சும்மா மஜா வா 100 மில்லியன் பார்வைகளை கடந்த வாட்டர் பாக்கெட் பாடல்

நடிகர் தனுஷ் அவரது 50 வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்து இருந்தார்.திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
சும்மா மஜா வா 100 மில்லியன் பார்வைகளை கடந்த வாட்டர் பாக்கெட் பாடல்
Published on

நடிகர் தனுஷ் அவரது 50 வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை அவரே இயக்கி அதில் நடித்து இருந்தார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

படத்தில் இடம் பெற்ற வாட்டர் பாக்கெட் மற்றும் அடங்காத அசுரன் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. தற்பொழுது வாட்டர் பாக்கெட் வீடியோ பாடல் யூடியுபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. வாட்டர் பாக்கெட் பாட்டில் அபர்னா பாலமுரளி மற்றும் சுதீப் கிஷன் ஆடிய நடனம் மிகப்பெரிய வைரலானது.

தனுஷ் அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லிகடை ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். குபேரா படத்தில் நடித்தும் வருகிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com