என் மலர்
சினிமா செய்திகள்
- தளபதி 69 படத்திலும் பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
- பிரியாமணி தொழில் அதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கண்களால் கைது செய்' படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் பிரியாமணி. 'பருத்தி வீரன் இவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரியாமணி தற்போது பிசியாக நடித்து வருகிறார்.
எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்திலும் பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
பிரியாமணி தொழில் அதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரை பிரியாமணி திருமணம் செய்து கொண்டது அப்போது விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரியாமணி தனது திருமணம் தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஒரு முஸ்லிமை திருமணம் செய்வதன் மூலம் எனக்கு பிறக்கப்போகும் குழந்தைகள் பயங்கரவாதிகளாக மாறுவார்கள் என்று சிலர் குறுஞ்செய்தி அனுப்பினர். அது என்னை மிகவும் பாதித்தது. ஜாதி அல்லது மதத்தை மீறி திருமணம் செய்துகொண்ட பல முன்னணி நடிகர்கள் உள்ளனர். அவர்கள் மத வேறுபாடின்றி ஒருவரையொருவர் காதலித்தார்கள். ஏன் அவர்கள் மீது இவ்வளவு வெறுப்பு காட்டப்படுகிறது என்று புரியவில்லை.
பிரியாமணி இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக எழுந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த பிரியாமணி, "நான் மதம் மாறிவிட்டேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? இது என் முடிவு. நான் மதம் மாறமாட்டேன் என்று திருமணத்திற்கு முன்பே முஸ்தபாவிடம் தெரிவித்துள்ளேன். நான் இந்து மதத்தில் பிறந்தவள். ஆகையால், எப்போதும் என் நம்பிக்கையைப் பின்பற்றுவேன். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையை மதிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
- இப்படத்திற்கு ஒன்ஸ் மோர் என படக்குழு பெயரிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 4 ' எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் கடந்த மாதம் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இப்படத்திற்கு ஒன்ஸ் மோர் என படக்குழு பெயரிட்டு. அதற்கு டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. டைட்டில் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது எகஸ் தளத்தில் வெளியிட்டார்.
படத்தின் இசையை மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இவர் இதற்கு முன் ஹருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப் படங்களை இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் இதற்கு முன் மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
டைட்டில் டீசர் மிகவும் அழகாக அமைந்துள்ளது . அர்ஜூன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இருவரும் வேறு வேறு விருப்பத்தை கொண்டவர்களாக உள்ளனர். அவர்களது நண்பர்களும் வெவ்வேறு விருப்பங்களுடன் உள்ளனர். இவர்களுக்கு நடுவே காதல் மலர்கிறது. என்பதே கதையின் அடித்தளமாகும்.
திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் அடுத்ததாக ஜீவா நடித்துள்ள "பிளாக்" திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
- பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
மாநகரம், மான்ஸ்டர், டானாக்காரன், இறுகப்பற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் அடுத்ததாக ஜீவா நடித்துள்ள "பிளாக்" திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம் பற்றி கதையாக் அமைந்துள்ளது.
இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம். சென்னையில் எடுக்கப்பட்ட இப்படத்தின் படபிடிப்பு முடிவடைந்து படம் வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
புதிய கேடட் கமினியூட்டியில் முதல் ஆளாக வீட்டை வாங்கிக் கொண்டு வருகின்றனர் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் தம்பதி. அப்பொழுது அந்த வீட்டில் அவர்கள் இருக்கும் சுற்றுச் சூழலில் அமானுஷ்யங்கள் நடப்பதுப் போல் டிரைலரில் காட்சிகள் அமைந்துள்ளது.
படத்தின் ரிலீஸ் தேதியை தற்பொழுது படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. டிமான்ட்டி காலனி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதேப்போல் இந்த படமும் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் வெற்றியை பெற்றுக் கொடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது.
- சார் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
போஸ் வெங்கட் தற்பொழுது விமல் நடிப்பில் சார் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சார் திரைப்படம் வருகின்ற 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித்குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- நடிப்பதில் மட்டும் ஆர்வம் அல்லாமல் அவருக்கு கார் மற்றும் பைக் ரேசிங் மீது அளவுக்கடந்த ஆர்வம் இருக்கிறது.
