என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல்"

    • பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ளது ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்நெர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்
    • இயக்குகிறார்கள் என்ற பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ளது ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்நெர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம். இதுவரை தமிழ் சினிமாவில் 25 திரைப்படங்களை தயாரித்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு பிரபுதேவா நடித்த தேவி திரைப்படத்திஅ முதன் முதலில் தயாரித்தது.

    சமீபத்தில் ஜீவா நடித்த அகத்தியா மற்றும் மிர்ச்சி சிவா நடித்த சுமோ திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில் அடுத்து இரண்டு ஆண்டுகளில் 10 திரைப்படங்களை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அப்படத்தை யார் யார் இயக்குகிறார்கள் என்ற பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில் வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் அடுத்து திரைப்படம் இயக்கும் இயக்குநர்கள் பின்வருமாறு

    டாடா படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு

    கட்டா குஸ்தி படத்தை இயக்கிய செல்ல அய்யாவு

    போர் தொழில் புகழ் விக்னேஷ் ராஜா

    கனா புகழ் அருண்ராஜா காமராஜ்

    2018 என்ற மலையாள படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப்,

    96, மெய்யழகன் புகழ் பிரேம் குமார்

    மாரிசெல்வராஜ், வெற்றிமாறன், கவுதம் வாசுதேவ் மேனன், சுந்தர் சி ஆகியோர் திரைப்படங்களை இயக்கவுள்ளனர்.

    இன்னும் வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் தரமான திரைப்படங்கள் இந்த நிறுவனத்தின் கீழ் உருவாகி வெளியாக இருக்கிறது.

    • தமிழ் சினிமாத்துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் நிறுவனமாகும்.
    • இவரது மகளான ப்ரீத்தி-க்கு நேற்று திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

    தமிழ் சினிமாத்துறையில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் நிறுவனமாகும்.இதன் உரிமையாளர் ஐசரி கணேஷ் ஆவார். இவரது மகளான ப்ரீத்தி-க்கு நேற்று திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ் சினிமாத்துறை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

    மேலும் நேற்று ஐசரி கணேஷ் அனாதை இல்லம் மற்றும் முதியோர் இல்லங்களில் இருந்து 1500 மேற்பட்ட ஆதரவற்ற மக்கள் இவரது மகள் திருமணத்தில் கலந்துக் கொண்டனர். அவர்கள் மணமக்களை அசிர்வதித்து மனதார உணவை உண்டு மகிழ்ந்தனர். பல மாற்று திறனாளிகள் கலை நிகழ்ச்சிகளை செய்தனர். இவர்களுடன் ஐசரி கணேஷும் இணைந்து ஆடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் இவர் செய்த இந்த நற்காரியத்தை இணையத்தில் பாராடி வருகின்றனர்.

    • குட்டிப் பிசாசே பாடல் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது.
    • இந்த கதையை ஒப்புக்கொள்வார் என்று நினைக்கவே இல்லை.

    ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் அடுத்த வாரம் (மே 24) வெளியாக இருக்கும் படம் பிடி சார். வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை காத்திக் இயக்கியுள்ளார். இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

    அதில் கலந்து கொண்ட நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசும் போது, "நான்கு ஆண்டு இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டும் களமிறங்கிய அரண்மனை 4 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் குட்டிப் பிசாசே பாடலும் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது."

    "இது உங்களை முழுக்க திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். இப்படி ஒரு கதையை எடுத்த கார்த்திக்கிற்கு என் நன்றி. தயாரிப்பாளர் இந்த கதையை ஒப்புக்கொள்வார் என்று முதலில் நினைக்கவே இல்லை. ஆனால் இந்தக்கருத்தை நாம் தான் சொல்ல வேண்டுமெனச் சொன்னார்."

    "பிடி சார் மிக நிறைவான படமாக இருந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். என் மேல் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தைத் தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. குடும்பத்தோடு வந்து பாருங்கள் கண்டிப்பாகக் கொண்டாடுவீர்கள் அனைவருக்கும் நன்றி.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் வேல்ஸ் பிலிம் தயாரிப்பு நிறுவனம் முக்கியமானது.
    • வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனலின் அடுத்து தயாரிக்கப்போகும் படத்தை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் வேல்ஸ் பிலிம் தயாரிப்பு நிறுவனம் முக்கியமானது. இவரது தயாரித்த தேவி, தேவி 2, கோமாளி, LKG, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

    தற்பொழுது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2, சுமோ , ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி போன்ற திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

    வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனலின் அடுத்து தயாரிக்கப்போகும் படத்தை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இப்படத்தில் ஜீவா மற்றும் அர்ஜூன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×