என் மலர்
சினிமா செய்திகள்
- பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டனர்.
- இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளதையடுத்து பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பாலிவுட் நடிகை ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ரன்பீர் கபூர் - ஆலியா பட்
சமீபத்தில் ஆலியா பட் கர்ப்பமாகி, பின்னர் மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஆலியா பட்டுடன் அவரது கணவர் ரன்பீர் கபூர் உடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. அச்சமயம் திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாக இருந்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

ரன்பீர் கபூர் - ஆலியா பட்
ஆலியா பட்டுக்கு இன்று காலை பிரசவவலி ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூர் தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- சென்னை மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு நடிகர் விஷால் இன்று இலவச திருமணத்தை நடத்தி வைத்தார்.
- பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
சென்னை மாத்தூரில் திருவள்ளூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் இன்று 11 ஏழை ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு 3 மத முறையிலும் வழிபட்டு ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலி எடுத்து கொடுத்து இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் 51 பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை விஷால் மணமக்களுக்கு வழங்கினார்.

11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த விஷால்
அப்பொழுது பேசிய விஷால், 11 ஏழை ஜோடிகள் திருமணத்தை நடத்தி வைத்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த 11 தங்கச்சிகளை மாப்பிள்ளைகள் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களது மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. எனக்கு பட்டு வேட்டி, சட்டை கட்டுவது ரொம்ப பிடிக்கும். இதற்காக இந்த விழாவுக்கு நான் பட்டு சட்டையில் வந்துள்ளேன்.
படப்பிடிப்பு தளங்களில் எனக்கு பல்வேறு அடிகள் விழுந்தன. ஏதோ எனது மனதை பாதிக்கும் விதமாக சில சம்பவங்கள் நடைபெற்றன. எனக்கு மனதில் தோன்றியதை நான் உடனுக்குடன் செய்து விடுவேன். அது போல ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என எனது மனதில் தோன்றியது.

விஷால்
அதுபோல இன்று இந்த ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன். இது எனக்கு பெருமையாக உள்ளது. ஏழைகளுக்கு செய்வது பெரும் பாக்கிய மாக கருதுகிறேன். இந்த 11 ஜோடிகளின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் படிப்புக்கு உதவி செய்வேன்.

விஷால்
இந்த இலவச திருமணங்கள் போன்று மற்ற மாவட்டங்களிலும் எனது இயக்கம் சார்பில் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்வேன். ஏழைகளின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. நடிகர் சங்க கட்டிடம் பணிகள் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிவடைய உள்ளன. அந்த விழாவுக்கும் நீங்கள் எல்லோரும் வரவேண்டும். நடிகர் சங்கத்தில் 3 ஆயிரத்து 500 கலைஞர்கள் உறுப்பினராக உள்ளனர். அவர்களின் எதிர்காலத்திற்காக நான் பாடுபட்டு வருகிறேன். அவர்களது மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி.

விஷால்
நான் யாரிடமும் பிச்சை கேட்கும் பழக்கம் கிடையாது. ஆனால் ஒரு மாணவியின் படிப்புக்காக கல்லூரியில் பிச்சை கேட்டு அந்த மாணவியை உயர்தர கல்வி பெற வைத்து உள்ளேன். தற்போது அந்த மாணவி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அது எனக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது. ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது. இவ்வாறு விஷால் பேசினார்.

குடும்பத்துடன் காசிக்கு சென்ற விஷால்
பின்னர் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- திரைத்துறையின் அப்துல் கலாம் நான் அல்ல, நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்டும் பணிகள் நிறைவு பெற்றபின் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். அந்த திருமணம் காதல் திருமணமாக இருக்கும்.

பிரதமர் மோடி - விஷால்
தாஜ்மஹாலை பார்த்தால் ஷாஜகானை தான் நாம் வியந்து பார்க்கிறோம். அதுபோல என்னுடைய காசி பயணம், அங்கு நான் பார்த்த விஷயங்களை என்னை வியக்க வைத்தது. அதனால் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தேன். அதற்கு அவர் எனக்கு பதில் அளித்தது இன்னும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. இது அரசியல் கிடையாது. மனதார ஒரு விஷயத்தை, சாதாரண ஒரு குடிமகனாக பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதை பதிவு செய்தேன் பிரதமர் எனக்கு பதிலளித்தது மிகவும் சந்தோஷம். இவ்வாறு அவர் கூறினார்.
- வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் படம் 'வாரிசு'.
- இந்த படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

வாரிசு - ரஞ்சிதமே பாடல்
இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை நேற்று (05.11.2022) மாலை 5.30 மணிக்கு படக்குழு வெளியிட்டிருந்தது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த பாடல் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூட்டியூப்பில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- விஷால் சமீபத்தில் காசிக்கு தரிசனத்திற்காக குடும்பத்துடன் சென்று பின்னர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
- நன்றி தெரிவித்த விஷாலுக்கு பிரதமர் மோடி பதில் பதிவிட்டிருந்தார்.
தமிழ் திரையுலகின் ஆக்ஷன் ஹீரோவான நடிகர் விஷால் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுபற்றி கடந்த மாதம் ஆந்திராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது விஷாலிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஷால், ஒருவர் 100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தாலே அவர் அரசியலுக்கு வந்து விட்டதாக அர்த்தம். அதனால் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். தீவிர அரசியலுக்கு வர இன்னும் காலமாகும் என்றார்.

