என் மலர்
சினிமா செய்திகள்
ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ராவை விவாகரத்து செய்வதாக இயக்குநர் அனுராக் பாசு, ஷில்பாவின் தாயாருக்கு குறுந்தகவல் அனுப்பியது பாலிவுட்டில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. #ShilpaShetty #RajKundra
தமிழில் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. குஷி படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். 2007-ல் வெளிநாட்டில் பிக்பிரதர் டி.வி. நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களால் இனவெறிக்கு ஆளாகி பரபரப்பானார். ஷில்பா ஷெட்டிக்கும், தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் 2009-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.
இந்தநிலையில் குடும்ப தகராறில் ராஜ்குந்தராவை ஷில்பா ஷெட்டி விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் பரவி இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னணி நடிகர், நடிகைகள் ஒருவரையொருவர் தொடர்புகொண்டு இது உண்மையா? என்று விசாரித்த வண்ணம் இருந்தார்கள். ஷில்பா ஷெட்டியையும் தொடர்புகொண்டு பேசினர்.

அதன்பிறகு இந்தி டைரக்டர் அனுராக் பாசு இந்த வதந்தியை பரப்பியது தெரியவந்தது. டி.வி. ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஷில்பா ஷெட்டியும், அனுராக் பாசுவும் நடுவர்களாக உள்ளனர். அந்த நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டிக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்து அதில் “கணவருடன் சண்டை போட்டு விட்டேன். அவரை விவாகரத்து செய்கிறேன்” என்ற குறிப்பை பதிவு செய்து ஷில்பா ஷெட்டியின் அம்மாவுக்கு அனுராக் பாசு அனுப்பியுள்ளார். அதை பார்த்து ஷில்பாவின் தாய் பதறிப்போய் போன் செய்து பேசியதும் அதனால் இந்த விவாகரத்து வதந்தி பரவியதும் தெரியவந்தது. #ShilpaShetty #RajKundra #AnuragBasu
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு வடசென்னையில் நடந்து வரும் நிலையில், விஜய், நயன்தாராவை காண ரசிகர்கள் இரவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #Thalapathy63 #Vijay #Nayanthara
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய் ஜோடியாக நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். தினமும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ரசிகர்கள் பெருமளவில் கூடுகிறார்கள்.
காட்டாங்கொளத்தூரில் படப்பிடிப்பை முடித்து புறப்படும்போது காரில் தன்னை பின்தொடர்ந்த ரசிகர்களுக்கு கார் கண்ணாடியை இறக்கி பத்திரமாக திரும்பி செல்லுங்கள் என்று விஜய் அறிவுரை கூறிய வீடியோ வைரலானது. பரங்கிமலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் படப்பிடிப்பு நடந்தபோது விஜய்யை பார்க்க மாணவ-மாணவிகள், ரசிகர்கள் ஏராளமானோர் கூடினார்கள்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவினால் தடுப்பு வேலி சரிந்து ரசிகர்கள் கீழே விழப்போனார்கள். விஜய் மற்றும் அவரது உதவியாளர்கள் அந்த வேலியை தாங்கிப்பிடித்து ரசிகர்கள் கீழே விழாதபடி தடுத்தனர்.
தற்போது இதன் படப்பிடிப்பு காசிமேடு கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு நள்ளிரவில் நடந்தபோதிலும் அங்கு விஜய் மற்றும் நயன்தாராவை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டார்கள். அங்கு காத்து நின்ற ரசிகர்கள் முன்னால் வந்து விஜய் கையசைத்தார். அதைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் தலைவா என்று கோஷம் போட்டனர். இந்த வீடியோவும் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #Kathir #Atlee
வஸந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் அமெரிக்காவின் இரு சர்வதேச திரைப்பட விழாவுக்காக தேர்வாகியுள்ளது. #SivaranjiniyumInnumSilaPengallum #Vasanth
இயக்குனர் வஸந்த் இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்”. சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று பாராட்டுக்களை பெற்று வரும் இந்த படம் அடுத்ததாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெறும் சர்வதேச திபுரான் திரைப்பட விழா மற்றும் நியூயார்க் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், மயக்கம் என்ன சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து, மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு திரைக்கதையை உருவாக்கி வஸந்த் இந்த திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார். என்.கே.ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
மும்பை திரைப்பட விழா, கேரள சர்வதேச திரைப்பட விழா, பூனே சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த படத்தில் பிரத்யேகமாக பின்னணி இசை இல்லாதது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டுக்களை பெற்றது. மேலும் பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. #SivaranjiniyumInnumSilaPengallum #Vasanth
சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் ராதிகா, 34 வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் மோகன் லால் படத்தில் நடிக்கிறார். #IttimaniMadeinChina #Radhika
1980-களில் தென்னிந்திய மொழி சினிமாக்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் ராதிகா. இவர் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் ராதிகா நடிப்பில் 1993-ம் ஆண்டு ‘அர்த்தனா’ என்ற படம் வெளியானது. அதன் பிறகு 25 ஆண்டுகளாக அவர் மலையாளத்தில் நடிக்கவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு திலீப் நடிப்பில் வெளியான ‘ராம்லீலா’ படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு மலையாளத்தில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

