என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி.
    • இவர் தற்போது இந்தியில் 'மெரி கிறிஸ்துமஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்தியில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், 'விடுதலை', 'மும்பைக்கார்' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.


    மெரி கிறிஸ்துமஸ்

    இந்நிலையில், விஜய் சேதுபதி மலையாள நடிகர் மம்முட்டியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை 'காக்கா முட்டை', 'ஆண்டவன் கட்டளை', 'கடைசி விவசாயி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    மம்முட்டி

    மேலும், இப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'வாரிசு'.
    • இப்படத்தின் முதல் பாடல் புரோமோ தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    வாரிசு

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.


    முதல் சிங்கிள் அறிவிப்பு

    இதைத்தொடர்ந்து 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிள் புரோமோ இன்று மாலை 6.30 மணிக்கும் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் 'ரஞ்சிதமே' பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. மேலும், அந்த வீடியோவில் இந்த பாடல் வருகிற நவம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.



    • இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ஏஜென்ட் கண்ணாயிரம்.
    • இந்த படத்தின் புதிய பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

    காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, ஏ1, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும்.


    சந்தானம்

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் சந்தானத்தின் பிறந்தநாளன்று ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.


    ஏஜென்ட் கண்ணாயிரம் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் 'ஒப்பாரி ரேப்' பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. அம்மாவை இழந்த மனிதனின் கண்ணோட்டத்தில் உருவாகி இருக்கும் இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் வருகிற நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • பிக்பாஸ் 6-வது சீசன் தற்போது 25 நாட்களை எட்டியுள்ளது.
    • இதில் இன்று வெளியான இரண்டாவது புரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் வெளியேற்றப்பட்டார். இதில் தற்போது 18 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 25-வது நாளை நெருங்கியுள்ளது.


    பிக்பாச் சீசன் 6

    இந்நிலையில், இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் ஏ.டி.கே. இந்த வீட்டில் யார் யார் எப்படி மாறுவாங்கனு தெரில. சத்தியமா சொல்றேன். ஆயிஷா, ஷெரினா, மணி அந்த வேஸ்ட்ட கொட்டுறதுல என்ன கஷ்டம். ஒரு அடி தான் இருக்கும் அந்த குப்ப தொட்டில கொட்டிட்டு வைக்கிறதுல என்ன கஷ்டம். ஒரு பிளேட்டே கழுவ முடியாதவங்க எப்படி ஒரு விஷயத்த முன்னோக்கி போவாங்க என்று ராமிடம் கூறுகிறார். இத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இதனை கமல்ஹாசன் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.



    • இயக்குனர் கவுதமன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இயக்குனர் கவுதமன் 'கனவே கலையாதே', 'மகிழ்ச்சி' போன்ற படங்களின் மூலம் பிரபலமடைந்தவர். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார்.


    இயக்குனர் கவுதமன்

    இந்நிலையில், இந்த படத்திற்காக பாடலமைக்கும் பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் கவுதமன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவிஞர் வைரமுத்து இது தொடர்பாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    படக்குழு

    அந்த பதிவில், "ஜி.வி.பிரகாஷ் வீடு கெளதமன் படத்துக்குப் பாட்டுக் கட்டுகிறோம். மகிழ்ச்சியின் இழைகளில் நெய்யப்படுகிறது பாட்டு வஞ்சிக்கொடியே வாடி - நீ வளத்த பொருளத் தாடி பாசத்த உள்ளவச்சுப் பாசாங்க வெளியவச்சு வேசங்கட்டி வந்தவளே வெறும்வாய மெல்லுறியே பத்தே நிமிடத்தில் பாட்டு பிரமாதம் பிரகாஷ்! " என்று பதிவிட்டுள்ளார்.



    • இயக்குனர் யுவன் இயக்கத்தில் நடிகை சன்னி லியோன் தமிழில் நடிக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'.
    • இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, ரமேஷ் திலக், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    ஓ மை கோஸ்ட் - சன்னி லியோன்

    ஓ மை கோஸ்ட் - சன்னி லியோன்

     

    இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே.சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.

    ஓ மை கோஸ்ட் படக்குழு

    ஓ மை கோஸ்ட் படக்குழு

     

    இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட நடிகை சன்னி லியோன் பேசியதாவது, தமிழகம் வந்து உங்களை சந்திதது மகிழ்ச்சி. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், அன்பும் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஓ மை கோஸ்ட் திரைப்படத்திற்காக அனைவரும் கடின உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்துள்ளோம். இந்த படத்தை பார்க்க உங்களது நேரத்தையும் பணத்தையும் நீங்கள் ஒதுக்குவதற்கு நான் நன்றி கூறிக்கொள்கிறேன். எங்களது கனவை நீங்கள் பார்க்க போகிறீர்கள். உங்களது அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை என்றார்.

    ஓ மை கோஸ்ட் படக்குழு

    ஓ மை கோஸ்ட் படக்குழு

     

    ஜிபி முத்து கூறியதாவது, இது தான் எனது முதல் திரைப்படம், முன் அனுபவம் இல்லாத எனக்கு, இயக்குனர் தான் பக்கபலமாக இருந்தார். தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தில் எனக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்துள்ளனர். அந்த பாத்திரம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். உங்களுடைய ஆதரவு இந்த படத்திற்கு தேவை. அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றார்.

