என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் அட்லீ தற்போது ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
- ஜவான் படத்தின் கதை திருடப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை 'ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்' சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார்.

அட்லீ -ஷாருக்கான்
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'ஜவான்' படத்தின் கதை விஜயகாந்த் நடித்து 2006-ஆம் ஆண்டு வெளியான 'பேரரசு' படத்தின் கதை எனக் கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரித்து உரிய விளக்கம் அளிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது."

ஜவான்
இதற்கு முன்பு அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' படம் 'மௌன ராகம்' படத்தைப் போல் இருப்பதாகவும் 'மெர்சல்' படம் 'மூன்று முகம்' படம் போல் உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- '3', ‘வை ராஜா வை’ போன்ற படத்தை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
- தற்போது இவரின் இயக்கத்தில் ரஜினி இணைந்துள்ளார்.
2012-ல் வெளியான 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்து இருந்தனர். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் 'ஓ சாத்தி சால்' என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இவர் 'லால் சலாம்' என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

லால் சலாம்
இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் முதல் முறையாக ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#LalSalaam 🫡 to everyone out there!
— Lyca Productions (@LycaProductions) November 5, 2022
We are extremely delighted to announce our next project, with the one & only Superstar 🌟 @rajinikanth in a special appearance!
Directed by @ash_rajinikanth 🎬
Starring @TheVishnuVishal & @vikranth_offl in the leads 🏏
Music by @arrahman 🎶 pic.twitter.com/aYlxiXHodZ
- பிக்பாஸ் 6-வது சீசன் இன்றுடன் 26 நாட்களை எட்டியுள்ளது.
- இந்த நிகழ்ச்சியில் இன்று வெளியான இரண்டாவது புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் வெளியேற்றப்பட்டார். இதில் தற்போது 18 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 26-வது நாளை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் என்னை மதிக்காத டீம் இருந்தா என்ன? இல்லைனா என்ன? என்று அசீம் மகேஸ்வரியிடம் கத்துகிறார். அதற்கு பதிலளித்த மகேஸ்வரி நீங்க ரொம்ப நல்ல பேசுறிங்க அசீம் என்று கூறுகிறார். தொடர்ந்து அசீம் உங்கள மாதிரி எல்லாம் எனக்கு பேசத் தெரியாது மா என்று சொல்கிறார். இதற்கு மகேஸ்வரி உங்களுக்கு அறிவு இருக்குதுல அப்ப ஏன் பிரேக்கிங் நியூஸ் எப்படி இருக்கனும்னு முதல்ல யோசிக்கல என்று கூறுகிறார். இறுதியில் அசீம் நீங்கள் ஜட்ஜிங்கில் பூஜ்ஜியம் என்று கூறுகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் பெரும் பூகம்பம் கிளம்பியுள்ளது.
- துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

துணிவு போஸ்டர்
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

அஜித்
இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'துணிவு' படத்தின் டப்பிங் பணியில் நடிகர் அஜித் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதற்கு முன்பு நடிகை மஞ்சுவாரியர் டப்பிங் பணியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகை ஹன்சிகா சமீபத்தில் தொழிலதிபரும் நெருங்கிய நண்பருமான சோகேலை திருமணம் செய்யவுள்ளதை அறிவித்திருந்தார்.
- இவர்களின் திருமணம் வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.
தமிழில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஹன்சிகா தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது தமிழில் 4 படங்கள், தெலுங்கில் 2 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

ஹன்சிகா - சோகேல்
இவர் சமீபத்தில் தன்னுடைய நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான சோகேலை திருமணம் செய்யவுள்ளதை சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தியிருந்தார். மேலும், இவர்களது திருமணம் வருகிற டிசம்பர் மாதம் 04-ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.

சோகேல் திருமணத்தில் ஹன்சிகா
இந்நிலையில், சோகேலுக்கும் ஹன்சிகாவின் தோழிக்கும் ஏற்கனவே திருமணமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தொழிலதிபர் சோகேல் கடந்த 2016-ஆம் ஆண்டு ஹன்சிகாவின் தோழி ரிங்கு என்பவரை திருமணம் செய்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றதாகவும் செய்தி பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர்களின் திருமண நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா பங்கேற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- அர்ஜுன் தாஸ் தற்போது இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அநீதி படத்தில் நடித்து வருகிறார்.
- சமீபத்தில் இந்த படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியாகி வைரலானது.
'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தத இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் 'அநீதி' படத்தில் நடித்து வருகிறார்.

அர்ஜுன் தாஸ்
இதில் இவருக்கு ஜோடியாக சார்ப்பட்டா பரம்பரை படத்தில் நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

அர்ஜுன் தாஸ் - சாந்தகுமார்- தன்யா ரவிச்சந்திரன்
இதைத்தொடர்ந்து, அர்ஜுன் தாஸ், 'மெளனகுரு', 'மகாமுனி' போன்ற படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- 'காந்தாரா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது.

காந்தாரா
இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து. இதனடிப்படையில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக காந்தாரா திரைப்படம் வெளியிடப்பட்டது. தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.

