மதுரையில் ஹன்சிகா மோத்வானி.. பயபக்தியுடன் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்

ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஹன்சிகா பிரசித்த பெற்ற ஸ்தலங்களில் வழிபாடு செய்து வருகிறார்.வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரையில் ஹன்சிகா மோத்வானி.. பயபக்தியுடன் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம்
Published on

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் உடன் 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் 'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி 'போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, அதன்பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 'ரவுடி பேபி', 'காந்தாரி' போன்ற படங்கள் உள்ள நிலையில், 'நிஷா' என்ற தெலுங்கு வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

மேலும் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஹன்சிகா பிரசித்த பெற்ற ஸ்தலங்களில் வழிபாடு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹன்சிகா தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்துள்ளார். அதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com