என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘ஆதிபுருஷ்’
- இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.

ஆதிபுருஷ்
மேலும், கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். டி சீரிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

ஆதிபுருஷ்
டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் வீடியோ கேம் போல் இருப்பதாகவும் ராவணனை தவறாக சித்தரித்து இருப்பதாகவும் பலர் கண்டித்தனர். சமீபத்தில், இந்த படத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய காட்சிகளை சரி செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.

ஒம் ராவத் வெளியிட்ட அறிக்கை
இந்நிலையில், ஆதிபுருஷ் திரைப்படம் 2023-ஆம் ஆண்டு ஜுன் 16-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து இயக்குனர் ஓம் ராவத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பார்வையாளர்களுக்கு காட்சிபூர்வமான முழு அனுபவம் தருவதற்கு எங்கள் படக்குழுவிற்கு கூடுதல் அவகாசம் தரவேண்டியிருக்கிறது. இந்தியா பெருமைப்படக் கூடிய படத்தை வழங்குவது எங்கள் கடமை. உங்களின் அன்பும் ஆதரவும் எங்களை தொடர்ந்து இயக்க வைக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
जय श्री राम…#Adipurush releases IN THEATRES on June 16, 2023.#Prabhas #SaifAliKhan @kritisanon @mesunnysingh #BhushanKumar #KrishanKumar @vfxwaala @rajeshnair06 #ShivChanana @manojmuntashir @TSeries @RETROPHILES1 @UV_Creations @Offladipurush pic.twitter.com/kXNnjlEsib
— Om Raut (@omraut) November 7, 2022
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.
- இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

கமல்ஹாசன்
இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தியன் 2
இந்நிலையில் தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் கமல் ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்டு இந்தியன் 2 படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- பிக்பாஸ் 6-வது சீசன் இன்றுடன் 29 நாட்களை எட்டியுள்ளது.
- இந்த நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசலும் நேற்றைய பிக்பாஸ் சீசனில் ஷெரினாவும் வெளியேற்றப்பட்டனர். இதில் தற்போது 17 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 29-வது நாட்களை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில், ஸ்கராட்ச் கார்டுக்கான நேரம் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் 1,2,3 என்று 10 இலக்க எண்கள் வரிசைபடுத்தப்பட்டுள்ளது. 10 வது எண்ணில் இருந்து பந்தை முதல் எண்ணை நோக்கி மட்டையால் தள்ள வேண்டும். கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் அந்த பந்தை செலுத்துவதே டாஸ்க். அச்சமயம் தனலட்சுமி அந்த டாஸ்கை சரியாக செய்து முடிக்க வீட்டில் உள்ள அனைவருக்கும் ஃப்ரீ அட்வைஸ் கொடுக்க தனலட்சுமிக்கு பிக்பாஸ் உத்தரவிடுகிறார். அதன்படி அவரும் விக்ரமன், ராம், சிவின், அசீம் ஆகியோருக்கு அட்வைஸ் கொடுக்கிறார். இதனுடன் அந்த புரோமோ முடிவடைகிறது. இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹா நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பாபி சிம்ஹா கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
பீசா, சூது கவ்வும், நேரம், ஜிகிர்தண்டா, இறைவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் பாபி சிம்ஹா. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகிர்தண்டா' திரைப்படத்தில் அசால்ட் சேதுவாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருதே கிடைத்தது.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும், 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை பாபி சிம்ஹா இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
- இவருக்கு திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி இன்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கமல் - மு.க. ஸ்டாலின்
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, தீராக் கலை தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான அன்புத்தோழர் கமல் ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலைத்தாய் பெற்றெடுத்த வருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம் என்று பதிவிட்டுள்ளார்.
- டுவிட்டர் செயலி கூடுதல் அம்சங்களுடன் 'டுவிட்டர் புளூ' என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
- ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் 'டுவிட்டர் புளூ' வசதி அளிக்கப்பட வேண்டும் என்று கங்கனா குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே, டுவிட்டர் செயலி கூடுதல் அம்சங்களுடன் 'டுவிட்டர் புளூ' என்ற பெயரில் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. மாதம் 8 டாலர்கள் கட்டணத்துடன் 'டுவிட்டர் புளூ' வசதி பயனாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. சிறப்பு அம்சங்களை கொண்ட 'டுவிட்டர் புளூ' வசதி தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.