ஆர்.கே.சுரேஷ்
இந்த படத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், 'காந்தாரா' திரைப்படம் பார்த்த தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கூறியதாவது, "இந்துத்துவா படமாக நான் இதை பார்க்கவில்லை. அன்று வெளியான அம்மன் படம் முதல் இன்று வெளியான காந்தாரா வரை அனைத்தையும் ஆன்மிக படங்களாகதான் பார்க்கிறேன். நம்ம ஊரு கருப்பண்ணசாமி தான் அங்கு காந்தாரா. ஆன்மிக படங்கள் என்றைக்கும் வெற்றிபெரும். " என்று குறிப்பிட்டுள்ளார்.
- இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் என்.சி.22.
- இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

என்.சி.22
மேலும், இதில் சரத்குமார், அரவிந்த் சாமி, வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், என்சி22 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

என்.சி.22
அதன்படி, நடிகை பிரியாமணி இந்த படத்தில் அரசியல்வாதியாக நடிப்பதாகவும் இடைவேளைக்கு பிறகு முதலமைச்சராவது போல் திரைக்கதை அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பெண் முதலமைச்சர் ஆனால் என்னென்ன நன்மைகள் செய்ய முடியும் என்பது போன்று அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'.
- இப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இரவின் நிழல்
'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரவின் நிழல்
தொடர்ந்து இப்படம் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் என பார்த்திபன் தெரிவித்திருந்ததையடுத்து படம் வெளியாக தாமதம் ஏற்பட்டதால் மன்னிப்புக் கேட்டு பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், 'இரவின் நிழல்' அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாகும் என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இரவின் நிழல்
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அமேசானில் இன்று முதல்'பொன்னியின் செல்வன்'எனவே,வரும் வாரம் வருமாம் 'இரவின் நிழல்'-செய்தி பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம். அன்றைய உணவிற்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக்கிடம்.

இரவின் நிழல்
இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகளவு உதவுவதும் பெருங்கொடை! பெருங்கொடை!குடையாக விரியும் அரசின் உதவிகள்,அடுத்த சீசனில் மழைக்கும்முன் இடும் கூடுதல் திட்டமிடலால் மக்கள் நலம் கூடும். மழைசாரல் பட சூடான தேனீரோடு துவங்குவோம் இந்நாளை!" என்று பதிவிட்டுள்ளார்.
அமேசானில் இன்று முதல்'பொன்னியின் செல்வன்'எனவே,வரும் வாரம் வருமாம்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 4, 2022
'இரவின் நிழல்'-செய்தி
பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம்.
அன்றைய உணவிற்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக்கிடம்.இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகளவு உதவுவதும் பெருங்கொடை!conti
- ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'.
- இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.
ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் படம் தயாராகி உள்ளது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

ஆதிபுருஷ்
டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் வீடியோ கேம் போல் இருப்பதாகவும் ராவணனை தவறாக சித்தரித்து இருப்பதாகவும் பலர் கண்டித்தனர். இப்படம் வருகிற ஜனவரி மாதம் 12-ந்தேதி வெளியாக உள்ள நிலையில் ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிபுருஷ்
அதன்படி, இந்த படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகளை உலகத் தரத்தில் உருவாக்கவும் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சிகளை சரி செய்யவும் படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆதிபுருஷ் படத்தை ஏப்ரல், மே மாதங்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனர் அருண் ராஜா காமராஜ்.
- இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இவர் பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். 2018-ஆம் ஆண்டு பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான 'கனா' திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார்.

அருண்ராஜா காமராஜ்
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தை இயக்கி இருந்தார். இதனிடையே கடந்த ஆண்டு மே மாதம் அருண் ராஜா காமராஜும் அவரது மனைவி சிந்துஜாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் இவரது மனைவி சிந்துஜா சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த மரணம் அருண் ராஜாவை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

அருண்ராஜா காமராஜ் - சிந்துஜா
இந்நிலையில், இவர் கடந்த மாதம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் இவர் திருமணம் செய்த பெண் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த திருமணம் குறித்து விரைவில் அருண் ராஜா தெரிவிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா போன்ற படங்கள் தயாராகி வருகிறது.
- இதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனர் சாம்ராட் சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் 'மாணிக்' படத்தில் நடிக்கவுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அருண் ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தற்போது அதே கண்கள் படம் மூலம் பிரபலமான ரோகின் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

மாணிக் படக்குழு
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'மாணிக்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். எண்டேமோல் ஷைன் இந்தியா நிறுவனம் மற்றும் நட்மெக் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சாம்ராட் சக்கரவர்த்தி இயக்குகிறார். 'மாணிக்' திரைப்படத்தில் சம்யுக்தா சண்முகநாதன், விவேக் பிரசன்னா, குழந்தை நட்சத்திரங்கள் சாய் ஜனனி மற்றும் ஸ்வர் காம்ப்ளே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மாணிக்
தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் உளவியல் திரில்லர் ஜானரில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் நைனிடாலில் தொடங்குகிறது. மேலும், 'மாணிக்' திரைப்படத்தை 2023-ஆம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் 2017-ல் 'டாடி' என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