அஜித்குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.
நடிப்பதில் மட்டும் ஆர்வம் அல்லாமல் அவருக்கு கார் மற்றும் பைக் ரேசிங் மீது அளவுக்கடந்த ஆர்வம் இருக்கிறது. சமீபத்தில் இரண்டு உயர்ரக ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார். மற்றும் ஐரோப்போவில் நடக்கவுள்ள கார் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்துக்கொள்ளப்போகிறார் என வீடியோ வெளியானது.
அவர் சில மாதங்களுக்கு முன் ஒரு நீண்ட பயணத்தை பைக்கில் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தை அவரது நிறுவனமான வீனஸ் மோட்டார்ஸ் சைக்கிள் டூர்ஸ் ஆவணப்படுத்தியது அதில் இருந்து ஒரு வீடியோ அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது " பயணம் ஒரு ஆகச்சிறந்த விஷயம். பயணமே சிறந்த கல்வியாக அமைகிறது. மதமும் சாதியும் நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட வெறுக்க வைக்கிறது' என்று ஒரு கூற்று உண்டு. அது ரொம்பவே உண்மை.. பயணம் மேற்கொள்ளும் போது தான் பலவித அனுபவங்கள் கிடைக்கும். பயணத்தின் மூலம் தேசம், மதம், கலாச்சாரம் கடந்து பலதரப்பட்ட மனிதர்களை உணர முடியும் என்று நடிகர் அஜித் குமார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் மிகவும் பரீட்சையமானவர் வனிதா விஜயகுமார்
- அவர்கள் இருவரும் இணைந்து Mr&Mrs என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையிலும் மிகவும் பரீட்சையமானவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப் பெரிய அளவில் ரீச் கிடைத்தது. ராபர்ட் மாஸ்டரும் வனிதா விஜயகுமாரும் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர். பின் மனகசப்பால் பிரிந்து விட்டனர்.
தற்பொழுது அவர்கள் இருவரும் இணைந்து Mr&Mrs என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் ப்ரோமோ விடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன் வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் கடற்கரையில் ஒன்றாக இருப்பது போல மற்றும் சேவ் தி டேட் என்ற போஸ்டர் வெளியாகு இணையத்தில் வைரலானது.
இதனால் நெட்டிசன்கள் மீண்டும் வனிதா திருமணம் செய்துக் கொள்ள போகிறாரா. என பலவாறு கமெண்டுகளை கொட்டித்தீர்த்தார்கள். ஆனால் இன்று படத்தின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
படத்தை வனிதா விஜயகுமாரின் நிறுவனமனான வனிதா பிலிம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தை வனிதா விஜயகுமார் எழுதி இயக்கியுள்ளார். படத்தை பற்றிய பிற செய்திகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படம் விரைவில் திரையரங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லிடியன் நாதஸ்வரம் ஏ . ஆர். ரகுமானின் கே. எம். இசைப் பள்ளியில் பயின்றவர்.
- லிடியன் நாதஸ்வரம் மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' படத்திற்குப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்
லிடியன் நாதஸ்வரம் ஏ . ஆர். ரகுமானின் கே. எம். இசைப் பள்ளியில் பயின்றவர். தனது இசைத் திறமைக்காக உலக அளவில் பாராட்டப்பட்டவர். உலக அளவில் தனது திறமையை வெளிப்படுத்தி 2019-ல் சிறந்த வெளிப்பாட்டாளருக்காண ஏழு கோடி ரூபாய் பரிசைப் பெற்றவர்.
அவர் பியானோ, டிரம் போன்ற பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கத் தெரிந்தவர்.
அவரது ஒருங்கிணைப்பில் சென்னை டிரம் பெஸ்ட் 2024 என்கிற இசை விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் அக்டோபர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.சர்வதேச அளவில் புகழ்பெற்ற டிரம்மர்கள் ஆறுபேர் வரவிருக்கிறார்கள்.