கங்கனா ரணாவத்
இந்தியாவில் 'டுவிட்டர் புளூ' வசதி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என இந்திய பயனாளர்கள் டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க்கை டேக் செய்து டுவிட்டரில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், 'ஒரு மாதத்திற்குள் இந்தியாவில் டுவிட்டர் புளூ வசதி அறிமுகமாகும் என தெரிவித்தார். விளம்பரம் இல்லாத கட்டுரைகள், டுவிட்டர் செயலியின் நிறம், 'தீம்களை' மாற்றும் வசதி, டுவிட் செய்யப்படும்போது சிறிது கால அவகாசம் எடுத்து பயனாளர்கள் பகிரும் கருத்தை உடனடியாக தடுத்து நிறுத்தும் வசதி, நீண்ட மற்றும் அதிக தரம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதிகளையும் 'டுவிட்டர் புளூ'வின் சிறப்பு அம்சங்களாக உள்ளன.

கங்கனா ரணாவத் பதிவு
இந்நிலையில், எலான் மஸ்க்கின் இந்த முடிவை நடிகை கங்கனா ரணாவத் ஆதரவளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ஆதார் அட்டை வைத்திருக்கும் எல்லோருக்கும் 'டுவிட்டர் புளூ' -வசதி அளிக்கப்பட வேண்டும். இப்போது இருக்கும் சிறந்த சமூக ஊடக தளமாக டுவிட்டர் திகழ்கிறது. இந்த உலகில் எதுவும் இலவசம் இல்லை. ஆகவே டுவிட்டர் கட்டணம் வசூலிப்பதில் தவறில்லை என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம், டுவிட்டர் விதிகளை தொடர்ந்து மீறியதற்காக கங்கனாவின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார்.
- இப்படத்தில் இடம்பெற்ற எல்லாம் அவளை மறக்கத்தான் என்ற வசனம் அனைவரையும் கவர்ந்தது.
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.

பொன்னியின் செல்வன் - விக்ரம்
பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரம் படத்தின் மிக சரியான தேர்வு என்றும் தனது திறமையான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் பலரும் அவர்களின் விமர்சனங்களை தெரிவித்தனர். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் எல்லாம் அவளை மறக்கத்தான் என்று விக்ரம் பேசும் வசனத்தை ரசிகர்கள் பல மீம் டெம்ப்ளேட்டாக மாற்றி இணையத்தில் வைரலாக்கி வந்தனர். அந்த அளவிற்கு அந்த வசனம் அனைவரையும் கவர்ந்தது.

பொன்னியின் செல்வன் - விக்ரம்
இந்நிலையில் நடிகர் விக்ரம், மழலை குழந்தை பொன்னியின் செல்வன் படத்தில் வரும் எல்லாம் அவளை மறக்கத்தான் என்ற வசனத்தை பேசும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மழலை ஆதித்த கரிகாலன்!! பின்றியே'பா!! என்று பதிவிட்டுள்ளார். இவர் பகிர்ந்த இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
- வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் வாத்தி.
- "வாத்தி" திரைப்படத்தின் முதல் பாடல் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வாத்தி
இந்நிலையில், நடிகர் தனுஷ் எழுதிய "வாத்தி" திரைப்படத்தின் முதல் பாடல் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
'வாத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரஜினியை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமல் பக்கம் திரும்பிய மணிரத்னம்.
- மூன்று நிறுவனங்கள் தயாரிக்கும் கமல்ஹாசனின் 234ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.500 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதையடுத்து அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் சார்பில் ரஜினி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை மணிரத்னம் இயக்குவார் என தகவல்கள் வெளியாகின. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிக ஆவலுடன் அந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் கமல்ஹாசன் நடிப்பது உறுதியாகி உள்ளது.
இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்து வீடியோ ராஜ்கமல் தயாரிப்பு நிறுவன டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. பிரம்மாண்டமாக தயாராகும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.
கடந்த 1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த வெளியான நாயகன் திரைப்படம் இந்திய அளவில் அதிக கவனம் பெற்றது. இன்றும் மிகச் சிறந்த இந்திய படங்களில் பட்டியலில் அந்த படத்திற்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -1’.
- 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன்
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் இயக்குனர் மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பொன்னியின் செல்வன்
இதில் நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது, ''நல்ல படைப்பை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்று பெரும் வெற்றியை பதிவு செய்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி. தமிழ் ஊடகங்கள் மட்டுமில்லாமல், இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாமல் சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் பொன்னியின் செல்வன் படைப்பை கொண்டாடுகிறார்கள். இன்று உலகம் டிஜிட்டல் மயமான பிறகு அனைத்தும் எளிதாக இருக்கிறது. நட்சத்திரங்களைப் பற்றி ஊடகங்கள் சொல்லும் விசயங்கள் எங்களை விரைவாகவும், எளிதாகவும் வந்தடைகிறது.

