என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா, அவருடன் நடித்தது பெரும் மகிழ்ச்சி என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். #Suriya #Kaappaan
    சூர்யா நடிப்பில் தற்போது இரு படங்கள் தயாராகி வருகின்றன. செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே திரைப்படம் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

    சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் காப்பான் படத்தில் சாயிஷா கதாநாயகியாக நடிக்க மோகன்லால், ஆர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்த படத்துக்காக மோகன்லாலின் முகநூல் பக்கத்தில் இருந்து லைவ் வீடியோ வெளியிடப்பட்டது. ஐதராபாத்திலிருந்து ஒளிபரப்பான இந்த நேர்காணலில் மோகன்லால் பல வி‌ஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது சூர்யாவும் வீடியோ கான்பரன்சிங்கில் இணைந்தார்.



    காப்பான் படம் குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். ’இந்தப் படத்தில் பிரதமராக மோகன்லால் சார் நடித்திருக்கிறார். அவரைப் பாதுகாக்கும் கமாண்டோ வீரராக நான் நடித்திருக்கிறேன். மோகன்லால் சாரோடு நடித்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சி. இந்தப் படம் விடுமுறை நாளை குறிவைத்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடத்திட்டமிட்டிருக்கிறோம்” என்று சூர்யா கூறினார்.
    அக்னி தேவி படம் மூலம் ரீஎண்ட்ரி ஆகியிருக்கும் மதுபாலா, தற்போது தமிழ்நாட்டு அரசியல் பற்றி அப்படத்தில் பேசியிருக்கிறார். #AgniDevi #AgniDeviTrailer2
    ‘சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அக்னி தேவி’. 

    பாபி சிம்ஹா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், வில்லியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது. இதில் மதுபாலா பேசும் அரசியல் வசனங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.



    இப்படம் வருகிற மார்ச் 22-ந் தேதி வெளியாக இருக்கிறது. ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜனா ஒளிப்பதிவு செய்துள்ளார். சீன்டோ ஸ்டூடியோ சார்பில் ஜே.பி.ஆர் இந்த படத்தை தயாரித்துள்ளார். #AgniDevi #BobbySimha #RamyaNambeesan #Madhubala
    முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கன்னிராசி’ படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். #Kannirasi
    விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னிராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், ஷகிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

    விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்றிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



    இதையடுத்து விரைவில் படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Kannirasi
    பரதேசி, கபாலி படத்தில் நடித்த தன்ஷிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘உச்சகட்டம்’ திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. #Dhansika #Uchakattam
    பரதேசி, கபாலி படங்களின் மூலம் நடிக்க தெரிந்த நடிகை என்று பெயர் எடுத்தவர் தன்ஷிகா. அவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி இருக்கும் ‘உச்சகட்டம்’ படம் வரும் 22-ந்தேதி வெளியாக இருக்கிறது.

    இந்தப் படத்தை கன்னட இயக்குனர் சுதீல் குமார் தேசாய் இயக்கி உள்ளார். இவர் திரில்லர் படங்கள் எடுப்பதில் புகழ் பெற்றவர். இந்தப் படத்தில் தன்ஷிகாவுடன் இணைந்து அனூப் சிங், கபீர் சிங், ஷ்ரத்தா தாஸ், தான்யா ஹோப், ஆடுகளம் கிஷோர், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

    இப்படத்தை டி கிரியஷேன்ஸ் சார்பில் ஆர்.தேவராஜ் தயாரித்துள்ளார். அனூப் சிங் சிங்கம் 3 படத்திலும் கபீர் சிங் வேதாளம் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்கள். தான்யா ஹோப் சமீபத்தில் வெளியான தடம் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.