குடும்பத்தினருடன் காசிக்கு சென்ற விஷால்
இந்நிலையில் காசிக்கு சென்ற விஷால் அங்கு செய்துள்ள புனரமைப்பு பணிகளை பார்த்து வியந்தார். இதற்காக பிரதமர் மோடியை பாராட்டினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், "அன்புள்ள மோடி ஜி, நான் காசிக்குச் சென்றேன். அற்புதமான தரிசனம்-பூஜை செய்து, கங்கை நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாக எவரும் தரிசனம் செய்வதற்காக நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்களுக்கு தலை வணங்குகிறேன். வணக்கம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடி
இவரின் இந்த பதிவுக்கு பிரதமர் மோடியும் பதில் அளித்திருந்தார். அவர் தனது பதிவில் 'காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி' என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி அவர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததும் அவர் விஷாலுக்கு பாராட்டு தெரிவித்ததும் அரசியல் தளத்தில் பரபரப்பானது. அவர் பா.ஜனதாவில் சேரலாம் என்ற தகவலும் பரவியது.

பிரதமர் மோடி - விஷால்
இதுபற்றி அப்போது விஷால் கூறும்போது, "நான் மட்டுமல்ல காசிக்கு யார் சென்று பார்த்தாலும் அங்கு கோவில்கள் புனரமைக்கப்பட்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் ஆச்சரியப்படுவார்கள். அப்படித்தான் என் உணர்வுகளை நான் பதிவிட்டேனே தவிர இதில் அரசியல் எதுவும் இல்லை. ஆன்மீக பயணத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது" என்றார்.

விஷால்
இப்போது மீண்டும் அவர் பா.ஜனதாவில் இணையப் போவதாக தகவல் பரவி வருகிறது. பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி திண்டுக்கல் வருகிறார். அப்போது மோடி முன்னிலையில் பா.ஜனதாவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை விஷால் தரப்பில் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன் -1'.
- 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன்
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் இயக்குனர் மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பொன்னியின் செல்வன்
இதில் இயக்குனர் மணிரத்னம் பேசியதாவது, அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அதனால் முதலில் வணங்கிக் கொள்கிறேன். அமரர் கல்கிக்குத் தான் முதல் நன்றி. 'பொன்னியின் செல்வன்' நாவலைப் படித்த வாசகர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு ஆசை மற்றும் கனவு இருக்கும். அதனைத் திரைப்படமாகக் கொண்டு வருவது என்பது ஒரு பேராசை. அந்தப் பேராசையை அடைந்துவிட்டேன். இதனை அனுமதிச்சு அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி.

பொன்னியின் செல்வன்
சுபாஷ்கரன் சார் கிட்ட நான் 'பொன்னியின் செல்வன்' பண்ணனும்னு சொன்னேன். உடனே இரண்டு நிமிடத்தில் ஓகே சொல்லிவிட்டார். இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல் செயல்பட்டோம். அவர்கள் இல்லை என்றால் நிச்சயமாக இதை உருவாக்கி இருக்க முடியாது. முக்கியமாகக் கொரோனா காலகட்டத்தில் யாரும் உடல் எடையை ஏத்தாமல் இருந்ததற்கும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் மாறியதற்கும் நன்றி.

மணிரத்னம்
இப்படத்தில் உதவி இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என நிறையப் பேர் பணியாற்றினோம். அவர்களைப் பார்க்கும்போது பயமாக இருக்கும். இவ்வளவு பேர் நம்மை நம்பி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் வேலை வாங்குவது ஒரு பெரிய பொறுப்பு எனத்தோன்றும். இது எப்படி நடக்கும் எனத் தெரியாது.

பொன்னியின் செல்வன்
ஆனால் அடுத்த வேலைக்குப் செல்லும் போது இதெல்லாம் மறந்திடும். அவர்கள் எல்லோரும் நம் கண்களுக்கு முன்னால் தெரிய மாட்டார்கள் பின்னாடி தான் வேலை செய்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு மிகப்பெரியதாகக் கருதுகிறேன். என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.