விழா பற்றி லிடியன் பேசும் போது,
"இந்த விழாவில் உலக அளவில் புகழ்பெற்ற டிரம்ஸ் கலைஞர் டேவ் வெக்கில் பங்கேற்கிறார்.
ஜினோ பேங்க்ஸ், ஸ்டீவன் சாமுவேல் தேவசி போன்றோருடன் சென்னையைச் சேர்ந்த சித்தார்த் நாகராஜ்,திறமையுள்ள ஆனால் பலரால் அறியப்படாத கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இவ்விழாவில் 32 கிராமிய விருது வாங்கிய சிக்காரியோவின் புகழ்பெற்ற வெற்றி பெற்ற இசை வடிவங்களை வாசிக்க இருக்கிறார்கள்.
மூன்று மணி நேரம் நடக்கும் இந்த அதிரடி இசை விழாவில் பல்வேறு பிரமுகர்கள் எதிர்பாராத வருகை தரவிருக்கிறார்கள்'' என்றார்.
லிடியன் நாதஸ்வரம் மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' படத்திற்குப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் .இது ஒரு 3டி படமாகும். பரோஸ் ஐந்து மொழிகளில் தயாராகிறது.
அதுமட்டுமல்லாமல் லிடியன் நாதஸ்வரம் ஓர் உலக சாதனை முயற்சியில் இறங்கி இருக்கிறார். அது பற்றி அவர் பேசும்போது,
" நானும் என் அக்கா அமிர்தவர்ஷினியும் சேர்ந்து 1330 திருக்குறளுக்கு இசையமைத்துப் பாடி உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.
ஏராளமான பிரமுகர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். மலையாள நடிகர் மோகன்லால் கூட ஒரு திருக்குறளுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்.இந்த முயற்சி விரைவில் நிறைவு பெற்று வெளிவர உள்ளது.
ஓமன், மலேசியா, சிங்கப்பூரிலிருந்தெல்லாம் பார்வையாளர்கள் வருகிறார்கள்.அனைவரும் வந்து ஆதரவு கொடுங்கள். இந்த விழாவை முன்னிட்டு திரட்டப்படும் நிதி பல்வேறு சமூக சேவைகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது ''என்றார். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் Book my showவில் கிடைக்கும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, சந்தானம் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் சிவா மனசுல சக்தி [SMS]
- தற்போது ஜெயம் ரவியை வைத்து பிரதர் படத்தை இயக்கி முடித்துள்ளார்
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, சந்தானம் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் சிவா மனசுல சக்தி [SMS]. ஹீரோயினாக நடித்த அனுயா, தாயாக நடித்த ஊர்வசி என அனைவரும் கதாபாத்திரத்தோடு கச்சிதமாக பொருந்திய இப்படம் எதார்த்தமான கதைக்களத்துடன் ஃபீல் குட் படமாக அமைத்திருந்தது.

ஜீவா - சந்தானம் காம்பினேஷனில் காமெடி டிராக்கையும் இயக்குனர் ராஜேஷ் வொர்க்அவுட் செய்திருப்பார். இதனைத்தொடர்ந்து 2010 இல் ஆர்யா- சந்தானம் காம்போவை வைத்து பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை அதே பாணியில் எடுத்து ஹிட் கொடுத்தார் ராஜேஷ்.
தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ் தற்போது ஜெயம் ரவியை வைத்து பிரதர் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ராஜேஷ் பிசியாக இயங்கி வருகிறார்.
இந்த சூழலில் சிவா 'மனசுல சக்தி 2' படத்தை எடுக்கும் திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் ராஜேஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். SMS 2 படத்திற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும், நடிகர் ஜீவாவிடமும் இது பற்றி பேசி இருப்பதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளது SMS ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.
- ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்பொழுது 'பிரதர்', 'ஜீனி' மற்றும் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் அறிவித்துள்ளது. விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது.
ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இது ஜெயம் ரவியுடன் அவர்கள் இணையும் 3-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
We are beyond proud & excited to announce that our next film is @actor_jayamravi's #JR34
— Screen Scene (@Screensceneoffl) October 5, 2024
Directed by @ganeshkbabu
from the director of "DADA"
A @Jharrisjayaraj Musical ?