    திரில்லர் படமாக உருவாகியுள்ள உச்சகட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஒரு பெண் கால்களில் ரத்த காயங்களுடன் நடந்து வரும் காட்சியை பார்க்கும் சாய் தன்ஷிகா பயத்தில் மிரண்டு போவது போல் வெளியாகி இருந்தது. அடுத்து வெளியான டிரெய்லரில் சர்ச்சையான காட்சிகள் சில இடம்பெற்று இருந்தன. எனவே படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    தமிழில் ரஜினி, விஜய்யுடன் நடித்து பிரபலமான ஸ்ரேயா, தற்போது நடுரோட்டில் நடனம் ஆடும் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார். #Shriya
    நடிகைகள் தங்களுக்கு பிடித்த வி‌ஷயங்களை செய்து அதை வீடியோ படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். இதில் தற்போது நடுரோடு வரைக்கும் கூட வர தொடங்கிவிட்டார்கள். ரஜினி, விஜய் என்று பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா தற்போது நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார்.

    இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. தமிழில் புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் இவர் காத்திருக்கிறார். இந்தியில் தட்கா என்ற ஒரு படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நிலையில் வெளிநாடுகளுக்கு பறந்துவிடுகிறார் ஸ்ரேயா. 



    சமீபத்தில் வெளிநாடு சென்ற ஸ்ரேயா அங்குள்ள இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தார். பின்னர் அப்பகுதியில் நடந்த திருவிழாவுக்கு சென்றவர் அங்கு நடந்த காட்சிகளை ரசித்தார். உற்சாக மிகுதியில் நடுரோட்டிலேயே நடனம் ஆடத் தொடங்கினார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. #Thalapathy63 #Vijay #ThalapathyVijay
    விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

    தற்போது இதன் படப்பிடிப்பு காசிமேடு கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு நள்ளிரவில் நடந்தபோதிலும் அங்கு விஜய் மற்றும் நயன்தாராவை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு வருகிறார்கள். அங்கு காத்து நின்ற ரசிகர்கள் முன்னால் வந்து விஜய் கையசைத்தார். இதன் வீடியோ வைரலாகி வருகிறது.



    இந்நிலையில், தற்போது இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை சன் டிவி நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதிபடுத்தி உள்ளது.
    சர்ஜூன். கே.எம். இயக்கத்தில் நயன்தாரா - கலையரசன், யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் `ஐரா' படத்தின் முன்னோட்டம். #Airaa #Nayanthara #Kalaiyarasan #YogiBabu
    கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `ஐரா'.

    நயன்தாரா முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் கலையரசன், யோகிபாபு, ஜே.பீ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சுதர்சன் சீனிவாசன், இசை - சுந்தரமூர்த்தி கே.எஸ்., படத்தொகுப்பு - கார்த்திக் ஜோகேஷ், கலை - சிவசங்கர், ஸ்டண்ட்ஸ் - மிராக்கிள் மைக்கேல் ராஜ், ஆடை வடிவமைப்பாளர் - பிரீத்தி நெடுமாறன், நடனம் - விஜி சதீஷ், பாடல்கள் - தாமரை, மதன் கார்கி, கு.கார்த்திக், ஆடியோகிராஃபி - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, தயாரிப்பாளர் - கோட்டபாடி ஜே.ராஜேஷ், கதை, திரைக்கதை - பிரியங்கா ரவீந்திரன், இயக்கம் - சர்ஜூன். கே.எம்.



    படம் பற்றி இயக்குநர் சர்ஜூன் பேசும் போது,

    ஐரா (யானை) ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். நயன்தாராவின் 63-வது திரைப்படமாகும். படத்தை இயக்கும்போது அவரது நடிப்பை ஒரு ரசிகராக பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக 'பவானியின்' கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

    ஐரா மார்ச் 28-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Airaa #Nayanthara #Kalaiyarasan #YogiBabu #SarjunKM #AiraaOnMarch28 🦋

    ஐரா டிரைலர்:

    பிரபல பாலிவுட் இயக்குநர் சஜித்கான் மீது இந்தி நடிகைகள் ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன்னிடம் அவர் தவறாக நடந்து கொள்ளவில்லை என்று கூறினார். #Tamannaah #SajidKhan
    இந்தி நடிகைகள் ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். நடிகர் நானா படேகர் உள்ளிட்ட பலர் இதில் சிக்கினர். பிரபல இந்தி டைரக்டர் சஜித்கான் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சலோனி சோப்ராவும், ஒரு பெண் பத்திரிகையாளரும் புகார் கூறினார்கள்.