விக்ரம்
நடிகர் விக்ரம் பேசும் போது, "பல ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தியேட்டருக்குப் படம் பார்க்க வர ஆரம்பித்திருக்கிறார்கள். இது பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏற்படுத்திய மாற்றம். வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் என்று அனைவரும் வந்து படம் பார்த்தார்கள்" என்றார்.
- தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு.
- இவர் தற்போது ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது சுராஜ் இயக்கி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். மேலும், சந்திரமுகி -2, மாமன்னன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

வடிவேலு
இந்நிலையில், நடிகர் வடிவேலு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, "ஜி.வி.பிரகாஷ் அடுத்து 'தில்லுக்கு துட்டு' பட இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் வடிவேலுவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- விஜய் தற்போது நடித்து வரும் படம் ‘வாரிசு’.
- இந்த படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

வாரிசு
சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, 'ரஞ்சிதமே' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- 'மிரள்’ திரைப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.
- இந்த படம் வரும் நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "மிரள்". இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

மிரள்
இவர்களுடன் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு பிரசாந்த் எஸ்.என். இசையமைக்கிறார்.

மிரள்
ஸ்லாஷர் திரில்லராக உருவாகியுள்ள "மிரள்" திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தகக்து.
- ’வாரிசு’ திரைப்படம் 2023-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ இன்று வெளியாகிறது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

வாரிசு
இதைத்தொடர்ந்து சமீபத்தில் 'ரஞ்சிதமே' பாடல் புரோமோ வெளியாகி கவனம் ஈர்த்தது.. இந்நிலையில், இசையமைப்பாளர் தமனின் பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், இன்று தான் எனக்கு தீபாவளி !! பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன் !!" என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் - தமன்
இன்று மாலை 5.30 மணிக்கு 'வாரிசு' படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' வெளியாகவுள்ள நிலையில் தமனின் இந்த பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
இன்று தான் எனக்கு தீபாவளி !! பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன் !! 🔥
— thaman S (@MusicThaman) November 4, 2022
With Anna @actorvijay 🖤#Ranjithame 🎧♥️💃#VarisufirstSingle 🔊 pic.twitter.com/ne2v2tFSXM
- பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் ‘ஓ பாரி’ என்ற பாடலை வெளியிட்டிருந்தார்.
- இந்த பாடலை 20 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் 'ஓ பாரி' என்ற பாடலை இவரே இசையமைத்து பாடி சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இப்பாடலை யூ-டியூபில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத்
இந்நிலையில், இந்து மத உணர்வை புண்படுத்திவிட்டதாக நடிகை கராத்தே கல்யாணி ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பிகினி உடையில் பெண்கள் பாடும்போது பாடலில் 'ராமா ராமா ஹரே ... கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே...' என வரிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இது இந்து மத மக்களின் உணர்வை புண்படுத்துவதாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத்
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேவி ஸ்ரீ பிரசாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு வீடியோவில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர்.
- தங்களிடம் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் புகார்.
தேச ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ' என்கிற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதுவரை தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடைபயணத்தை நிறைவு செய்துள்ள ராகுல் காந்தி தற்போது தெலங்கானாவில் தனது நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே ராகுல் காந்தி உள்பட மூன்று பேர் மீது காப்புரிமை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெங்களூருவை சேர்ந்த எம்ஆர்.டி மியூசிக் என்கிற தனியார் நிறுவனம் தான் இந்த புகாரை கொடுத்துள்ளது.
ராகுல் காந்தி நடைபயணம் செல்லும் வீடியோக்களை காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு வீடியோவில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர்.
அது தங்களிடம் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் ராகுல் காந்தி உள்பட மூவர் மீது இந்த காப்புரிமை மீறல் புகாரை கொடுத்துள்ளது.
நிறைய தொகை கொடுத்து கே.ஜி.எப் 2 படத்தின் பாடல் உரிமையை தாங்கள் வாங்கி உள்ளதாகவும், அதனை தங்களது அனுமதி இன்றி காங்கிரஸ் கட்சியினர் தங்களது வீடியோவில் பயன்படுத்தி உள்ளதால் நான்கு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- இந்த படம் அடுத்த ஆண்டு 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

துணிவு
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

துணிவு படக்குழு
இந்நிலையில், 'துணிவு' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெறும் 'சில்லா சில்லா' என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இதனை ஜிப்ரான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு அனிருத் பாடிய 'ஆலுமா டோலுமா' பாடல் பெரும் வரவேற்பை பெற்றததையடுத்து இந்த பாடலும் மக்கள் மத்தியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'துணிவு' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#ChillaChilla recorded our Rockstar @anirudhofficial 🫶🏼 in the lyrics of @VaisaghOfficial
— Ghibran (@GhibranOfficial) November 4, 2022
Hashtag 🙌🏻 👉🏼 #ThunivuUpdate #Ajithkumar #HVinoth #NoGutsNoGlory @BoneyKapoor @ZeeStudios_ @BayViewProjOffl @SureshChandraa #NiravShah #Milan @SupremeSundar_ @editorvijay #Kalyan pic.twitter.com/lgwsZ9rpwp






