'டாடா' பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி

'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
'டாடா' பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்பொழுது 'பிரதர்', 'ஜீனி' மற்றும் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஜெயம் ரவியின் 34-வது படத்தை 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்குவதாக போஸ்டரை பகிர்ந்து பட நிறுவனம் அறிவித்துள்ளது. விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இது ஜெயம் ரவியுடன் அவர்கள் இணையும் 3-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com