என் மலர்
சினிமா செய்திகள்
- அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அவதார்: தி வே ஆப் வாட்டர்
இந்நிலையில்,' அவதார்: தி வே ஆப் வாட்டர்' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரில் ஆச்சரியப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்று ரசிர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'.
- இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார்.
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது. 'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கட்டா குஸ்தி
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- அனைத்து மொழிகளிலும் வெளியாகி இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
- ரஜினிகாந்த் உட்பட பல்வேறு பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.
பெங்களூரு:
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது. இதையடுத்து, இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ளது.
இந்தி மொழியில் மட்டும் ரூ.47 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள திரையரங்கு ஒன்றில் தன்னார்வலர்கள் மற்றும் நலம் விரும்பிகள் குழுவுடன் இணைந்து இந்த திரைப்படத்தை பார்த்து ரசித்தார்.

இது குறித்து தமது டுவிட்டர் பதிவில், கந்தாரா திரைப்படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.நமது செழுமையான பாரம்பரியங்களை படம் பிடித்துக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த திரைப்படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதையடுத்து மத்திய நிதி மந்திரிக்கு ரிஷப் ஷெட்டி நன்றி தெரிவித்து டுவிட் செய்துள்ளார்.
- இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காபி வித் காதல்'.
- இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

காபி வித் காதல்
இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

காபி வித் காதல்
இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது. இந்நிலையில், காபி வித் காதல் திரைப்படத்தின் 'தியாகி பாய்ஸ்' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. பேரரசு வரிகளில் யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹிப்ஹாப் தமிழா பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

காபி வித் காதல்
காபி வித் காதல் திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
- இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

புஷ்பா
இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இந்த படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 'புஷ்பா' முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர் அசல் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார்.
- இவர் நிகழ்ச்சியில் பெண்களிடம் அத்துமீறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். கடந்த வாரம் அசல் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் சீசன் 6
இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் அத்துமீறியதால் தான் அசல் வெளியேற்றப்பட்டார் என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பெண்களிடம் அத்துமீறவில்லை என்றும் அப்படி தெரிந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அசல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6
அதில், "என் வீட்டில் நான் எப்படி இருப்பேனோ அப்படிதான் நான் பிக்பாஸ் வீட்டிலும் இருந்தேன். சகபோட்டியாளர்களை என் வீட்டில் இருப்பவர்களைப் போலதான் நினைத்தேன். நான் தப்பான பார்வையில் பார்த்திருந்தேன் என்றால் உள்ளே இருப்பவர்களுக்கு அது தெரிந்திருக்கும். ஒருத்தர் எப்படி பார்க்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் அளவிற்கு மூளை இருப்பவர்கள் தான் உள்ளே இருக்கிறார்கள்.

பிக்பாஸ் அசல்
நான் தவறாக எதும் செய்திருந்தால் கண்டிப்பாக வெளியே வந்திருக்கும். கேமராவுக்கு முன்னாடி இப்படி எல்லாம் செய்வேனா? நான் செய்தது பார்க்கிறவர்களை தொந்தரவு செய்திருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இது என்னுடைய இயற்கையான குணம். இது பொதுவெளியில் பார்க்கிறவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நான் மாற்றிக்கொள்கிறேன்" என்று கூறினார்.
- நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பு பெற்ற படம் ‘ஜெய்பீம்’.
- இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் சூர்யா நடிப்பில், கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.

ஜெய்பீம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தாலும் குறிப்பிட்ட சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி ஜெய் பீம் படக்குழு சில பிரச்சனைகளையும் சந்தித்தது. இருப்பினும் இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

ஜெய்பீம்
இந்நிலையில் 'ஜெய் பீம்' படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனைக் கொண்டாடும் விதமாகப் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இயக்குனர் ஞானவேல் 'ஜெய்பீம்' படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

ஜெய்பீம்
தொடர்ந்து சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஜெய் பீம் படம் ஓராண்டு நிறைவு செய்வதை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. திரைக்கதை முதல் இயக்கம் வரை இப்படம் வலுப்பெற்றுக் கொண்டேயிருந்தது. இந்த அர்த்தமுள்ள படத்தை கொடுத்த என் சகோதரர் ஞானவேல் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரம் என் வாழ்வில் ஓர் மைல்கல்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
Happy to celebrate one year of #JaiBhim From script to execution this film kept getting stronger & stronger.. I thank my brother @tjgnan Gnanavel & Team for giving us this most meaningful film. Lawyer Chandru is a landmark role in my career! https://t.co/iSLn1Tj3ir
— Suriya Sivakumar (@Suriya_offl) November 2, 2022
- பிக்பாஸ் 6-வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் ஷாந்தி மற்றும் அசல் எலிமினேட் செய்யப்பட்டார். ஜிபி முத்து தாமாக முன்வந்து வெளியேறினார். இப்படி பரப்பரப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி 24 நாட்களை எட்டியுள்ளது. கடந்த வாரம் தொகுப்பாளர் கமல்ஹாசன் சகபோட்டியாளர்களை உடல் மொழி கேலி செய்த அசீமையும் மணிகண்டனையும் கண்டித்து பேசினார். இதற்கு ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

கமல்ஹாசன்
இந்நிலையில், ரசிகர் ஒருவர், "கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உடல்மொழி கேலி செய்த அசீம் மற்றும் மணிகண்டனை கமல்ஹாசன் கையாண்ட விதம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைந்துள்ளது. அதோடு நிறுத்தாமல், ஏடிகேவை அனைவரையும் போல நடித்து காண்பிக்க செய்து வித்தியாசத்தை விளக்கினார்" என்று கமலை குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

கமல்ஹாசன்
இந்த பதிவிற்கு பதிலளித்த கமல், "நன்றி மவுலி அநாகரிகமோ, அவமானமோ இல்லாமல் நகைச்சுவை செய்யத் தூண்டிய தலைவர்களில் நீங்களும் ஒருவர். உங்களைபோல் பெருமைமிகுந்த மனிதர்களின் வரிசையில் நாங்களும்" என பதிலளித்தார்.