அவரது நடிப்பில் ‘தி கேம்பினோஸ்’ படம் கடந்த மார்ச்சில் ரிலீசாகி வரவேற்பை பெற்றது. இதில், இந்த படத்தில் பெண் தாதா கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருக்கிறாராம். பெண் தாதா மற்றும் அவரது நான்கு பிள்ளைகளைப் பற்றிய படமாக இது உருவாகியிருக்கிறது.
அடுத்ததாக மோகன்லால் நடிக்கும் ‘இட்டிமானி மேட் இன் சைனா’ படத்திலும் ராதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் 34 வருடங்களுக்குப் பிறகு மோகன்லால் படத்தில் ராதிகா நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஹனிரோஸ் கதாநாயகியாக நடிக்கிறார். #IttimaniMadeinChina #Radhika
மணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் கதையில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Karthi
மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. வசூல் ரீதியாக மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தன்னுடைய நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ கதையைக் கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம்.
கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என மிகப்பெரிய நடிகர்களை வைத்து படத்தைத் தொடங்க முயற்சித்தார். ஆனால், பட்ஜெட் ஒத்து வராததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது விக்ரம், சிம்பு மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பல்வேறு படங்களில் நடித்து வருவதால் படக்குழுவினர் கேட்கும் தேதிகளை விஜய் சேதுபதியால் கொடுக்க முடியவில்லை. எனவே, அவருக்குப் பதிலாக கார்த்தி நடிக்கிறார். புகழ் பெற்ற கதாபாத்திரமான வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. #PonniyinSelvan #Karthi #Maniratnam #Vanthiyathevan
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த 96 படத்திற்கு தெலுங்கில் விருது கிடைத்துள்ளது. #96TheMovie #VijaySethupathi #Trisha
விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 96 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பல விருதுகளையும் வென்று வணிக ரீதியான வெற்றியும் பெற்றது.
சமந்தா, சர்வானந்த் நடிக்க ‘96’ தெலுங்கு ரீமேக் வேலைகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகரும், இயக்குநருமான மாருதி ராவ்வின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாகக் கொடுக்கப்படும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை 96 படத்திற்காக இயக்குநர் பிரேம் குமார் பெறவுள்ளார்.