    அவர் படத்தில் நடித்த வித்யா பாலன், பிபாஷா பாசு ஆகியோரும் அவர் மீது பாலியல் புகார் கூறினார்கள். இதைத்தொடர்ந்து அவர் இயக்கிய ஹவுஸ்புல்-4 படத்தில் நடிக்க மறுத்து அக்‌ஷய்குமார் விலகினார். இதனால் அந்த படத்தில் இருந்து சஜித்கானை நீக்கிவிட்டனர். சஜித்கான் இயக்கிய ஹிம்மத்வாலா, ஹம்ஷகல்ஸ் ஆகிய இரண்டு இந்தி படங்களில் தமன்னா நடித்து இருந்தார்.



    படப்பிடிப்பின்போது சஜித்கான் தவறாக நடந்துகொண்டாரா? என்று தமன்னாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    “சஜித்கான் இயக்கத்தில் நான் நடித்த இந்தி படங்கள் சரியாக போகவில்லை. அந்த படங்களின் படப்பிடிப்புகள் நடந்தபோது சஜித்கான் எனக்கு எந்த தொந்தரவையும் தரவில்லை. என்னிடம் அவர் தவறாகவும் நடந்து கொள்ளவில்லை. சஜித்கானுடன் பணியாற்றியபோது சவுகரியமாகவே உணர்ந்தேன். மற்ற நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் கூறியிருப்பது பற்றி எனக்கு தெரியாது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவங்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி எந்த சங்கடமும் ஏற்படவில்லை”

    இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Tamannaah #SajidKhan

    மணிரத்னமின் உதவி இயக்குநர் தனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #VaanamKottatum #VikramPrabhu #AishwaryaRajesh
    மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தனசேகரன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.

    இதில் சரத்குமாரும், அவருடைய மனைவி ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தில் இருவரும் கணவன்-மனைவியாகவே நடிக்க இருக்கிறார்கள். விக்ரம் பிரபு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.



    படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கி சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. #VaanamKottatum #VikramPrabhu #AishwaryaRajesh

    பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அக்னி தேவ்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #AgniDevi
    ‘சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அக்னி தேவி’. 

    பாபி சிம்ஹா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், வில்லியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    அதன்படி படம் வருகிற மார்ச் 22-ந் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் இரண்டாவது டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜனா ஒளிப்பதிவு செய்துள்ளார். சீன்டோ ஸ்டூடியோ சார்பில் ஜே.பி.ஆர் இந்த படத்தை தயாரித்துள்ளார். #AgniDevi #BobbySimha #RemyaNambeesan

    ஏ.பி.ஜி.ஏழுமலை இயக்கத்தில் கிஷோர் ரவிச்சந்திரன் - நித்யா ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் `அகவன்' படத்தின் விமர்சனம். #Agavan #AgavanReview #KishoreRavichandran #NithyaShetty
    தமிழகத்தின் புராதன கோவில்களில் உள்ள பொக்கிஷங்களை மர்ம கும்பல் திருடப்போவதாக வரும் தகவலை தொடர்ந்து போலீஸ் உயரதிகாரியான சரண் ராஜ் தமிழகத்தில் உள்ள சில முக்கிய கோவில்களுக்கு ரகசிய போலீஸ் பாதுகாப்பு போட முடிவு செய்கிறார். அதன்படி போலீஸ்காரரான நாயகன் கிஷோர் ரவிச்சந்திரன் அங்குள்ள சிவன் கோவிலுக்கு காவலாளியாக வருகிறார். 

    தம்பி ராமையாவுடன் இணைந்து கோவிலை காவல் காக்கும் போது, அங்கு சில மர்மமான சம்பவங்கள் நடக்கின்றன. இதுகுறித்து கிஷோர் ரகசியமாக கண்காணித்து வருகிறார். அங்குள்ளவர்கள் கிஷோரின் பின்புலம் தெரியாமல் அவருடன் சகஜமாக பழகி வருகிறார்கள்.



    அதே நேரத்தில் அந்த கோவிலுக்கு அருகே பூ கடை வைத்திருக்கும் அக்கா, தங்கையான நாயகிகள் சிராஸ்ரீ அஞ்சன், நித்யா ஷெட்டி இருவருமே கிஷோரை காதலிக்கிறார்கள். 