பொன்னியின் செல்வன்
உலகம் முழுவதும் அனைவரும் இந்த படைப்பை விமர்சனம் செய்திருக்கிறார்கள், வாழ்த்துக்கள். இவை அனைத்திற்கும் மூல காரணம் மணிசார் தான். அவர் நாற்பது வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஒப்பற்ற படைப்பை வழங்கி கலை சேவை செய்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று துல்லியமாக தெரியவில்லை. அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. மணி சார் மற்றும் சுபாஸ்கரன் சார் ஆகிய இருவருக்கும் மகிழ்ச்சி கலந்த வெற்றியைக் கடந்த வாழ்த்துக்கள்.

பொன்னியின் செல்வன்
இந்த தருணத்தில் நான் ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இப்படி ஒரு பிரம்மாண்டமான வெற்றியை அளித்துவிட்டு, இயக்குனர் மணிரத்னம் அமைதியே உருவமாக அமர்ந்திருக்கிறார். இவரை நாம் கொண்டாட வேண்டும். அவரின் கண் முன்னால், அவரை வைத்துக் கொண்டு அனைவரும் பேச வேண்டும். அவர் தமிழ் சினிமாவில் பொக்கிஷம். அவரை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும்" என்றார்.
- ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் தம்பதிக்கு காலையில் குழந்தை பிறந்துள்ளதையடுத்து பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- இதுகுறித்து ஆலியா பட் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

சமீபத்தில் ஆலியா பட் கர்ப்பமாகி, பின்னர் மருத்துவமனையில் அவர் பரிசோதனை செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஆலியா பட்டுடன் அவரது கணவர் ரன்பீர் கபூர் உடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. அச்சமயம் திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாக இருந்ததாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

இன்று காலை பிரசவவலி ஏற்பட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆலியா பட்டுக்கு பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ஆலியா பட் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இது எங்களுடைய வாழ்வில் கிடைத்த நற்செய்தி.. இதோ எங்களுடைய குழந்தை.. என்ன ஒரு மாயாவி அவள்.. நாங்கள் சந்தோஷத்தில் திளைக்கிறோம்- ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் அன்பான பெற்றோர். அன்புடன் ஆலியா மற்றும் ரன்பீர் என்று பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன் -1'.
- 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது.
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

திரிஷா
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் இயக்குனர் மணிரத்னம், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகை திரிஷா கலந்துக் கொள்ளாதது பல கேள்வியை எழுப்பியது.

காலில் காயம் ஏற்பட்ட திரிஷா
இந்நிலையில் திரிஷா இந்த வெற்றி விழாவில் கலந்துக் கொள்ளாததற்கு காரணம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திரிஷாவுக்கு கால் முறிவுஏற்பட்டதன் காரணமாகவே பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிவிழாவுக்கு வராததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்ற திரிஷா அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவர் பாதியிலேயே நாடு திரும்பியதாகவும் கூறப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில், திரிஷாவும் தனது வலைத்தளப் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். திரிஷாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட காரணமாகவே அவர் இவ்விழாவில் கலந்துக் கொள்ளாததற்கு காரணம் என்று உறுதியாகியுள்ளது.






