என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஹே மின்னலே.. அமரன் படத்தின் முதல் பாடல் வெளியானது
    X

    ஹே மின்னலே.. அமரன் படத்தின் முதல் பாடல் வெளியானது

    • சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.
    • ஹே மின்னலே பாடல் ஜி.வி. பிரகாஷின் 700-வது பாடலாக இது உருவாகியுள்ளது.

    இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் நிறுவனமான ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

    ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார்.

    புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் இம்மாதம் 31-ந்தேதி வெளியாக உள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' பாடல் இன்று வெளியாகியுள்ளது. இப்பாடல் ஜி.வி. பிரகாஷின் 700-வது பாடலாக இது உருவாகியுள்ளது.

    இப்பாடலை கார்த்திக் நேதா வரிகளில் ஷ்வேதா மோகன் மற்றும் ஹரிச்சரண் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×