கமல்ஹாசன்
கமலின் பதிவை பார்த்த ரசிகர், "தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது போல் தெரிகிறது. ஆனால் என்னுடைய கருத்துகள் தங்களை வந்தடைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஒன்று கூறுகிறேன், திரைதுறையில் மாற்றுப் பாலினத்தவர் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன்
தொடர்ந்து, நடிகர் கமல் "இயக்குனரும் மூத்த நடிகருமான மௌலி என தவறுதலாக நினைத்துவிட்டேன். இருந்தாலும் தங்களுடைய பாராட்டுக்கு நன்றி!" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குனரும், மூத்த நடிகருமான திரு. மெளலி என தவறுதலாக நினைத்துவிட்டேன். இருந்தாலும், தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி.
— Kamal Haasan (@ikamalhaasan) November 1, 2022
- எலான் மஸ்க் டுவிட்டரில் 'புளூ டிக்’ பெற 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
- இந்த அறிவிப்பு தொடர்பாக பல புகார்களும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி உரிமையாளராகி உள்ளார். அவர் அந்நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்த அவர், நிர்வாக குழுவையும் கூண்டோடு கலைத்தார்.

எலான் மஸ்க்
டுவிட்டரில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களின் அதிகாரபூர்வ கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகிறார்கள். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்குதான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள டுவிட்டர் கணக்கில் உள்ள பெயருக்கு அருகில் நீலநிற டிக் குறியீடு இருக்கும்.

சிபி சத்யராஜ்
இந்த புளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக பல புகார்களும் விமர்சனங்களும் எழுந்து வந்தது. இந்நிலையில், எலான் மஸ்க்கின் இந்தப் பதிவிற்கு நடிகர் சிபி சத்யராஜ் "உங்கள் கூகுள் பே நம்பரை எனக்கு அனுப்புங்கள்" என தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிலளித்துள்ளார். சிபி சத்யராஜின் இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Pls send me your Gpay number. https://t.co/BXhd1aaCJF
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) November 2, 2022
- தெலுங்கில் பிக்பாஸ் 6-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா நடிப்பது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தற்போது தெலுங்கில் பிக்பாஸ் 6-வது சீசனை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியை நிறுத்தக்கோரி ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் நாகார்ஜுனா விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். நாகார்ஜுனா மட்டுமன்றி பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கும் பதில் மனு தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நாகர்ஜுனா
மேலும், இந்த வழக்கு விசாரணையை 14 நாட்களுக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை எட்டியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் இந்த சீசன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'டிரைவர் ஜமுனா'.
- 'டிரைவர் ஜமுனா' படம் வருகிற நவம்பர் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார்.

டிரைவர் ஜமுனா
இப்படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு மற்றும் திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

டிரைவர் ஜமுனா படக்குழு
இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், ''நீண்ட நாள் கழித்து கோவிட் தொற்று பாதிப்பிற்கு பிறகு இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் கலந்து கொண்டிருக்கிறேன். இதுவே மகிழ்ச்சியை அளிக்கிறது. 'கனா' படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் 'டிரைவர் ஜமுனா' வெளியாகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்
இயக்குநர் கின்ஸ்லின் கோவிட் தொற்றுக்கு முன்னர் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை விவரித்தார். அந்தத் தருணத்தில் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. ஏனெனில் அது மிகுந்த பொறுப்புடன் கூடிய பணி. மேலும் அந்த தருணத்தில் 'க/பெ ரணசிங்கம்' படத்தை முடித்துவிட்டு, நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, மிக மெதுவாக திரைத்துறையில் பயணிக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் டிரைவர் ஜமுனா படத்தின் கதையைக் கேட்டு ஒரே நாளில் இந்தப் படத்தில் நடிக்கலாம் என தீர்மானித்தேன். என்னுடைய திரையுலக அனுபவத்தில் ஒரு கதையைக் கேட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் இதுதான்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்துவிட்டது. அதிலும் டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு பெருமளவில் குறைந்து விட்டது. ஆனால் சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும், ஒரு படம் வித்தியாசமானதாகவும், தரமானதாகவும் இருந்தால் அதற்கான ஆதரவு குறையவில்லை. 'டிரைவர் ஜமுனா' அந்த வகையிலான படம் என்பதால், நம்பிக்கையுடன் நவம்பர் 11-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்
சண்டை பயிற்சி இயக்குனர் அனல் அரசிடம் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்தேன். இந்தப் படத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதும் ஒரே ஒரு காட்சியில் சிறிய பகுதியை தவிர, படம் முழுவதும் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டினேன். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நெடுஞ்சாலைகள் தான் நடைபெற்றது. அதனால் மறக்க இயலாத அனுபவமாகவும் இருந்தது. இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.
- தமிழில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‘கைதி’ திரைப்படம் இந்தியில் ‘போலோ’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது.
- இந்த படத்தில் நடிகர் கார்த்தி கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.
மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023-ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கைதி
இதைத்தொடர்ந்து, 'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலோ' என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். மேலும் நரேன் கதாபாத்திரத்தில் நடிகை தபு நடிக்கிறார். இப்படத்தை அஜய் தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

அஜய் தேவ்கன்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிகை அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 'போலோ' திரைப்படத்தின் படப்பிடிப்பில் அமலாபால் வருகிற டிசம்பர் மாதம் முதல் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Good tidings!🌸 https://t.co/uxdNoVX8rM
— Amala Paul ⭐️ (@Amala_ams) November 1, 2022






