search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கூகுள் பே நம்பரை அனுப்புங்கள்.. எலான் மஸ்கை கிண்டல் செய்த சிபி சத்யராஜ்..
    X

    எலான் மஸ்க் - சிபி சத்யராஜ்

    'கூகுள் பே' நம்பரை அனுப்புங்கள்.. எலான் மஸ்கை கிண்டல் செய்த சிபி சத்யராஜ்..

    • எலான் மஸ்க் டுவிட்டரில் 'புளூ டிக்’ பெற 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
    • இந்த அறிவிப்பு தொடர்பாக பல புகார்களும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

    உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி உரிமையாளராகி உள்ளார். அவர் அந்நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்த அவர், நிர்வாக குழுவையும் கூண்டோடு கலைத்தார்.


    எலான் மஸ்க்

    டுவிட்டரில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களின் அதிகாரபூர்வ கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகிறார்கள். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்குதான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள டுவிட்டர் கணக்கில் உள்ள பெயருக்கு அருகில் நீலநிற டிக் குறியீடு இருக்கும்.


    சிபி சத்யராஜ்

    இந்த புளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக பல புகார்களும் விமர்சனங்களும் எழுந்து வந்தது. இந்நிலையில், எலான் மஸ்க்கின் இந்தப் பதிவிற்கு நடிகர் சிபி சத்யராஜ் "உங்கள் கூகுள் பே நம்பரை எனக்கு அனுப்புங்கள்" என தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிலளித்துள்ளார். சிபி சத்யராஜின் இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


    Next Story
    ×