பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் இணையும் நெல்சன் திலிப்குமார்

'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார்.ஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் இணையும் நெல்சன் திலிப்குமார்
Published on

பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் 'கோலமாவு கோகிலா' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 'டாக்டர்', விஜய்யின் 'பீஸ்ட்' , ரஜினியின் 'ஜெயிலர்' போன்ற படங்களை இயக்கினார் . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் உலகளவில் ரூ.650 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப்படைத்தது.

அதனை தொடர்ந்து 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். பின்னர் ஜூனியர் என்டிஆரை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 'தேவரா' படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரின் இந்தப் புதிய படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தேவரா படத்தின் புரமோசனுக்காக சென்னை வந்திருந்த ஜூனியர் என்டிஆர், வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

அடுத்ததாக இவர், இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் விலகியுள்ளார். 'ஜெயிலர் 2' படம் நிறைவடைந்த பின்னரே, தெலுங்கு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com