பிடி சார் படம் முழுமையாக திருப்திப்படுத்தும் - ஹிப்ஹாப் தமிழா ஆதி

குட்டிப் பிசாசே பாடல் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது.இந்த கதையை ஒப்புக்கொள்வார் என்று நினைக்கவே இல்லை.
பிடி சார் படம் முழுமையாக திருப்திப்படுத்தும் - ஹிப்ஹாப் தமிழா ஆதி
Published on

ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் அடுத்த வாரம் (மே 24) வெளியாக இருக்கும் படம் பிடி சார். வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை காத்திக் இயக்கியுள்ளார். இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசும் போது, "நான்கு ஆண்டு இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராக மட்டும் களமிறங்கிய அரண்மனை 4 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் குட்டிப் பிசாசே பாடலும் பெரிய வரவேற்பைக் குவித்து வருகிறது."

"இது உங்களை முழுக்க திருப்திப்படுத்தும் படமாக இருக்கும். இப்படி ஒரு கதையை எடுத்த கார்த்திக்கிற்கு என் நன்றி. தயாரிப்பாளர் இந்த கதையை ஒப்புக்கொள்வார் என்று முதலில் நினைக்கவே இல்லை. ஆனால் இந்தக்கருத்தை நாம் தான் சொல்ல வேண்டுமெனச் சொன்னார்."

"பிடி சார் மிக நிறைவான படமாக இருந்தது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். என் மேல் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தைத் தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. குடும்பத்தோடு வந்து பாருங்கள் கண்டிப்பாகக் கொண்டாடுவீர்கள் அனைவருக்கும் நன்றி.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com