என் மலர்
சினிமா செய்திகள்
- வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர்.
வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் நடிகர்களின் கதாப்பாத்திரத்தை குறித்து படக்குழு போஸ்டர் ஒவ்வொன்றாக அப்டேட் கொடுத்தனர். படத்தின் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரம் நிறைந்த ஒரு கொள்ளை கூட்டத்துடன் ஒரு வங்கியை கொள்ள திட்டமிடுகின்றனர். இது தொடர்பான காட்சிகள் டிரைலரில் அமைந்துள்ளது.
திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் ப்ளடி பெக்கர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் ப்ளடி பெக்கர் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கவின் ஒரு பிச்சைகாரன் தோற்றத்தில் காணப்படுகிறார். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தற்பொழுது படத்தில் கவின் கதாப்பாத்திரத்தின் இண்ட்ரோ வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. கவின் பிச்சைக்காரனாக சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார். கால் இல்லாதவன் போல் நடித்து பிச்சை எடுப்பது போல் காட்சிகள் அமைந்துள்ளது. படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சாலைகளில் பைக் ஓட்டி சாகசம் செய்து அதை யூ டியூப்பில் வீடியோவாக பதிவேற்றி பிரபலமானவர் டிடிஎஃப் வாசன்.
- இவரை கதாநாயகனாக வைத்து செல்அம் என்ற இயக்குனர் "மஞ்சள் வீரன்" என்ற படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்து இருந்தனர்.
சாலைகளில் பைக் ஓட்டி சாகசம் செய்து அதை யூ டியூப்பில் வீடியோவாக பதிவேற்றி பிரபலமானவர் டிடிஎஃப் வாசன்.
யூடியூப் மூலம் பிரபலமான இவரை கதாநாயகனாக வைத்து செல்அம் என்ற இயக்குனர் "மஞ்சள் வீரன்" என்ற படத்தை இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது.
"மஞ்சள் வீரன்" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் அப்படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பை இயக்குனர் செல்அம் தெரிவித்து இருந்தார். இந்த செய்தி இணையத்தில் வைரலானது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக டிடிஎஃப் வாசன் அவரது யூடியூம் சேனலில் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் "என்னிடம் இப்போது வரை மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட தகவலை இயக்குனர் செல்அம் தெரிவிக்கவே இல்லை. நான் தொடர்புகொண்டாலும் அவர் பேசவே தயாராக இல்லை. என்னிடம் சொல்லியிருந்தால் நானே ஒத்துக்கொண்டு விலகியிருப்பேன். ஆனால் படப்பிடிப்பு நடத்தாமலேயே அதற்கு நான் வரவில்லை என்று நேரடியாக பத்திரிகையாளர்களிடம் கூறியது மிகப்பெரிய தவறு. அண்ணன் அண்ணன் என்று சொல்லிக்கொண்டு மலிவான விளம்பரத்திற்காக என்னை அவர் பயன்படுத்தியது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதுபோலான ஒரு பச்சதுரோகத்தை நான் பார்த்ததே கிடையாது" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார்
- பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவித்துள்ளார், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி, இந்த எதிர்பாரா அறிவிப்பு மக்களிடம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் நேற்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸொடின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார்.
ஒவ்வொரு போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி, ஆண்களா? பெண்களா? என வீட்டைப் பிரித்து ஆச்சரியம் தந்தவர், எபிஸோடின் முடிவில் மீண்டும் ஒரு அதிர்ச்சியைத் தந்தார்.
இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வீட்டிற்குள் நுழைந்த உடனே அறிவிக்கப்பட்ட எவிக்சன், வீட்டுக்குள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது.
இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து 24 மணி நேரத்தில் எவிக்ட் ஆகி செல்வது சாச்சனா வெளியேற்றப்பட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
- திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'மார்க் ஆண்டணி' மிகப்பெரிய ஹிட் அடித்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இதை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் , நஸ்லேன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
படப்பிடிப்பு பணிகள் ஐதரபாத்தில் சில நாட்கள் நடைப்பெற்றது. அடுத்ததாக பணிகள் ஸ்பெயினில் நடைப்பெறவுள்ளது. படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் புதிய தோற்றமுடைய புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் தனுஷ் அவரது 50 வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்து இருந்தார்.
- திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் தனுஷ் அவரது 50 வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்து இருந்தார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
படத்தில் இடம் பெற்ற வாட்டர் பாக்கெட் மற்றும் அடங்காத அசுரன் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. தற்பொழுது வாட்டர் பாக்கெட் வீடியோ பாடல் யூடியுபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. வாட்டர் பாக்கெட் பாட்டில் அபர்னா பாலமுரளி மற்றும் சுதீப் கிஷன் ஆடிய நடனம் மிகப்பெரிய வைரலானது.
தனுஷ் அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லிகடை ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். குபேரா படத்தில் நடித்தும் வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
- ஸ்பெயின் வீதிகளில் அஜித்தும், ஷாலினியும் மகிழ்ச்சியுடன் உலா சென்றுள்ளனர்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகரான அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் படப்பிடிப்புக்கு சில காலம் இடைவெளி விடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் அஜித் தனது மனைவி ஷாலினி, மகன், மகளுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
ஸ்பெயின் வீதிகளில் அஜித்தும், ஷாலினியும் மகிழ்ச்சியுடன் உலா சென்றுள்ளனர். மேலும் அங்கு நடந்த கால்பந்து போட்டியை மகன் ஆத்விக்குடன் ஷாலினி கண்டு ரசித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஷாலினி.
வீதியில் அவர்கள் இருவரும் நடந்து வருவதை அவரே செல்ஃபீ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் நாம் இருவரும் இணைந்து இருப்பதே சிறந்த இடமாக இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
அஜித் பைக் சுற்றுலா செல்லும் போது பேசிய வீடியோ அண்மையில் வெளியாகி மிகவும் வைரலானது. அதைத்தொடர்ந்து தற்பொழுது இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த ஜூலை 12 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மகாராஜா திரைப்படம் வெளியாகி உலக அளவில் ரீச் ஆனது.
- 20 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட மகாராஜா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளிவந்த மகாராஜா திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.
வெகு நாட்களாக விஜய் சேதுபதியைக் கதாநாயகனாகத் திரையில் பார்க்காத ரசிகர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்தது. விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஒரு சாதாரண கதையை நித்திலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியிருந்தார். திரையரங்குகளைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மகாராஜா திரைப்படம் வெளியாகி உலக அளவில் ரீச் ஆனது.

நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான மகாராஜா திரைப்படம், அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. 20 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட மகாராஜா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு 100 வது நாள் வெற்றி விழாவில் மகாராஜா படக்குழு BMW காரை பரிசாக வழங்கியுள்ளது. காரின் சாவியை விஜய் சேதுபதி வழங்கிய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு, படக்குழுவிக்கு நித்திலன் நன்றி தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2022 ஆம் ஆண்டு கஜோல் மற்றும் விஷால் ஜெத்வா நடிப்பில் வெளியான சலாம் வெங்கி திரைப்படத்தை இயக்கினார்.
- படப்பிடிப்பு மற்றும் நடிகர்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
80-களில் திரையுலகில் நடிகை ரேவதி மிகவும் பிரபலமாக இருந்தார். புன்னகை மன்னன் , மௌன ராகம், அரங்கேற்ற வேலை, மண் வாசனை, வைதேகி காத்திருந்தாள், மகளிர் மட்டும், அஞ்சலி போன்ற பல வெற்றி தமிழ் திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இது தவிர்த்து ரேவதி மலையாளம் மற்றும் இந்தி திரையுலகிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பது மட்டுமல்லாமல் சில திரைப்படங்களை இயக்கவும் செய்துள்ளார் ரேவதி. முதன் முதலாம் 2002 ஆம் ஆண்டு மிடிர், மை ஃப்ரெண்ட் என ஆங்கில படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த ஆங்கில திரைப்படத்திற்கான விருதை பெற்றது.
கடைசியாக 2022 ஆம் ஆண்டு கஜோல் மற்றும் விஷால் ஜெத்வா நடிப்பில் வெளியான சலாம் வெங்கி திரைப்படத்தை இயக்கினார்.தற்பொழுது அடுத்ததாக ஒரு வெப் சீரிசை இயக்க தயாராகியுள்ளார் ரேவதி.
