என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • வினீத் பிரசன்னா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார்
    • ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

    2021 ஆம் ஆண்டு வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் மற்றும் அம்ரிதா ஐயர் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் லிஃப்ட். இப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

    இப்படத்தின் இயக்குனரான வினீத் பிரசன்னா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது.

    சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. பலதரப்பட்ட மக்களால் திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    வினீத் வரப்பிரசாத் இயக்க இருக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகரான செம்பன் வினோத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஹரிஷ் கல்யாண் நடித்ததிலே மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக இருக்கும் திரைப்படமாகும். இப்படத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகியுள்ள படம் 'கங்குவா'.
    • கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி படத்தை வெளியாகவுள்ளது.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

    படத்தின் க்ளிம்ஸ் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு ஜூலை 22-ந் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வெளியானது.

    கடந்த ஜூலை மாதம் வெளியான 'ஃபயர் சாங்...' எனும் முதல் பாடல் ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

    இதையடுத்து கடந்த மாதம் படத்தின் டிரைலர் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. திரைப்படம் வரும் நவம்பர் 14-ந் தேதி படத்தை வெளியிடுவதாக கங்குவா தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 20 ஆம் தேதி நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமரன் திரைப்படத்தி இசை வெளியீட்டு விழாவும் அக்டோபர் 3- ஆம் வாரம் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 60 வயதான கீனு ரீவ்ஸ் முதல் முறையாக தொழில்முறை கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார்.
    • கார் பந்தயத்தில் 25 ஆவது இடம் பிடித்த கீனு ரீவ்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    மேட்ரிக்ஸ், ஜான்விக் போன்ற படங்களில் நடித்து உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் இண்டியானாபோலிஸ் மோட்டார் ஸ்பீட்வேயில், டொயோட்டா ஜிஆர் கோப்பையில் பங்கேற்றார். இதன்மூலம் தொழில்முறை கார் பந்தயத்தில் அவர் அறிமுகமானார்.

    60 வயதான கீனு ரீவ்ஸ் பந்தயத்தின் 45 ஆவது நிமிடத்தில் ரேஸ் தடத்திலிருந்து வெளியேறி புல் தரைக்குள் சென்றார். பின்னர் சுதாரித்து கொண்டு மீண்டும் ரேஸ் தடத்திற்குள் நுழைந்தார். இதனால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

    35 போட்டியாளர்களின் முதல் 31 இடங்களை பிடிக்கும் போட்டியாளர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவர். அவ்வகையில் இப்போட்டியில் 25 ஆவது இடம் பிடித்த கீனு ரீவ்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    • பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • பிளாக் திரைப்படம் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    மாநகரம், மான்ஸ்டர், டானாக்காரன், இறுகப்பற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் அடுத்ததாக ஜீவா நடித்துள்ள "பிளாக்" திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம் பற்றி கதையாக் அமைந்துள்ளது.

    பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    புதிய கேடட் கமினியூட்டியில் முதல் ஆளாக வீட்டை வாங்கிக் கொண்டு வருகின்றனர் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் தம்பதி. அப்பொழுது அந்த வீட்டில் அவர்கள் இருக்கும் சுற்றுச் சூழலில் அமானுஷ்யங்கள் நடப்பதுப் போல் டிரைலரில் காட்சிகள் அமைந்துள்ளது.

    திரைப்படம் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த நேர் காணல் ஒன்றில் பிரியா பவானி சங்கரிடம் தொகுப்பாளர் " எந்த விஷயத்துக்கு பிரியா எப்பொழுதுமே நோ என கூறுவார் என்று கேட்ட கேள்விக்கு பிரியா " என்னுடையா உடம்பை என்றைக்கும் ஒரு பொருளாகவோ , வியாபாரமாகவோ விற்க மாட்டேன். அதை பிரதானமாக வரும் கதாப்பாத்திரத்தில் நடிக்க எனக்கு என்றும் உடன்பாடு இல்லை " என கூறியுள்ளார்.

    டிமான்ட்டி காலனி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதேப்போல் இந்த படமும் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் வெற்றியை பெற்றுக் கொடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் வேல்ஸ் பிலிம் தயாரிப்பு நிறுவனம் முக்கியமானது.
    • வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனலின் அடுத்து தயாரிக்கப்போகும் படத்தை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் வேல்ஸ் பிலிம் தயாரிப்பு நிறுவனம் முக்கியமானது. இவரது தயாரித்த தேவி, தேவி 2, கோமாளி, LKG, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

    தற்பொழுது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2, சுமோ , ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி போன்ற திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

    வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனலின் அடுத்து தயாரிக்கப்போகும் படத்தை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இப்படத்தில் ஜீவா மற்றும் அர்ஜூன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிப்பில் வெளியான 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும்.
    • திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது.

    பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிப்பில் வெளியான 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. லப்பர் பந்தை பார்த்த ரசிகர்கள் பலர், சமூக வலைதளங்களில் இந்தப் படத்திற்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

    திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது. திரைப்படம் மக்களிசம் அமோக ஆதரவை பெற்றுள்ளது. படத்தில் தினேஷ் வரும் பொழுது விஜயகாந்தின் பொட்டு வச்ச த்ங்கக் குடம் பாட்ட்சு ஒளிப்பரப்பாகும்.

    தற்பொழுது படத்தில் தினேஷ் இண்ட்ரொ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது.
    • கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் 'தக் லைஃப்' படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.