    • நடிகர் விஷால் சமீபத்தில் காசிக்கு தரிசனத்திற்காக குடும்பத்துடன் சென்றார்.
    • காசி குறித்து அவர் பகிர்ந்துள்ள அனுபவ பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் தன் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.


    விஷால்

    அரசியல் மீது விஷால் ஆர்வம் காட்டி வரும் இந்நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. பா.ஜனதா கட்சி திரைத்துறையினரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அவர் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்ற தகவலும் பரவியது.


    நரேந்திர மோடி

    தொடர்ந்து நடிகர் விஷால் 'ஆன்மிக நோக்கத்தை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது' என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில், நடிகர் விஷாலின் பதிவிற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ''காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் யுவன் இயக்கத்தில் நடிகை சன்னி லியோன் தமிழில் நடிக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'.
    • இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.


    ஓ மை கோஸ்ட் டிரைலர் வெளியீட்டு விழா

    இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.


    ஓ மை கோஸ்ட் டிரைலர் வெளியீட்டு விழா

    இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ் பேசியதாவது, "இந்த படத்தின் கதையை இயக்குனர் கூறியபோது, அதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அதில் சன்னி லியோன் நடிக்கிறார் என்ற உடன், நான் இந்த படத்தில் நடிக்க ஒத்து கொண்டேன்.


    ஓ மை கோஸ்ட் டிரைலர் வெளியீட்டு விழா

    சன்னி லியோன் ஒரு சிறந்த மனிதநேயம் மிக்க நபர், அவரை நெருங்கவே நாங்கள் தயங்கி கொண்டு இருந்தோம். ஆனால் அவர் இலகுவாக மிக இயல்பாக எங்களிடம் பழகினார். அவர் இந்த படத்தில் மிகப்பெரிய அர்பணிப்பை கொடுத்துள்ளார். சிறப்பாக நடித்துள்ளார். அனைவரும் கடின உழைப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்" என்று பேசினார்.

    • இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'.
    • இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார்.

    இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.


    கட்டா குஸ்தி முதல் தோற்ற போஸ்டர்

    'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதத்திற்கு முன்பே முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.


    இரண்டாம் தோற்ற போஸ்டர்

    இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் 'கட்டா குஸ்தி' படத்தின் இரண்டாம் தோற்ற போஸ்டரை நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். விஷ்ணு விஷாலும் ஐஸ்வர்யா லட்சுமியும் போட்டி போடுவது போன்று இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. 



    • நடிகர் விஷால் தன் குடும்பத்துடன் காசியில் தரிசனம் செய்தார்.
    • இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலானது.

    நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'சண்டக்கோழி', 'திமிரு', 'தாமிரபரணி', 'ஆம்பள', 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'சக்ரா' என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தற்போது இவர் கைவசம் 'லத்தி', 'மார்க் ஆண்டனி' போன்ற படங்கள் உள்ளன.

     

    விஷால்

    விஷால்

    நடிகர் விஷால் குடும்பத்துடன் காசிக்கு தரிசனத்திற்காக சென்றார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அன்புக்குரிய மோடி அவர்களுக்கு, நான் காசிக்கு சென்று வந்தேன். மிகச்சிறந்த தரிசனம் கிடைத்தது. புனிதமான கங்கை நதியை தொடும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது. காசியின் கோவிலை புதுப்பித்து எளிதில் அனைவரும் தரிசனம் செய்யும் வகையில் மாற்றியதற்காக கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்" என்று பதிவிட்டுள்ளார்.

     

    பிரதமர் மோடி - விஷால்

    பிரதமர் மோடி - விஷால்

    அரசியல் மீது விஷால் ஆர்வம் காட்டி வரும் இந்நேரத்தில் இப்படியொரு கருத்தை அவர் தெரிவித்திருப்பது கவனிக்க வைத்திருக்கிறது. பா.ஜனதா கட்சி திரைத்துறையினரை தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஷால் தெரிவித்திருக்கும் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்தனர். அவர் பா.ஜனதா கட்சியில் சேரலாம் என்ற தகவலும் பரவியது.

     

    பிரகாஷ் ராஜ் 

    பிரகாஷ் ராஜ் 

    இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் அவரின் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், "ஷாட் ஓகே... அடுத்து" என கிண்டல் செய்யும் வகையில் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு பலரின் கவனத்தை திருப்பியுள்ளது. 

    • மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’காம்ப்ளக்ஸ்’.
    • இப்படத்தின் இடம்பெற்றுள்ள கத்திக்கூவுது காதல் என்ற பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காம்ப்ளக்ஸ்'. கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜி.எஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது.

     

    காம்ப்ளக்ஸ்

    இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கத்தி கூவுது காதல் என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலை ஜிவி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். ஞானகரவேல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    • விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படம் வருகிற சங்கராந்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

     

    கையில் குழந்தையுடன் விஜய்

    கையில் குழந்தையுடன் விஜய்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் தில் ராஜுவின் குழந்தையை விஜய் கையில் வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.

     

    முதல் சிங்கிள் அறிவிப்பு

    முதல் சிங்கிள் அறிவிப்பு

    இந்நிலையில், வாரிசு படத்தின் முதல் சிங்கள் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் சிங்கள் புரோமோவை இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடவுள்ளதாக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    ×