1992-ல் தனது முதல் படமான ‘பிரமேபுஸ்தகம்‘ என்னும் படத்தை இயக்கும்போது ஸ்ரீனிவாசன் காலமானார். அதைத் தொடர்ந்து அப்படத்தை மாருதி ராவ் இயக்கி முடித்தார். ஸ்ரீநிவாஸ் நினைவாக நடத்தப்படும் ‘கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது’ விழா கடந்த 21 வருடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு இவ்விருதை வெல்லும் முதல் தமிழ் படம் 96 என்பது குறிப்பிடத்தக்கது. #96TheMovie #VijaySethupathi #Trisha #PremKumar
விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலர் பாணியில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #NenjamunduNermaiyunduOduRaja #NNOR
கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்த படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்த படத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடிக்க, ஷிரின் கஞ்ச்வாலா நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் யூடியூப் பிரபலங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். ஷபீர் இசையமைக்க, யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இந்த படத்தின் தலைப்பை படக்குழு இன்று வெளியிட்டது. படத்தின் எம்.ஜி.ஆரின் பிரபல பாடலான `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை வீடியோ வடிவில் படக்குழு வெளியிட்டது. அதனை விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலர் பாணியில் வடிவமைத்து படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. #NenjamunduNermaiyunduOduRaja #NNOR #SKProductions #RioRaj #ShirinKanchwala
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா தலைப்பு குறித்த வீடியோ:
ஷஷாங்க் இயக்கத்தில் சுதீப் - பாவனா, பருல் யாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `இருட்டு அறையில் முரட்டு கைதி' படத்தின் விமர்சனம். #IruttuAraiyilMurattuKaidhi #KicchaSudeep #Bhavana #ParulYadav
போலீஸ் அதிகாரியான ஆசிஷ் வித்யார்த்தியையும், மருத்துவரான நாசரையும் கொலை செய்துவிட்டு, ரவிசங்கரை கொலை செய்வதற்காக போகும் போது, கிச்சா சுதீப்பை போலீசார் கைது செய்கிறார்கள். இந்த கொலை சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்கிறார் ஜெகபதி பாபு.
கொலை குறித்து ஜெயகதி பாபுவின் விசாரணையில் சுதீப் கூறும் போது, தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், தானும் தனது குடும்ப நண்பரும், உதவியாளருமான பருல் யாதவ்வும் காதலித்ததாகவும் இருவருக்கும் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், ஆசிஷ் வித்யார்த்தியும், நாசரும் தனது வாழ்க்கையில் வந்து, தனக்கு கொடுத்த தொல்லைகள் குறித்தும் விவரிக்கிறார்.

கடைசியில், ஆசிஷ் வித்யார்த்தி மற்றும் நாசரை சுதீப் கொலை செய்ததற்கான காரணம் என்ன? அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்ட முன்கதை என்ன? என்பதே சுதீப் எனும் கைதியின் மீதிக்கதை.
கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் கிச்சா சுதீப் தனது வழக்கமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். குறைவான நேரங்கள் மட்டுமே வந்தாலும் பாவனா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் கதையோடு ஒன்றி தனது கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறார் பருல் யாதவ். ஆசிஷ் வித்யார்த்தி, நாசர், ஜெகபதி பாபு என அனைவருமே அனுபவ நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.

கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சுதீப் நடித்த கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்து வெளியிட்டுள்ளார்கள். கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீமேக் செய்துள்ளார்கள். தற்போதைய காலத்திற்கு ஏற்ப பல்வேறு த்ரில்லர் படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்திருக்கும் வேளையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு வந்த த்ரில் கதையை தற்போது பார்க்கும் போது ஒருவித நெருடலை கொடுக்கிறது. எனினும் வித்தியாசமான கதை என்பதால் பார்ப்பதில் தவறில்லை.

