வாவ் பேங்கை கொள்ளை அடிக்க வருகின்றனர் சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்

வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர்.
வாவ் பேங்கை கொள்ளை அடிக்க வருகின்றனர் சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ்
Published on

வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர். அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் நடிகர்களின் கதாப்பாத்திரத்தை குறித்து படக்குழு போஸ்டர் ஒவ்வொன்றாக அப்டேட் கொடுத்தனர். படத்தின் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரம் நிறைந்த ஒரு கொள்ளை கூட்டத்துடன் ஒரு வங்கியை கொள்ள திட்டமிடுகின்றனர். இது தொடர்பான காட்சிகள் டிரைலரில் அமைந்துள்ளது.

திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடிப் படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com