    கடைசியில், கோவிலில் நடக்கும் மர்ம சம்பவங்களுக்கான காரணம் என்ன? கோவில் பொக்கிஷங்களை கொள்ளையடிக்க முயற்சித்தவர்கள் யார்? அக்கா, தங்கை இருவரில் நாயகனுடன் இணைந்தது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    ரகசிய போலீஸ் அதிகாரியாக வரும் கிஷோர் ரவிச்சந்திரன் எல்லா காட்சியிலுமே ஒரே மாதிரியான பாவத்தையே வெளிப்படுத்தியிருக்கிறார். இன்னும் வளர வேண்டும். தங்கையாக நடித்திருக்கும் நித்யா ஷெட்டி காதல் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். குறும்புத்தனமான கதாபாத்திரத்தின் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். திருவிழா பாடலில் நடனமாடி கவர்கிறார். அக்காவாக வரும் சிராஸ்ரீ அஞ்சன் கொடுத்த வேலையை செவ்வென செய்துவிட்டு சென்றிருக்கிறார். தம்பி ராமையா தனது வழக்கமான பேச்சால் குறிப்பிட்ட இடங்களில் நகையை உண்டுபண்ணுகிறார்.

    சரண் ராஜ், சினி ஜெயந்த், ஹோலோ கந்தசாமி என மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே அவர்களது வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.



    நமது முன்னோர் கட்டிய புராதன கோவில்கள், அதன் பெருமைகள், அதனுள் இருக்கும் பொக்கிஷங்கள் என கோவில்களை மையப்படுத்தியே படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஏ.பி.ஜி.ஏழுமலை. படத்தின் திரைக்கதையின் நீளமும், அதன் போக்கும் ஒருவித சலிப்பை ஏற்படுத்தினாலும், கோவில்களின் பெருமையை கூறியிருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது.

    சி.சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பாலா பழனியப்பனின் ஒளிப்பதிவு பக்கபலம்.

    மொத்தத்தில் `அகவன்' உள்ளிருப்பவன். #Agavan #AgavanReview #KishoreRavichandran #NithyaShetty

    தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்ற ஷாலினி பாண்டே, அர்ஜுன் ரெட்டி போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் காதலிப்பேன் என்று கூறினார். #ShaliniPandey
    தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான ஷாலினி பாண்டே, தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 100 சதவீதம் காதல், ஜீவா ஜோடியாக கொரில்லா, விஜய் ஆண்டனியுடன் அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    சினிமா பிரவேசம் குறித்து அவர் கூறியதாவது:-

    “படிக்கும்போதே சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்தது. அப்பாவுக்கு நான் நடிகையாவதில் விருப்பம் இல்லை. ஏதாவது வேலைக்குசெல்லும்படி வற்புறுத்தினார்.

    மும்பையில் தங்கி சினிமா வாய்ப்புகள் தேடினேன். அப்போது சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன். சில மாதங்களுக்கு பிறகு அர்ஜுன் ரெட்டி படத்துக்கு தேர்வாகி படப்பிடிப்பில் பங்கேற்றேன்.



    இயக்குனரிடம் முத்த காட்சி, நெருக்கமான காட்சிகள் இருக்கக்கூடாது என்று அப்பா கண்டிப்பாக கூறினார். படம் திரைக்கு வந்ததும் பெரிய பாராட்டுகள் குவிந்தன. நிஜ வாழ்க்கையில் அர்ஜுன் ரெட்டி போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் காதலிப்பேன். இந்த படத்துக்கு பிறகு தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளன.

    2 வருட சினிமா பயணத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். சமூக வலைத்தளத்தில் படங்கள் வெளியிடுவதில் விருப்பம் இல்லை. நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு நான் தீவிர ரசிகை. உணவு கட்டுப்பாடு இல்லை. வாரத்தில் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்வேன். புத்தகங்கள் படிப்பேன். எனக்கு தோழிகள் குறைவு.”

    இவ்வாறு அவர் கூறினார். #ShaliniPandey #ArjunReddy

    ×