ஷஷாங்க் இயக்கம், வி.ஹரிகிருஷ்ணாவின் இசை, ஷேகர் சந்துருவின் ஒளிப்பதிவு, ரவி வர்மாவின் படத்தொகுப்பு என படக்குழுவினரின் வேலைகள் கச்சிதம்.
மொத்தத்தில் `இருட்டு அறையில் முரட்டு கைதி' பார்க்கலாம். #IruttuAraiyilMurattuKaidhi #KicchaSudeep #Bhavana #ParulYadav
சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சாஹோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் விஜய், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். #Saaho #Prabhas #ArunVijay
பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் அடுத்ததாக ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அருண் விஜய் அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Its a wrap for me!! #Saaho
— ArunVijay (@arunvijayno1) March 18, 2019
Happy to have been a part of this incredibly hard working team. Thanks to #Prabhas@sujeethsign@UV_Creations & the rest of da cast n crew for makin this journey a memorable one! Wait for an exhilarating experience in theatres from Aug 15!💪 C u all..😘 pic.twitter.com/cmYjri3Zgc
யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அதிரடி படமாக உருவாகிறது. இந்த படத்திற்கு சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்கின்றனர். மதி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Saaho #Prabhas #ArunVijay
விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் வாட்ச்மேன் படக்குழு சமீபத்தில் வெளியிட்ட போஸ்டரில் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை கிண்டல் செய்துள்ளது. #WatchMan #GVPrakashKumar
பிரதமர் மோடி தனது டுவிட்டரில் காவலாளி நரேந்திர மோடி என பெயரை மாற்றினார். அவர் நேற்று வெளியிட்ட பதிவில் இருந்த நானும் காவலாளிதான் என்ற வீடியோ டுவிட்டரில் நம்பர் ஒன் டிரண்டிங்காக இருந்தது.
இதை தொடர்ந்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா, ஹர்ச வர்த்தன், தர்மேந்திர பிரதான் ஆகியோர் தங்கள் பெயர்களுக்கு முன்னால் சவுகிதார்(காவலாளி) என்ற பெயரை சேர்த்தனர்.

இதற்கு நாடு முழுக்க வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பின. இந்நிலையில் பா.ஜனதா தலைவர்களின் இந்த செயலை கிண்டல் செய்யும் வகையில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஒரு படத்தின் போஸ்டரில் நாய் ‘நானும் காவலாளிதான்’ என்று சொல்வது போல் வெளியிடப்பட்டுள்ளது.
வாட்ச்மேன் என்ற அந்த படத்தில் ஜி.வி.பிரகாசுடன், அந்த நாயும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறது. படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த போஸ்டருக்கு பா.ஜனதா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். #WatchMan #GVPrakashKumar #Chowkidar
சமந்தாவின் செயல்களைக் கண்டு அவரது கணவர் நாக சைதன்யா கோபப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Samantha #NagaChaitanya
நட்சத்திர காதல் தம்பதிகள் சமந்தா, நாக சைதன்யா இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். ஆனாலும் இருவருக்குள்ளும் ஒரு வித்தியாசம் காணப்படுகிறது. சமூக வலைதள பக்கங்களில் அதிக ஆர்வம் காட்டுபவர் சமந்தா.
நாக சைதன்யா அப்படி இல்லை. முக்கியமான நேரங்களில் மட்டுமே சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்கிறார். சமந்தாவின் சமூக வலைதள ஆர்வத்தை கண்டு சில சமயம் நாகசைதன்யா கோபப்படுகிறாராம்.

இதுபற்றி சமந்தா கூறும்போது, ‘திரையில் தான் நம்மை ரசிகர்கள் பார்க்கிறார்கள். நம் சொந்த வாழ்க்கையையும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் அவர்கள் பார்க்க வெளியிட வேண்டுமா என்று நாக சைதன்யா கேட்கிறார். அதனால் அவர் என் அருகில் இருக்கும்போது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் எதையும் தொடமாட்டேன்’ என்று கூறி இருக்கிறார்.
நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தமன்னாவை திருமணம் செய்ய ஆசை என்று கூறியிருக்கிறார். #Tamannaah #Shrutihaasan
தமன்னாவும் ஸ்ருதிஹாசனும் நெருங்கிய தோழிகள் என்பது எல்லாருக்கும் தெரியும். இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசும் புகைப்படங்கள் இணையதளங்களில் அதிகமாக வந்திருக்கும். தனது தோழி தமன்னா பற்றி பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் குறிப்பிடும்போது, ‘
தமன்னாவின் நட்பை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள். அவர் ஒரு நல்ல பெண். அவர் மட்டும் ஆணாக இருந்திருந்தால் அவருடன் டேட்டிங் சென்று இருப்பேன், ஏன் அவரை திருமணம் கூட செய்திருப்பேன்’ என்றும் கூறினார்.

நடிகை ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சல் என்பவரை காதலித்து வருகிறார். விரைவில் இவர்கள் திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Tamannaah #Shrutihaasan