????? ?????? ????....?@screensceneoffl @senthilkumarsmc @skiran_kumar @onlynikil pic.twitter.com/BieVIpimRF
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஹம்சவிர்தன் நாயகனாக நடிக்கும் புதிய படமான 'மகேஸ்வரா' முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.
- படமாக்கப்படும் போது சற்றும் எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டது.
'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட திரைப்படங்களில் முதன்மை வேடங்களில் நடித்த ஹம்சவிர்தன் நாயகனாக நடிக்கும் புதிய படமான 'மகேஸ்வரா' முதல் கட்ட படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.
ரெட் டிராகன் எண்டர்டெயின்மென்ட் பேனரில் ஹம்சவிர்தன் தயாரிக்கும் இப்படத்தை மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஹரா' படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்குகிறார்.
உயர்ரக சொகுசு பென்ஸ் கார் ஒன்றை நொறுக்கி தரைமட்டமாக்கும் பரபரப்பான சண்டைக் காட்சி அரியலூர் நெடுஞ்சாலையில் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன் தலைமையில் படமாக்கப்படும் போது சற்றும் எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டது. இதில் சிறு காயங்களுடன் ஹம்சவிர்தன் உள்ளிட்டோர் தப்பினர். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
ராம்கி, 'கே ஜி எஃப்' புகழ் கருடா ராம், பி எல் தேனப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முதல் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்ற நிலையில், முன்னணி நட்சத்திரங்கள் அடுத்த கட்ட படப்பிடிப்புகளில் கலந்து கொள்கின்றனர்.
சஸ்பென்ஸ் கலந்த அதிரடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாக உள்ள 'மகேஸ்வரா' படப்பிடிப்பு ரஷ்யா, பொலிவியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு மோகன் குமார் ஒளிப்பதிவு செய்ய ரஷாந்த் ஆர்வின் இசையமைக்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.
இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் 'மகேஸ்வரா' திரைப்படத்தில் ஹம்சவிர்தன் நடிக்கிறார். அதிக பொருட்செலவில், விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அந்தத் தகவல்கள் எங்களை மன ரீதியாக பாதிப்படைய செய்தன.
- ஆண்டவன் அருளால் அவருக்கு எதுவும் ஆகாது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
தற்போது உடல்நலம் தேறி வீட்டிற்கு வந்துவிட்ட நிலையில், ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலையில், விமான நிலையம் வந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் ரஜினிகாந்த் பற்றி கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
"மருத்துவமனையில் ஒரு சின்ன சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது என்று 40 நாட்களுக்கு முன்பே ரஜினி சார் எங்களிடம் கூறியிருந்தார். ஆனால், அவரைப் பற்றி வலைதளங்கள் மற்றும் யூடியூபில் வெளியான தகவல்கள் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தத் தகவல்கள் எங்களை மன ரீதியாக பாதிப்படைய செய்தன. இதைப் பற்றி என்ன சொல்வதென தெரியவில்லை."
"நிறைய பேர் தற்போது யூடியூப் மட்டுமே பார்க்கின்றனர். நாங்கள் படப்பிடிப்பில் இருந்ததால், எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. எல்லோரும் அருகில் இருந்து பார்த்ததை போல் பேசுகின்றனர். எல்லோரும் ரஜினி சாரை கொண்டாடுகிறோம், அப்படி பார்த்துக் கொள்கிறோம். அவர் சொல்வதை போல் ஆண்டவன் அருளால் அவருக்கு எதுவும் ஆகாது. அக்டோபர் 15 ஆம் தேதி முதல் ரஜினிகாந்த் சார் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்," என்று தெரிவித்தார்.
- சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.
- ஹே மின்னலே பாடல் ஜி.வி. பிரகாஷின் 700-வது பாடலாக இது உருவாகியுள்ளது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் நிறுவனமான ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.
புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' பாடல் இன்று வெளியாகியுள்ளது. இப்பாடல் ஜி.வி. பிரகாஷின் 700-வது பாடலாக இது உருவாகியுள்ளது.
இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் ஷ்வேதா மோகன் மற்றும் ஹரிச்சரண் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.