    1991-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'தளபதி' படம் இன்றளவும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது. ஆக்ஷன், காதல் சென்டிமெண்ட் ஆகியவை கொண்ட கிளாசிக் படமான 'தளபதியி'ல் மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

    நடிகர் அரவிந்த் சாமி தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமும் இதுவே ஆகும். ரஜினி மற்றும் மணி ரத்னம் கூட்டணி மீண்டும் இணையுமா என்று நீண்ட காலமாக ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.



    இந்நிலையில், தற்போதைய தகவலின் படி ரஜினிகாந்த்- மணிரத்னம் ஆகியோர் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய படம் குறித்தான அறிவிப்பு ரஜினிகாந்த் பிறந்தநாளான டிசம்பர் 12-ந்தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.

    இதற்கிடையே ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' வருகிற 10-ந்தேதி வெளியாக உள்ளது. மறுபுறம் கமல்ஹாசன், சிம்பு நடிக்கும் 'தக் லைஃப்' படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஹன்சிகா பிரசித்த பெற்ற ஸ்தலங்களில் வழிபாடு செய்து வருகிறார்.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் உடன் 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் 'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி 'போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

    இதனை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, அதன்பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 'ரவுடி பேபி', 'காந்தாரி' போன்ற படங்கள் உள்ள நிலையில், 'நிஷா' என்ற தெலுங்கு வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

    மேலும் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஹன்சிகா பிரசித்த பெற்ற ஸ்தலங்களில் வழிபாடு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹன்சிகா தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்துள்ளார். அதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜானி மாஸ்டருக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.
    • "திருச்சிற்றம்பலம்" படத்தில் இடம்பெற்ற "மேகம் கருக்காதா" பாடலுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநரான ஜானி மீது கடந்த மாதம் பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். இதையடுத்து ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்தவரை தேடி வந்தனர். இதனை தொடர்ந்து கோவாவில் வைத்து ஜானியை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து, புகார் கொடுத்த பெண் மைனராக இருக்கும் போதிருந்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.

    இதனை தொடர்ந்து தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜானி மாஸ்டர் ஜாமின் கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜாமின் பெறுவதற்கு ரூ. 2 லட்சத்திற்கான உத்தரவாதத்தை இருவர் அளிக்க வேண்டும், ஊடகங்களில் பேட்டி எதுவும் கொடுக்க கூடாது, மற்றொரு இடைக்கால ஜாமின் பெறக்கூடாது போன்ற நிபந்தனைகளை விதித்து ஜானி மாஸ்டருக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கினர்.

    இந்த நிலையில், நாளை மறுநாள் தேசிய விருந்துகள் வழங்கும் விழா நடக்கவிருந்த நிலையில், ஜானிக்கான தேசிய விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஜானிக்கு 2022 ஆம் ஆண்டு வெளியான "திருச்சிற்றம்பலம்" படத்தில் இடம்பெற்ற "மேகம் கருக்காதா" பாடலுக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவர் தெலுங்கிலும் பல படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
    • மலையாளம், கன்னடத்திலும் படங்கள் நடிக்கிறார்.

    'வாத்தி' படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சம்யுக்தா. இவர் தெலுங்கிலும் பல படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். மலையாளம், கன்னடத்திலும் படங்கள் நடிக்கிறார்.

    படங்கள் நடிப்பது போலவே, சமூக வலைதளங்களிலும் சம்யுக்தா மேனன் சுறுசுறுப்பாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் தினந்தோறும் தனது அன்றாட நடவடிக்கைகள் குறித்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்.

    அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடவும் செய்கிறார். வாட்டசாட்டமான நடிகை என்று வர்ணிக்கப்படும் சம்யுக்தாவை, இன்ஸ்டாகிராமில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடருகிறார்கள். 

    இதற்கிடையில் சமீபத்தில் கருப்பு நிற உடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை சம்யுக்தா வெளியிட்டுள்ளார்.

    இந்த படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சம்யுக்தாவின் அழகை புகழ்ந்து ரசிகர்கள் கருத்துகளை அள்ளி தெளிக்க, அம்மணி படுகுஷியாம்.

    • S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படம்.
    • இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார்.

    S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' எனும் இந்த திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, 'அருவி' மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார்.

    நடிகர் வெற்றி பேசுகையில், '' ஆலன் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் - தயாரிப்பாளர் சிவாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

     

    இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''வெற்றி என்று சொன்னால் வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடிப்பவர் என்ற ஒரு எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கிறது எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. இந்தப் படத்தை தேர்வு செய்து நடித்ததற்காக நடிகர் வெற்றிக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது இந்த வெற்றிப் பயணத்தை மாற்றிக் கொள்ளாமல்... புதிய முயற்சிக்கு மேற்கொள்ளுங்கள். இதுவும் காதல் கதை தான். ஆனால் இதிலும் கமர்ஷியல் கலந்திருக்கிறது. " என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் வேட்டையன்.
    • அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது. தற்பொழுது படத்தின் ஹண்டர் வண்டாரு என்ற பாடலின் லிரிக் வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது.

    படத்தில் வரும் ரஜினிகாந்த் காட்சிகள் மிகவும் ஸ்டைலாகவும் மாஸாகவும் அமைந்துள்ளது. இதனால் இப்பாடலின் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்தப் படம் வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி ஆயுத பூஜையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×