இந்த வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இத்தொடரில் இணை இயக்குனராக சித்தார்த் ராமசாமி பணியாற்றவுள்ளார். இதனை ரேவதி அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.படப்பிடிப்பு மற்றும் நடிகர்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார்.
- ஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் 'கோலமாவு கோகிலா' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 'டாக்டர்', விஜய்யின் 'பீஸ்ட்' , ரஜினியின் 'ஜெயிலர்' போன்ற படங்களை இயக்கினார் . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் உலகளவில் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப்படைத்தது.
அதனை தொடர்ந்து 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். பின்னர் ஜூனியர் என்டிஆரை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 'தேவரா' படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரின் இந்தப் புதிய படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக தேவரா படத்தின் புரமோசனுக்காக சென்னை வந்திருந்த ஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
அடுத்ததாக இவர், இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் விலகியுள்ளார். 'ஜெயிலர் 2' படம் நிறைவடைந்த பின்னரே, தெலுங்கு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
- இந்த முறை வீடு, களம், போட்டியாளர்கள், விதிகள் என எல்லாமே புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த முறை ஆரம்பமே அமர்க்களமாக, புதிய ஹோஸ்டுடன், பல புதுமைகளுடன், முதல் எபிஸோடே களை கட்ட ஆரம்பித்துள்ளது.
இந்த முறை வீடு, களம், போட்டியாளர்கள், விதிகள் என எல்லாமே புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப எபிஸோடே ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்துடன் களை கட்ட ஆரம்பித்துள்ளது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார்.
இந்த முறை ஒவ்வொரு போட்டியாளர்களும் பல வித்தியாசமான களங்களின் பின்னணியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களை தன் பாணியில் கனிவுடன் அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி, அவர்கள் ஒவ்வொருவரிடமும் நண்பனைப்போல் மிக இயல்பாக உரையாடி, அவர்களின் பின்னணி, அவர்கள் பிக்பாஸ் வந்த காரணம் என, எல்லாவற்றையும் கேட்டறிந்து, உற்சாகப்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது. மேலும் போட்டியாளர்கள் தவறு செய்தால் நான் தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டேன் என அதிரடியும் காட்டினார்.
பிக்பாஸ் விளையாட்டை ஆரம்பித்த விஜய் சேதுபதி இந்தமுறை உலகத்தில், நாட்டில், வீட்டில் என சமூகத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் ஆண்களா? பெண்களா? எனும் தீம் நம் பிக்பாஸில் அறிமுகமாகிறது என ஆச்சரியப்படுத்தினார்.
இந்த முறை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட வீட்டில், வீட்டின் நடுவே ஒரு பெரிய கோடு கிழிக்கப்பட்டு, ஒரு பக்கம் கிச்சனுடன் பெட்ரூம் வரிசையும், இன்னொரு புறம் டாய்லெட்டுடன் பெட்ரூம் வரிசையும் என, இரண்டு பெட்ரூம்கள் வரிசைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. முதல் ஆறு போட்டியாளர்கள் நுழைந்ததும், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக அவர்களுக்கு பெட்ரூம்களை தேர்ந்தெடுக்கச் சொல்லப்பட்டது. ஆரம்ப எபிஸோடிலேயே ஆண்களா? பெண்களா? என விளையாட்டு களை கட்டியது.
இருவரும் சிங்கிள் பெட் ரூம்கள் இருக்கும் அறையையே தேர்ந்தெடுக்க, ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமானது.
புதிய விதிகள், புதிய களம், புதிய போட்டியாளர்களுடன், ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்தை விஜய் சேதுபதி, எப்படிக் கொண்டு செல்லப் போகிறார் எனும் ஆவல் பார்வையாளர்களிடம் அதிகரித்துள்ளது.
முழுக்க முழுக்க சுவாரஸ்யங்களை அள்ளித்தரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை, உங்கள் விஜய் தொலைக்காட்சி மற்றும் 24/7 டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்திலும் கண்டுகளியுங்கள்.
- சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
- படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படத்தின் பணிகள் ஆரம்பித்து சில மாதங்களிலயே படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்தி சுப்பராஜ் பிளானிங் மற்றும் படப்பிடிப்பு வேகம் அபாரமாக இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






