை பா. விஜய் இயக்கியுள்ளார். ஜீவா, அர்ஜூன் மற்றும் ராஷி கன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இது மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பீரியட் ஃபேண்டசி டிராமா கதைக்களத்துடன் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தை பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- . ஒரு வருடத்திற்கு முன்பாக அவரது சுற்றுலா நிறுவனமான வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours நிறுவப்பட்டது.
- வீனஸ் மோட்டார் சைக்கிள் Tours ஒவ்வொரு வகையான பயணிகளுக்கும் ஒரு சாகசத்தை உறுதி செய்கிறது.
நடிகரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலருமான அஜித்குமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது தொழில்முறை ரேஸிங் டீமை அறிமுகப்படுத்தினார். ஒரு வருடத்திற்கு முன்பாக அவரது சுற்றுலா நிறுவனமான வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ரைட் ஏற்பாடு செய்ததற்காக மதிப்புமிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஐலேண்ட் ரம்பிள் என்று அழைக்கப்படும் இந்த வரலாற்று நிகழ்வில், ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் தீவுகளில் பயணித்தது அனைவரையும் ஈர்த்தது.
இந்தியா, ஸ்காட்லாந்து, போர்ச்சுகல், வியட்நாம், தாய்லாந்து, அரேபியன் ஒடிஸி (யுஏஇ, ஓமன்), பெஸ்ட் ஆஃப் ஆல்ப்ஸ் (ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி) போன்ற சிலிர்ப்பான நாடு கடந்த பயணங்களையும் அஜித்தின் வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours வழி நடத்தியுள்ளது.
ஒவ்வொரு பயணமும் கவனத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது. பயணத்தில் ரைடர்ஸ் இயற்கைக்காட்சிகள் மற்றும் இதுவரை பார்க்காத இடங்கள் என இரண்டிலும் சிறந்த அனுபவத்தை பெற உறுதி செய்கிறது. மோட்டார் சைக்கிள் பயணம் மட்டுமல்லாது கூடுதலாக கார் மற்றும் சைக்கிள் பயணங்களுடன் வீனஸ் மோட்டார் சைக்கிள் Tours ஒவ்வொரு வகையான பயணிகளுக்கும் ஒரு சாகசத்தை உறுதி செய்கிறது.
அந்தமானின் ரம்பிள் தீவில் ஹார்லி-டேவிட்சன் நிகழ்வில் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours' நிறுவனத்தின் இந்த சமீபத்திய முயற்சி சாதனை படைத்தது. ஹார்லி-டேவிட்சன் மெரினா பிரிவு, சென்னை மற்றும் ஹார்லி-டேவிட்சன் பஞ்சாரா பிரிவு, ஹைதராபாத் ஆகியவற்றுடன் இணைந்து வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours இந்த நிகழ்வை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நடத்தியது. ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்கள் மூலம் போர்ட் பிளேர் வழியாக சவாரி செய்து, மறக்க முடியாத பயணத்தை உருவாக்கியது.
இந்த ரம்பிள் தீவு பயணத்தின் த்ரில்லோடு அந்தமான் தீவுகளின் கண்கொள்ளா அழகையும் ரைடர்களுக்குக் கொடுத்து வருகிறது வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours.
இந்த நிகழ்வு வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours நிறுவனத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது மட்டுமல்லாது, இந்தியாவின் வளர்ந்து வரும் மோட்டார் சைக்கிள் சுற்றுலா துறையின் திறனையும் எடுத்துக்காட்டுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலான் படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்தது.
- தங்கலான் படத்தில் வைணவ மதத்தை நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை திரைப்படம் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்தது
இந்நிலையில், தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் தாக்கல் செய்த மனுவில், புத்த மதத்தை புனிதமான முறையிலும், வைணவ மதத்தை நகைச்சுவையாகவும் சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதால், படம் ஒடிடியில் வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- இந்த மனு கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி விசாரணைக்கு வந்தது.
தமிழில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அவர் இயக்கி நடித்து வெளியான ராயன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முன்னணி நடிகரான தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.
சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். இவ்விவகாரம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கருத்து வேறுபாட்டால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித் தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
பரஸ்பரம் விவாகரத்துக் கோரி இருவர் தரப்பிலும் சென்னை குடும்ப நல நீதின்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்து, இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகாததால் விசாரணையை வரும் 19ம் தேதி ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






