Once More காதல் செய்ய வருகிறார்கள் அர்ஜூன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர்

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இப்படத்திற்கு ஒன்ஸ் மோர் என படக்குழு பெயரிட்டுள்ளது.
Once More காதல் செய்ய வருகிறார்கள் அர்ஜூன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர்
Published on

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 4 ' எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் கடந்த மாதம் தொடங்கியது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்திற்கு ஒன்ஸ் மோர் என படக்குழு பெயரிட்டு. அதற்கு டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. டைட்டில் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரது எகஸ் தளத்தில் வெளியிட்டார்.

படத்தின் இசையை மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இவர் இதற்கு முன் ஹருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப் படங்களை இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் இதற்கு முன் மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

டைட்டில் டீசர் மிகவும் அழகாக அமைந்துள்ளது . அர்ஜூன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இருவரும் வேறு வேறு விருப்பத்தை கொண்டவர்களாக உள்ளனர். அவர்களது நண்பர்களும் வெவ்வேறு விருப்பங்களுடன் உள்ளனர். இவர்களுக்கு நடுவே காதல் மலர்கிறது. என்பதே கதையின் அடித்தளமாகும்.

திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com