என்னது அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா? - சூர்யா 44 படப்பிடிப்பு பணி நிறைவு

சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
என்னது அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா? - சூர்யா 44 படப்பிடிப்பு பணி நிறைவு
Published on

சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படத்தின் பணிகள் ஆரம்பித்து சில மாதங்களிலயே படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தி சுப்பராஜ் பிளானிங் மற்றும் படப்பிடிப்பு வேகம் அபாரமாக இருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com